இந்தியாவின் வடக்கே உள்ள காசிக்கு (வாரணாசி) இணையாக தென் இந்தியாவில்,தமிழகத்தின் தென்பகுதியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பாண்டியமன்னன் பராக்கிரம பாண்டியனால் 1456-ம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டது .இக்கோவில் 554 அடி நீளமும் ,318 அடி அகலமும் கொண்டது .172 அடி உயர ராஜகோபுரத்துடன் இக்கோவில் கட்டப்பட்டது .
அதன் பின்னர் 1924-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் (இடி தாக்கியதால்) கோவிலின் ராஜகோபுரம் சிதையுண்டு இரண்டாக பிளந்து மொட்டை கோபுரமாக பல ஆண்டுகள் இருந்தன .
அதன் பின்னர் ஆன்மிக பெரியோர்கள் இக்கோபுரத்தை புதுப்பிக்க பல முறை முயற்சி செய்தனர்.
அதன் பயனாக "தினத்தந்தி" அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு ,அவரது சீரிய முயற்சியால் தென்காசி கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்க பட்டு 163 அடி உயர புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .
இக்கோவில் தூண்களில் உள்ள காளி உள்ளிட்ட சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு சிற்பகலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நெல்லையில் இருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.
அதன் பின்னர் 1924-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் (இடி தாக்கியதால்) கோவிலின் ராஜகோபுரம் சிதையுண்டு இரண்டாக பிளந்து மொட்டை கோபுரமாக பல ஆண்டுகள் இருந்தன .
அதன் பின்னர் ஆன்மிக பெரியோர்கள் இக்கோபுரத்தை புதுப்பிக்க பல முறை முயற்சி செய்தனர்.
இக்கோவில் தூண்களில் உள்ள காளி உள்ளிட்ட சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு சிற்பகலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நெல்லையில் இருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.