அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது ஆறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக "ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்" என்றது.
மனைவி கேட்டாள், "இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்."
கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது.

இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், "என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்."
அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.

படித்து கோபப்படாத ஆண்கள்
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.