Friday, October 22, 2010

பிரியாத உறவு எது?

பள்ளி படிக்கும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் இந்த சம்பவம் நடந்ததுண்டா .சில மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட மாணவனை பார்த்து டேய் என்னடா உடம்பு இப்படி சுடுது என்ன காய்ச்சலா என கூறுவார்கள்.அவனும் இல்லையே என கூறுவான்.நண்பர்கள் பேசி வைத்து ஒருவர் பின் ஒருவராக என்னடா ஆள் டல்லா இருக்கே உடம்பு சரியில்லையா என விசாரிப்பார்கள். அவனுக்கே சந்தேகம் வந்து ஒருமுறை தொட்டு பார்த்து கொள்வான். அதிலேயே அவனுக்கு பாதி உடம்பு டல்லாகி விடும் .அந்த சோர்வோடு வகுப்பறைக்குள் வந்தால் ஆசிரியரோ என்ன சோர்வா இருக்கே
உடம்பு ஏதும் சரியில்லையா என விசாரித்தால் அவ்வளவுதான்
அவனுக்கு உண்மையிலேயே காய்ச்சல் வந்திருக்கும் .

இந்த சம்பவம்  எதுக்குன்ன கீழுள்ள கதையை படியுங்கள் புரியும் .
ஒரு ஊரில் ஒரு இணை பிரியாத தம்பதி குடிவந்தாங்க .ஊரே இதை பார்த்து அசந்தாங்க.எப்படி குடும்பத்தில இப்படி சண்டை சச்சரவு இல்லமால் வாழமுடியுது  .உங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா என கேட்டார்கள்.
 அதுக்கு அவர்கள் விட்டு கொடுத்து வாழ்ந்தால் எதுக்கு மனகசப்பு வருது என்றார்கள் .
சில மாதம் சென்றது.அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கன் வந்தான் . .
அவனுக்கு இந்த விஷயம் காதுக்கு வர அட இது சாதாரண மேட்டர் .ஊரில் சில பேர் என்னடா இதை சாதாரணமாக இவன் இந்த விசயத்தை எடுத்து கொள்கிறான் .அவனோ நான் எத்தனை குடும்பத்தை இது மாதிரி பார்த்து பின் பிரித்துள்ளேன் .இது ஒரு சப்பை மேட்டர் என மறுபடியும் கூறினான் .சரி நீங்கள் நான் சொல்கிற மாதிரி அந்த தம்பதி இருவரிடமும் தனி தனியாக கூறுங்கள் .கணவனிடம்  கூறியது மனைவிக்கு தெரிய கூடாது என்றான் . 
அதன் படி ஊரார் ஒருவர் பின் ஒருவராக கணவனிடம் உன் மனைவி போன பிறவியில் கடல் உப்பாக பிறந்தவள் வேணுமுன்னா நீ மறைமுகமாக சோதித்து பார் என்றார்கள் .அவன் மனைவியிடம் உன் புருஷன் போன பிறவியில் நாயாக பிறந்தவன் என கூறினார்கள் .முதலில் அதை ஒரு பொருட்டாக இருவரும் எடுத்து கொள்ளாட்டாலும் அடி மனதில் ஒரு சந்தேகம் இருவருக்கும் இருந்து வந்தது எப்படி அறிவது என யோசித்தனர் .
பின் ஒரு நாள் இரவு படுத்திருக்கும் போது இருவர் மனதிலும் அதே எண்ணங்கள் ஓடியது .பின் இருவரும் துங்குவது போல் நடித்து கொண்டிருந்தனர்.கணவன் மெதுவாக எழுந்து மனைவியின் காலை நக்கினான் .உடனே மனைவி எழுந்து அட நாயே ,ஊரார் சொன்ன மாதிரி நீ போன பிறவியில் நாயாக பிறந்துள்ளாய்,அவனோ அடி நீ மட்டும் என்ன வாழுதாம் நீயும் போன பிறவியில் கடல் உப்பாக பிறந்தவள் என இருவருக்கும் சரமாரியான வாக்குவாதம் நடக்க பேச்சு பெரிசாகி ஊருக்கே கேட்கும் படி சண்டை வந்தது.
ஊரே இரவில் வேடிக்கை பார்த்தது .வழிப்போக்கனோ "நாராயண நாராயண" என கூறியபடி சென்றான் .  ஒற்றுமையாய் உள்ள தம்பதி இப்படி எப்படி சின்ன விசயத்திற்கு சண்டை இடுவார்கள் என நினைப்பிங்க.அதனால் இப்ப புரியுதா மேல சொன்ன பள்ளி சம்பவம் எதற்கு என்று .
நமக்கே தெரியாது இந்த சின்ன விசயத்திற்கா அவனிடம் சண்டையிட்டோம்.எவ்வளோவோ பெரிய காரணத்திற்கு கூட விட்டு கொடுத்திருப்போம்.எனவே நண்பர்களே பல பேர் சேர்ந்து நம்மளை முட்டாளாக்க பார்ப்பார்கள் ,நாம் தான் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்  

சும்மா தமாசுக்கு 

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.