தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, January 8, 2011

கண்களின் பாதுகாப்பிற்கான மென்பொருள்

உங்கள் கண்களின் பாதுகாப்பிற்கான ( Eyes Relax )மென்பொருள் இது ஆகும்.இது ஒரு அருமையான மென்பொருள். நாம் கணினியில் மணிக்கணக்காக உட்கார்ந்து வேலைபார்ப்போம்.நேரம் போவதே தெரியாது .பாவம் நம் கண்கள் தான் என்ன பாவம் செய்தன.சிறிது இடைவெளி கூட விடமால் கொட்ட கொட்ட விழித்து வேலை செய்வோம். இதை தவிர்க்கவே இந்த மென்பொருள் ஒரு சிறந்த பணியை மேற்கொள்கிறது .அது என்னனென்ன பணிகள் என இனி பார்ப்போம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்   நீங்கள் கணினியில் பணிபுரியும் போது ஒரு குறிப்பிட்ட நீங்கள் கொடுத்த நேர இடைவெளியில் இடைவேளை ஏற்படுத்தி உங்கள் கண்களுக்கு சிறிது ரிலாக்ஸ் தருகிறது .அதாவது சிறிது நேர இடைவெளியில் கணினி தனது பணியை நிறுத்தி சில வினாடிகளில் விட்ட இடத்திலிருந்து பணியை தொடர்கிறது .
1 ) உங்களுக்கு தேவையான வொர்க் டைம் ,பிரேக் டைம் கொடுக்கவும்.
2 ) பின் கான்பிகர் செட்டிங் மீது கிளிக் செய்து உங்களுக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவும்


இதில் உங்களுக்கு வெறும் டயலாக் பாக்ஸில் இன்டர்வெல் தெரிய வேணுமா ,அல்லது கணினி திரை முழுதும் வண்ணங்களில் மாறி அல்லது திரையில் ஏதாவது படத்தை செட் செய்யவா,அல்லது உங்கள் படங்கள் ஸ்லைடு ஷோ ஆக இடைவெளி வேண்டுமா என தேர்வு செய்யவும்,முடிந்த வரை கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களை தேர்வு செய்தால் கண்கள் ரிலாக்ஸ் அடையும்.  
3 )  மேலும் நீங்கள் நீண்ட நேர இடைவெளியும் செட் செய்து கொள்ளலாம்.
மேலும் நம்பர்  ( 4,5 )- ல் உள்ள செட்டிங்கையும் பயன் படுத்தி பாருங்கள்.
6 ) பின் HIDE அழுத்தினால் அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்ளும்.நீங்கள் செட்டிங் செய்த நேரம் வரும் போது எச்சரிக்கை ஒலி ஏற்படுத்தி சிறப்பான பணியை புரியும்.அந்த ஒலியையும் நமக்கு தகுந்த இசை ஒலியை தேர்வு செய்து கொள்ளலாம்.பயன்படுத்தி உங்கள் கருத்தை கூறுங்கள்.நான் மனதுக்கு இதமான முருகன் படத்தை செட் செய்துள்ளேன்.பார்க்க படம்.

இன்டர்வெல் தேவை இல்லையெனில் உடனே கேன்சல் மீது கிளிக் செய்தால் உடனே பணியை தொடரலாம்.
இதன் தரவிறக்க முகவரி :- Click Me


சும்மா தமாசுக்கு சும்மா இன்டர்வெல் விட்டு என்ஜாய் பண்ணுங்க,இல்லன்னா இப்படிதான்.....
  

Tuesday, January 4, 2011

உஷார்.....எச்சரிக்கை பகுதி

மனிதனுக்கு தூக்கம் எந்தளவுக்கு முக்கியம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.அதில் முக்கிய பங்கு நாம் பயன்படுத்தும் தலையணையிலும் உள்ளது. தலையணை மந்திரம் கேள்வி பட்டிருப்போம்.தலையணை சரியில்லை எனில் மந்திரம் எப்படி சரியா இருக்கும்.அந்தளவுக்கு தலையணைக்கு ஒரு உயர்ந்த இடம் உள்ளது.அதை சரியானதாக தேர்வு செய்து தூங்கினால் அதுவே நமக்கு சிறந்த தூக்கத்தை கொடுக்கும்.இல்லன்னா அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.எனக்கு நடந்த அனுபவத்தை இப்போ கூறுகிறேன்.
       நான் எப்போதுமே தரம் குறைந்த பொருள்களை வாங்குவதில்லை.ஆனாலும் ஒரு முறை என்னை அறியாமால் தவறு நடந்து விட்டது. ஒருமுறை எனது அம்மா சொந்த ஊரிலிருந்து டெல்லிக்கு எனது வீட்டிற்க்கு வந்திருந்தார்கள்.இங்கு சில நாட்கள் தங்கிவிட்டு பின் ஊர் திரும்ப நேரம் வரும் போது பொருள்கள் வாங்க மார்க்கெட் சென்றோம்.
ட்ரெயினில் எடுத்து செல்ல தலையணை வாங்க வேண்டும் என அம்மா கூற நான் ரப்பரில் உள்ள தலையணை வாங்க சென்றேன்.அப்போது பிளாட்பாரம் கடையில் குறைந்த விலையில் தலையணை விற்று கொண்டிருந்தான்.  
 எனது அம்மா அதை வாங்கலாம் என சொன்னாங்க.சிறிதா பயணத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கு வாங்கு என கூறினார் . விலை குறைவாக உள்ளதால் தரமாக இருக்காது என நான் சொல்ல இரண்டு நாள் பயணம் தானே பரவாயில்லை கெட்டு போனால் தூர போட்டு கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள்.சரி என நானும் வாங்கி கொடுத்து விட்டேன்.அவர்களும் வாங்கி சென்று பயணத்திற்கு பின்னும் நன்றாக  உள்ளது என போன் செய்தார்கள்.
  ஒருவாரம் கூட சென்றிருக்காது .திடிரென ஒருநாள் போன் வந்தது.நீ சொன்னது சரிதான் அந்த தலையணை தரம் இல்லை.இன்று  படுத்திருக்கும் போது தலையணை உள்ளே ஏதோ குத்துவது போல் இருக்க அதை பிரித்து பார்த்த போது அதிர்ச்சியே வந்துவிட்டது என் அம்மாவுக்கு. அப்படி என்ன இருந்தது தெரியுமா? உள்ளே ரத்த கரையுள்ள காட்டன் பஞ்சுகளும்,ரத்த கரையுடைய ஊசியும் இருந்துள்ளன.அதை Recycle செய்து கூட பயன்படுத்தவில்லை .
இந்த ஈன பிறவி மனிதர்கள் காசுக்காக என்ன வேணும்னாலும்  செய்வாங்க என தெரிந்து கொண்டேன். எனவே நண்பர்களே காசு குறைவுதான் என தரமற்ற பொருள்களை வாங்காதீர்கள் .எதாவது ஒருவகையில் அது தரமற்றதாக இருக்கும். அதை விட அது உடல் நலனை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்         

Monday, January 3, 2011

எந்த காரியம் நடக்க ,எந்த கடவுளை வணங்கவேண்டும்?

1. விக்னங்கள் ,இடையூறுகள்  நீங்க  
விநாயகர்
2. செல்வம் சேர 
ஸ்ரீ மகாலட்சுமி ,ஸ்ரீ லட்சுமி ,நாராயணர் ,ஸ்ரீ வரலட்சுமி பூஜை
3. நோய் தீர 
ஸ்ரீ தன்வந்திரி ,தட்சிணாமூர்த்தி
4. வீடும் நிலமும் பெற 
செவ்வாய் பகவான் ,ஸ்ரீ சுப்ரமணியர்
5. ஆயுள் ஆரோக்கியம் பெற 
ருத்திரன்
6. மனவலிமை ,உடல் வலிமை பெற 
ராஜராஜேஸ்வரி,ஸ்ரீ ஆஞ்சநேயர்  
7. கல்வியில் சிறந்து விளங்க 
ஸ்ரீ சரஸ்வதி தேவி 
8. திருமணம் நடை பெற 
ஸ்ரீ காமாட்சி அம்மன் ,தூர்க்கை 
9. மாங்கல்யம் நிலைக்க 
மங்கள கௌரி
10.புத்திர பாக்கியம்  பெற
சந்தான லட்சுமி ,சந்தான கிருஷ்ணன்
11. தொழில் சிறந்து லாபம் பெற 
திருப்பதி வெங்கடாசலபதி 
12. புதிய தொழில் துவங்க 
ஸ்ரீ கஜ லட்சுமி 
13. விவசாயம் தழைக்க 
ஸ்ரீ தான்யா லட்சுமி 
14.  சாப்பாட்டு  கஷ்டம் நீங்க 
ஸ்ரீ அன்னபூரணி  
15. வழக்குகளில் வெற்றி பெற 
விநாயகர் 
16. சனி தோஷம் நீங்க 
ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் 
17. பகைவர் தொல்லை நீங்க 
திருச்செந்தூர் முருகன் ,சஷ்டி விரதம் 
18. பில்லி ,சூனியம் ,செய்வினை அகல 
ஸ்ரீ வீரமாகாளி,சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மர்  
19. திருஷ்டி விலக 
முத்துமாரி 
20. அழியாச்செல்வம்,ஞானமும் ,சக்தியும் பெற 
சிவஸ்துதி  


மேலுள்ள எல்லாத்தையும்பெற மனைவியைவணங்குங்கள்.இல்லையென்றால் 

Saturday, January 1, 2011

சிந்திக்க சில படங்கள்

எல்லோருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .இந்த இனிய நாளில் சிந்திக்க நான் சில படங்களை அளித்துள்ளேன்.பார்க்க சிந்திக்க

படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும். 







இது தமாசல்ல