மீண்டும் உங்களுக்காக ஒரு உஷார்.....எச்சரிக்கை பகுதி.
இதோ என் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறுகிறேன்.இதை படித்து உங்கள் வாழ்வில் இப்படி நடக்கமால் பார்த்து கொள்ளுங்கள்.
சம்பவம் ஓன்று
என் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல சிறிது தூரம் பேருந்தில் பயணித்து விட்டு தில்லி ரயில் நிலையம் செல்ல ஆட்டோ ரிக்சா பிடித்து சென்று கொண்டுஇருந்தார்.
ஊருக்கு செல்வதென்றால் உங்களுக்கே தெரியும் எத்தனை உருப்படிகள் தூக்கி செல்வார்கள் என்று.அத்தனை சாமான்களை வைத்து கொண்டு செல்கையில் தில்லி வாகனங்கள் அதிகம் செல்லும் பாதையில் ஒரு ஓரம் ஆட்டோவை நிறுத்தி இந்தியில் தம்பி சாலையில் டிராபிக் அதிகமா இருக்கு என்னால இறங்கி தண்ணீர் பிடித்து குடிக்க இயலாது,இந்தா இந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து வா என டிரைவர் கூற பையனும் ஊருக்கு போற அவசரத்தில் தண்ணீர் பிடிக்க இறங்கினான்.அப்புறம் என்ன ஆட்டோ டிரைவர் லக்கேஜ்ஜுடன் கம்பியை நீட்டிவிட்டார்.
சம்பவம் இரண்டு
சும்மா தமாசுக்கு

"பெண்ணென்றால் பேயும் இறங்கும்"
மாலைபொழுது சாய்ந்து இரவு நேரம் நெருங்கும் வேளையில் நண்பர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தார்.அப்பொழுது இரு அழகான கால்சென்டர் செல்லும் இளம்பெண்கள் கையை அசைத்து லிப்ட் கேட்க நம்ம சாரும் இழிந்து கொண்டு ஐயோ பாவம் வண்டி கிடைக்கமால் இளம்பெண்கள் அவதிபடுவதை பார்த்து சார் இருவரையும் பின்னால் ஏற்றி சென்றுள்ளார்.
இருளான பகுதி வந்ததும் இருவரும் வண்டியை நிறுத்த சொல்லி உள்ளார்கள்.நம்ம தலைவரும் வண்டியை நிறுத்த அந்த இருபெண்ணும் ஹிந்தியில் மரியாதையாக கையில் உள்ள பணம்,மொபைல் அனைத்தையும் கொடுத்து விடு,இல்லேன்னா கையை பிடிச்சு இழுத்தான் என கத்தி ஊரை கூட்டி விடுவேன் என மிரட்டி உள்ளனர்.தலைவர் அலறி ஐயோ பொண்ணு கத்தினால் ஏன் என்று கேட்கமால் கூட இந்த ஊரில் அடிப்பாங்களே என கையில் உள்ளதை கொடுத்து விட்டு பைக்கில் பறந்துவிட்டார்.அன்றிலிருந்து வழியில் யார் லிப்ட் கேட்டாலும் கொடுப்பதில்லை.
உஷார்.....எச்சரிக்கை பகுதி-தொடரும்....
சும்மா தமாசுக்கு
சரியா சொன்னீங்க நண்பரே நல்ல விழிப்புணர்வு தகவல்களை அதுவும் உங்கள் நண்பர்களுக்கு நடந்ததை சொல்லி எச்சரிக்கை செய்துள்ளீர்கள்
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆட்டோவில் ஏறும் போதே நம்பரை நோட் செய்து கொள்வது நல்லது.
ReplyDeleteஉபயோகமான பதிவு
@middleclassmadhavi
ReplyDeleteதில்லுமுல்லு படத்தில் ஒரு பாட்டில் நம்ம தலைவர் சொல்லுவாரு,உங்க வாட்ச் என்ன கம்பெனி என்று கேட்பார்.மாதவியும் கம்பெனி பெயரை சொல்லுவாள்.உடனே மணி எத்தனை என்பார்.மறுபடி மாதவி வாட்சை பார்க்க போக ரஜினி,...ம்...வாட்சை பார்க்கமா மணியை சொல்லுங்க என்பார்.மாதவி திணறுவார்.பார்த்தீங்களா இப்பதான் வாட்சை பார்த்து என்ன கம்பெனி சொன்னேங்க.ஆனா நேரத்தை பார்க்கலை என்பார்.இப்ப புரியுதா நம்ம ஒரு வேலையா போகும்போது அந்த அவசரத்தில் மற்றதை மறந்து விடுவோம்.ரொம்ப பிளேடு போட்டுட்டேனா.சாரிங்க.வாழ்க தமிழ்.
@மாணவன்
ReplyDeleteகுழந்தையிடம் பாப்பா தீயில கை வச்சிடாத சுடும் என்றால் கேட்காது,ஒரு டைம் உங்க மேற்பார்வையில் அது வைக்கும் போது எச்சரிக்காமால் சும்மா வைக்க விடுங்க,பின்ன ஜென்மத்துக்கும் அதில் கை வைக்காது.சூடு பட்ட பூனை திரும்ப பால் குடிக்குமா.அது போல் தான் நம்ம சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எளிதில் மனதில் பதிந்து விடும்.நன்றி நண்பரே.வாழ்க தமிழ்.
@மாணவன்
ReplyDelete@THOPPITHOPPI
@middleclassmadhavi
@sakthistudycentre-கருன்
@kumar
அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...