ராம்லால் அந்த குதிரையை வாங்கி வந்த இரண்டு நாட்களுக்குள் அது இறந்து விட்டது .அப்புறம்தான் தெரிந்தது பண்ணையார் நோய்வாய்ப்பட்ட குதிரையை தன் தலையில் கட்டிவிட்டார் என்று .
பண்ணையாரோ எனக்கு எதுவும் தெரியாது "போ" என விரட்டிவிட்டார் .
மிகவும் கவலையுடன் அந்த ஊர் புத்திசாலி முதியவரிடம் தன் கவலையை தெரிவித்தார் .அவரோ ராம்லால் இந்த உலகத்தில் மோசடி பேர்வழிகள் அதிகம். நீயும் அதே வழிக்கு செல்லமால் நான் சொல்கிறபடி செய் உன் பணம் திரும்பக்கிடைக்கும்.
அதன் படி இறந்த குதிரையை மறைத்து வைத்து பக்கத்து ஊரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .
" அழகான 50,000 ரூபாய் மதிப்புள்ள குதிரை உங்களுக்காக லாட்டரி மூலம் வெறும் 100 ரூபாய் ,குலுக்கல் முறையில் ஒருவருக்கு வழங்க படும்,குதிரையை பிடிக்க வில்லை என்றால் பணம் திரும்பதரப்படும். குலுக்கலில் தேர்ந்தெடுக்க பட்டவர் குதிரையை எனது ஊரில் வீட்டில் வந்து பெற்று கொள்ளலாம். "
உடனே லாட்டரி லட்சம் ரூபாய்க்கு விற்று தீர்ந்தது.குலுக்கல் முறையில் உடனே ஒருவரை தேர்வு செய்து தன்னுடன் ஊருக்கு அழைத்து சென்றார் ராம்லால் .
வீட்டில் குதிரையை காட்ட அது இறந்து இருந்தது .வந்தவரோ என்ன இது இறந்த குதிரையை தருகிறேர்கள் என்க,ராம்லாலோ நான் லாட்டரி விற்க்க வரும்போது நல்லாத்தான் இருந்தது என்றார் .அதெல்லாம் முடியாது நீங்கள் ஏமாற்றுகிறேர்கள் என குதித்தார். நான்தான் முதலிலேயே சொன்னேன் அல்லவா ,உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் உங்கள் பணம் உங்களுக்கு என்று ,இதோ உங்கள் பணம் 100 ரூபாய் சென்று வாருங்கள் என ராம்லால் அனுப்பிவிட்டார் .ராம்லால் அந்த முதியவருக்கு நன்றி சொல்லி தனது பணத்தில் ஒரு பங்கையும் அவருக்கு அளித்தார் .
இந்த காலத்தில இப்படிதான் லாட்டரி தொழில் நடைபெறுகிறது .பார்த்தா சொச்ச ரூபாதான் ஆனா வரவு எண்ண இயலாதது .
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.