Wednesday, March 31, 2010

You Know...When Your MotorCycle Tyre Change?

ருசக்கர வாகனத்தின் டயர் எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா .
நாம் இருசக்கர வாகனம் அடிக்கடி பஞ்சர் ஆகும் போதும்,அல்லது டயர் முற்றிலும் தேய்ந்த பிறகு மாற்றுவோம்.ஆனால் எதற்கும் ஒரு முறை அதாவது இப்போதுதான் மாற்றவேண்டும் என ஒரு வரைமுறை உண்டல்லவா அதைதான் இந்த பதிவில் எழுத உள்ளேன் .
நானும் இருசக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனியில்தான் பன்னிரண்டு வருடங்களாக பணிபுரிகிறேன் .ஆனால் இதுவரை தெரியாது .தற்சமயம் கம்பெனி மூலம் நடந்த ஒரு பயிற்சி வகுப்பில் சொல்லிதந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


முதலில் உங்கள் இருசக்கர வாகனத்தின் டயரின் இடபக்கத்தின் ஓரங்களில் ஆங்காங்கே அம்புகுறியிடுகள் தென்படும் .படத்தில் நம்பர்(1) ஒன்றை நோக்கவும் .அதற்க்கு நேர் எதிர் டயரின் நடுவில் ஒரு சின்ன குழி மாதிரி டயரை சுற்றி இருக்கும்.அதில் அம்புகுறியிடு நேர் எதிர் உள்ள இடத்தில் மூன்று லைன் மாதிரி டயரில் தெரியும் .டயர் தேய்ந்து அந்த லைன் அளவுக்கு மட்டமாக தேய்ந்த பின்தான் டயரை  மாற்றவேண்டும்.இது கம்பெனி ஸ்டாண்டர்ட் சிம்பல் ஆகும் .இது டயருக்கு டயர் வித்தியாசப்படும் .ஆனால் இது மாதிரி அடையளாம் கண்டிப்பாக இருக்கும்  .கீழே உள்ள  படங்களை பார்க்கவும் .உங்களுக்கே புரியும் .

சரியான நேரத்தில் டயரை மாற்றினால் மழைகாலங்களில் டயர் ஸ்லிப் ஆகி விபத்து ஆவதில் இருந்து தவிர்க்கலாம் .வண்டியின் செயல்  திறனும் கூடும் .


அதேமாதிரி காருக்கும் எப்படி என வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும். 
http://www.videojug.com/film/how-to-check-your-cars-tyre-wear

ரசிக்க ....

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.