Monday, October 18, 2010

கண்டதற்கும் கடவுளை குறை கூறாதீர்கள்

சிலர் எந்த கஷ்டம் நஷ்டம் வந்தாலும் கடவுளை குறை கூறுவர்.இப்படிதான் ஒருவர் ஆண்டவா எனக்கு ஏன் இந்த கஷ்டம் .உன்னை நினைக்காத நாளில்லை .செய்யாத பூஜையில்லை.இருந்தாலும் கஷ்டப்படும் நாளில் நீங்க என் கூடா வரக் கூடாதா ,என மனமுருக இறைவனை வேண்ட இறைவனும் சம்மதித்தார் .பக்தா இனி நீ செல்லுமிடமெல்லாம் நானும் வருவேன் .
கஷ்டமோ நஷ்டமோ உன்னுடன் வருவேன் .நீ செல்லும் போது உன்பின்னால் நான் வருவதற்கு அடையாளமாக இரு கால் தடங்கள் தெரியும் என்றார் .பக்தன் மகிழ்ந்து போனான் .


பின் அவன் போகும் இடமெல்லாம் மகிழ்ச்சியும் வாழ்க்கையில் வெற்றியும் கிடைத்து வந்தது .அவ்வப்போது அவன் திரும்பி பார்த்து  நம் கால்தடத்தையும் கடவுள் கால்தடத்தையும்  சேர்த்து நான்கு கால் தடங்கள் பார்த்து சந்தோஷ பட்டு கொண்டான். 
திடிரென ஒரு நாள் கஷ்டம் வந்தது .என்னடா இது இறைவன் நம் கூட வரும் போதும் கஷ்டமா என்ன கொடுமை இறைவா என நினைத்தான் .இப்போது இறைவன் நம் கூட வருகிறாரா என திரும்பி பார்த்தான் .இரு கால் தடம்தான் தெரிந்தது .இறைவா சொன்னபடி இல்லாமால் மகிழ்ச்சியில் கூடவந்தாய் கஷ்டம் வரும்போது மறைந்து விட்டாயே இது தான் நீ எனக்களிக்கும் பலமா என புலம்பினான்   
உடனே கடவுள்  பக்தா அந்த இரு கால் தடங்கள் என்னுடையதுதான். மகிழ்ச்சியில் உன்பின்னால் வரும்போது நான்கு கால் தடம் தெரிந்தது .பெரிய  கஷ்டம் வந்தபோது நான் உன்னை என் முதுகில் சுமந்தேன் .அதனால் உன் கஷ்டம் பாதியாக குறைந்தது .உடனே கஷ்டத்தில் நான் உன்கூட வரவில்லை என முடிவு செய்துவிட்டாய் .கஷ்டம் என்பது இறைவனுக்கு கூட வரும். உன்னை நான் தாங்கியதால் உன் கஷ்டம் குறைந்தது என கூறி நிரந்தரமாக மறைந்து போனார் . 
 எனவே அன்பர்களே சிறு கஷ்டம் வந்தாலும் இறைவனை குறை கூறாதீர்கள்.அவர் நமது கஷ்டத்தை தான் ஏற்று சிறு பாதிப்பு மட்டும்தான் நமக்கு வருகிறது .நினைத்து பாருங்கள் நேரடியாக நம் மீது வந்தால் தாங்குமா இந்த மனித சமூகம்.
 இதை உணர்த்தும் படங்களை கீழே பாருங்கள்.

1 comment:

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.