தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts

Monday, September 5, 2011

அரவிந்த் கேஜ்ரிவால் vs ராகுல் காந்தி

எனக்கு வந்த மெயில் நண்பர்கள் பார்வைக்கு 



Who is the leader of youth of INDIA .....................ARVIND KEJRIVAL:-

Mechanical Engineer -IIT Kharagpur
Job :-Tata Steel
Former IRS resigned from the Govt job(posted IT Commisioner's office)

Social Activist:-
Man behind (Right to Information Act).
LokPal bill

Awards Various Ashoka Fellow, Civic Engagement.
2005: 'Satyendra Dubey Memorial Award', IIT Kanpur for his campaign for bringing transparency in Government
2006: Ramon Magsaysay Award for Emergent Leadership.
2006: CNN-IBN, 'Indian of the Year' in Public Service
2009: Distinguished Alumnus Award, IIT Kharagpur for Emergent Leadership.
2010: Policy Change Agent of the Year, Economic Times Corporate Excellence Award along with Aruna Roy.
Fighting against corruption

.............He left his job in IRS to fight against corruption.

RAHUL GANDHI :-Education- failed to secure passing grades in National Economic Planning and Policy graduated by any how
job: Got ancestral political power and running through it
Award: he is making awards not getting it
Fight against Indians sentiments

For him Terror attacks are common thing...
we should not be worried of that.....let it happen(since all the Family members have z class security)

he will never talk about Govt. policies....and planning....since he
is not intelligent enough to grasp that.(claimed to be most eligible to be PM)

Won't talk about black money and corruption.

will never talk in Parliament.

No political vision and goals for nation .

Trained well to fool poor villagers with safed kurta ..nd khadhi(doing same in UP and other places.)


Achievements:-
Grandson OF Nehru,
Grandson of Indira Gandhi....
Son Of Rajiv gandhi....
FRom Gandhi Family.....
till now zero...


..............Claimed to be nxt PM of INDIA ..Future face of congress.

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே யார்?


30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !


இன்று இந்திய மக்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பி, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்கினார்? இந்த கேள்விகளுக்கு இதோ விடை:
விவேகானந்தரின் புத்தகத்தை படித்தார்: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கும் அன்னா ஹசாரே, ஒரு கட்டத்தில் தற்கொலை‌ செய்து கொள்ள முடிவு செய்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து, மனித பிறவிக்கு அர்த்தம் காண முடியாமல் இந்த முடிவை எடுத்தார். தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்று இரண்டு பக்க கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவர் டில்லி ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்ததும் அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மனித சமுதாயத்திற்கு சேவை புரியவே இந்த மனிதப் பிறவி என்பதை அவர் அ‌தன் மூலம் உணர்ந்து கொண்டார். அவருடைய வாழ்க்கையும் மாறியது.
ராணுவத்தில் பணியாற்றி விவசாயிகளுக்காக போராடியவர் : இளைஞராக இருந்தபோது இந்திய ராணுவத்தில் சேர்ந்த அன்னா ஹசாரே, 15 ஆண்டுகள் அதில் பணியாற்றி உள்ளார். 1978ல் விருப்ப ஓய்வு பெற்ற அவர், தமது 39வது வயதில் மகாராஷ்டராவில் உள்ள தமது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அங்கு விவசாயிகள் படும் பாட்டைக் கண்டு அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அங்கு அவர் துவக்கி மழைநீர் சேமிப்பு திட்டம், அந்த குக்கிராமத்தை ஒரு மாதிர கிராமமாக மாற்றியது. அவருடைய போராட்டங்கள் காரணமாக அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைந்தது; மின்சாரம் வந்தது; விவசாயிகளுக்கான நலத்திட்ட்ங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கிராம மக்கள் அவரைப் போற்றத் தொடங்கினர்.
பல அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய பெருமை உண்டு : ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் இங்கேதான் துவங்கியது. கிராமப்புற வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழலை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். இதற்காக ஒரு இயக்கத்தையும் துவக்கினார். அவருடைய பிரதான ஆயுதமாக உண்ணாவிரதமே இருந்தது; அரசியல்வாதிகளைக் குறி வைத்தே போராட்டங்களை நடத்தினார்.
மகாராஷ்டிர அரசியல்வாதிகளான சரத் பவார் மற்றும் பால் தாக்கரே, இவருடைய போராட்டங்களைக் குறை கூறி வந்தனர். ஆனால் அன்னா ஹசாரேயின் ஆயுதம் வலுவானதாக இருந்ததால் 1995- 96ல் அப்போதைய சிவசேனா- பா.ஜ., அரசு, 2 ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிதாயிற்று; 2003ம் ஆண்டு, காங்கிரஸ்- தேசியவாத அரசு, 4 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டியதாயிற்று.
இவ்வாறு மாநில அளவில் ஊழல் எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற அன்னா ஹசாரே தற்போது தேசிய அளவில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைத் துவக்கி மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார்.



Saturday, August 13, 2011

கறுப்பு பணம் பதுக்கியோர்







This detail refer from Andhrabuzz.com .Thanks to Andhrabuzz.com. 
Andhrabuzz.com is still unsure of these details. We still can’t say whether it’s fake or genuine. But, will come to know about it soon.

Monday, March 7, 2011

உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர்ந்து எழுத முடியவில்லை .மன்னிக்கவும்.  
 
பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.

Monday, February 7, 2011

புதிய யூனிட் கன்வெர்சன் ஸ்கேல்

மன்னிக்கவும்.இணைய இணைப்பு சிறிது நாள் சரியாக வேலை செய்யாததால் பதிவிட முடிய வில்லை.சரியான உடன்  மீண்டும் தொடர்ந்து பதிவிடுவேன்.    
= 1கோடி 

100 கோடி 
= ஒரு எடியூரப்பா 

100 எடியூரப்பா 
= ஒரு ரெட்டி 

100 ரெட்டி 
= ஒரு நீராரடியா

100 நீராரடியா
=  ஒரு கல்மாடி

100 கல்மாடி
= ஒரு ராஜா 

100 ராஜா 
= ஒரு சரத்பவார் 

100 சரத்பவார் 

ஒரு சோனியா மேடம் 

சும்மா தமாசுக்கு  

Tuesday, January 25, 2011

உஷார்.....எச்சரிக்கை பகுதி -2

மீண்டும் உங்களுக்காக ஒரு உஷார்.....எச்சரிக்கை பகுதி.
இதோ என் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறுகிறேன்.இதை படித்து உங்கள் வாழ்வில் இப்படி நடக்கமால் பார்த்து கொள்ளுங்கள்.   
சம்பவம் ஓன்று 
என் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல சிறிது தூரம் பேருந்தில் பயணித்து விட்டு தில்லி ரயில் நிலையம் செல்ல ஆட்டோ ரிக்சா பிடித்து சென்று கொண்டுஇருந்தார்.
ஊருக்கு செல்வதென்றால் உங்களுக்கே தெரியும் எத்தனை உருப்படிகள் தூக்கி செல்வார்கள் என்று.அத்தனை சாமான்களை வைத்து கொண்டு செல்கையில் தில்லி வாகனங்கள் அதிகம் செல்லும் பாதையில் ஒரு ஓரம் ஆட்டோவை நிறுத்தி இந்தியில் தம்பி சாலையில் டிராபிக் அதிகமா இருக்கு என்னால இறங்கி தண்ணீர் பிடித்து குடிக்க இயலாது,இந்தா இந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து வா என டிரைவர்  கூற பையனும் ஊருக்கு போற அவசரத்தில் தண்ணீர் பிடிக்க இறங்கினான்.அப்புறம் என்ன ஆட்டோ டிரைவர் லக்கேஜ்ஜுடன் கம்பியை நீட்டிவிட்டார். 
சம்பவம் இரண்டு   
"பெண்ணென்றால் பேயும் இறங்கும்"
மாலைபொழுது சாய்ந்து இரவு நேரம் நெருங்கும் வேளையில் நண்பர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தார்.அப்பொழுது இரு அழகான கால்சென்டர் செல்லும் இளம்பெண்கள் கையை அசைத்து லிப்ட் கேட்க நம்ம சாரும் இழிந்து கொண்டு ஐயோ பாவம் வண்டி கிடைக்கமால் இளம்பெண்கள் அவதிபடுவதை பார்த்து சார் இருவரையும் பின்னால் ஏற்றி சென்றுள்ளார்.
இருளான பகுதி வந்ததும் இருவரும் வண்டியை நிறுத்த சொல்லி உள்ளார்கள்.நம்ம தலைவரும் வண்டியை நிறுத்த அந்த இருபெண்ணும் ஹிந்தியில் மரியாதையாக கையில் உள்ள பணம்,மொபைல் அனைத்தையும் கொடுத்து விடு,இல்லேன்னா கையை பிடிச்சு இழுத்தான் என கத்தி ஊரை கூட்டி விடுவேன் என மிரட்டி உள்ளனர்.தலைவர் அலறி ஐயோ பொண்ணு கத்தினால் ஏன் என்று கேட்கமால் கூட இந்த ஊரில் அடிப்பாங்களே என கையில் உள்ளதை கொடுத்து விட்டு பைக்கில் பறந்து
விட்டார்.அன்றிலிருந்து வழியில் யார் லிப்ட் கேட்டாலும் கொடுப்பதில்லை.          
 உஷார்.....எச்சரிக்கை பகுதி-தொடரும்.... 

சும்மா தமாசுக்கு 

Wednesday, November 17, 2010

வேலை ...வேலை ...வேலை...

இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஹோண்டா தனது இரண்டாவது தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது .அதற்கு I .T. I  படித்த இளம் மாணவர்களை தேர்வு செய்ய உள்ளது .விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் .
தகுதிகள் :-
1) Mark 60% மிகமால் இருக்கவேண்டும் .
2) வயது 18-21 க்குள்  இருக்க வேண்டும்.
3) கடைசி தேதி:- 25/11/2010.
4) அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி 
          trainee.for2@honda2wheelersindia.com 
என்னை பொறுத்த வரை ஐ .டி.ஐ படித்த நல்ல வேலையில்லாத வயது ஓரளவுக்கு கூடியவரும் விண்ணப்பித்து பாருங்கள் .
கல்லைவிட்டு பாருங்கள் விழுந்தால் மாங்காய்,இல்லை கல்லு .
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"  
( இந்த செய்தியை ஹோண்டா நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் எனது நண்பர் குறுந்தகவல் மூலம் கூறினார் )

Thursday, October 7, 2010

நம்மால் முடியும் -காமன் வெல்த்

எனக்கு வந்த மெயிலில் இருந்து 

Sunday, August 29, 2010

கார் வாங்கலயோ கார் !!!

            இன்று சாதாரண வருமானம் வாங்கும் குடும்பங்களில் கூட குறைந்தது ஒரு இருசக்கர வாகனமாவது உள்ளது .நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும் கார் வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் .இதற்க்கு பெரும்காரணம் வங்கிகள் மாத தவணைகளில் வாகனங்களை வழங்குவதுதான் காரணம் .மாத தவணைகளை  கட்டமுடியாமல் வாகனங்களை பறிமுதல் செய்யும் கொடுமைகளும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது .
           அதுவும் இன்று மார்க்கெட்டில் வலம்வரும் நானோ வாகனமும் அனைவரும் கார் வாங்க ஒரு காரணம்.இந்த கார் வந்த பிறகுதான் மற்ற வாகன தயாரிப்பு கம்பெனிகளும் தன்னோட காரின் விலையையும் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளன.அதற்க்கு ரத்தன் டாடாவுக்கு ஒரு  நன்றியை சொல்லிகொள்ளலாம் .தற்போது பஜாஜ் ,மாருதி ,நிஸ்ஸான் என பல  கம்பெனிகளும் போட்டி போட்டுகொண்டு பட்ஜெட்  காரை அறிவித்து வருகின்றன. 


           விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி செர்வோ பற்றி இப்போது பார்ப்போம்.
 Maruti Suzuki India Ltd is planning to launch a new Maruti Cervo in Indian road soon. The company will be expected to launch Maruti Cervo model in the month of June end 2010in India. Maruti Cervo is the latest small car recently initiated in Japan. The compact and sleek design of Maruti Cervo looks like TATA Nano and the Cervo price also compete with Nano car. Maruti Cervo Launch Date, Review, Photos and Indian Price detail is given below.

Maruti Cervo is another compact car which is all set to pass Alto and Wagon-R. Maruti is a leader for small car market but the launch of Tata Nano has heavily affected the sales of Maruti 800 in the cheapest category. Look wise, Maruti Cervo is even more attractive then TATA Nano. Maruti Cervo will be priced in the range of Rs 1.5 to 2 lacs and TATA Nano priced range is around 1.3 Lacs. It is a five door mini car that comes with 54bhp power in the front and 660cc patrol engine and 64Nm of torque. The engine of Maruti Cervo offers peppy performance with great fuel efficiency.






The Maruti Cervo’s interior looks like new Maruti Swift. Maruti Cervo has comfortable front semi-bucket seats, sporty headlamps and fog lamps, Bluetooth capability and 4-speed auto gearbox K6A DOHC engine with VVT. Maruti Cervo will get huge success in India with their priced well with high profile.
Maruti Cervo will surely attract the younger generation with its nice features included sporty stylish look, elegant interiors and sleek external design. Maruti Cervo will definitely create a good impression in the Indian automobile market. We can say that, Maruti Cervo will be one of the fastest and most selling cars in the Indian auto market, after its launch.
Technical Specifications of Maruti Cervo Car:
§ Fuel Type: Petrol
§ Engine Description: 60-65 bhp and K6A DOHC engine with VVT
§ Engine Displacement(cc): 660cc
§ Seating Capacity: 5
§ Number of Doors: 4
§ Gears: 4-Speed
Maruti Cervo Price:
The Ex-show room Price of Maruti Cervo:
Maruti Cervo - Rs 150,000 – Rs 200,000 (Delhi & Mumbai Ex-Showroom Price)
மேலும் நீங்கள் கார் வாங்க ஒரு சின்ன எக்ஸ்செல் பைல்.இதை தரவிறக்கி உங்கள் கார் பற்றிய தகவலை தெரிந்து கொள்ளவும் .
தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.


சும்மா ஜாலிக்கு என்னையா பட்ஜெட் கார் இதை விடவா.

Monday, August 23, 2010

சென்னை பிறந்த கதை

www.earangam.com இணையபக்கங்களில் இருந்து திரட்டியது .





ஆகஸ்டு 22, 2010 அன்று சென்னைக்கு 371 வயதாகிறது. பல்வேறு வசதிகளும், ஆச்சரியங்களும் உயிர்த் துடிப்பும் நிறைந்த சென்னை பிறந்து வளர்ந்த கதையை நாம் பார்க்கலாம்.
371 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன் கப்பலில் வந்து மைலாப்பூர்க் கரையில் இறங்கினான். அவன் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவனை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று டே முடிவு கட்டினான்.
370 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. சென்னை, மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால் சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின.
இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.
சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது.
கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டான். மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தான்.
அப்படி அவன் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றான். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவன் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை’ எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவன் முடிவு செய்தான்.
நினைத்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் பிடுங்கும் கூவம் நதி, 370 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவன் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்து விட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். வள்ளல் பச்சையப்பா முதலியார் தினமும் கூவம் நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தான். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.
பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினான். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினான். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள்.
சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது என்று பார்லோ குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி சந்திரகிரியில் கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில் உருவாகிப் பிறகு இந்திய மண்ணில் பிறந்தது என்கிறார் இவர்.
ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவனது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.
இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.
பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.
30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது.
சென்னைக்கு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா 2004ம் ஆண்டு முன்முயற்சி எடுத்தார். அதற்குப் பலரும் உறுதுணையாக நின்றார்கள். புத்தக வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோஸா, பத்திரிக்கையாளர் சசி நாயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். 2004ம் ஆண்டு முதல் சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் சென்னை பற்றி (KS MUTHUKRISHNAN) இவரை விட யாரும் சிறப்பா எழுதி இருக்கமுடியாதுன்னு நினைக்கிறேன் .நீங்களும் இந்த தளத்திற்கு  சென்று  படியுங்கள்.


சும்மா ஜாலிக்கு 

Friday, August 6, 2010

இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை உருவாக்கியவர் த‌மிழர்

இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை உருவாக்கியவர் த‌மிழர்




இந்தியாவின் ரூபாய்க்கான புதிய அடையாள குறியீட்டை உருவாக்கி சாதனை படைத்திருக்கும் டி.உதயகுமார், சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார்.
இவர் சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேசன் காலனி 4வது தெருவில் வசிக்கும், ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க. முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்தர்மலிங்கத்தின் மகன் ஆவார். உதயகுமார் கடந்த 1978ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆ‌ம் தேதி பிறந்தார்.
உதயகுமாரின் தாயார் பெயர் ஜெயலட்சுமி. இவர்களுடைய பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும். உதயகுமாருக்கு ராஜ்குமார் என்ற அண்ணனும், விஜயகுமார் என்ற தம்பியும், விஜயகுமாரி என்ற தங்கையும் உள்ளனர்.
இவர்களில் விஜய குமாரிக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. ராஜ்குமார் ஷார்ஜாவில் பொ‌றியாளராக பணியாற்றுகிறார். உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. பட்டம் பெற்று உள்ளார். சில நிறுவனங்களுக்கு டிசைன் வடிவமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து உள்ளார்.
அமெரிக்காவின் பணமான டாலர், இங்கிலாந்து நாட்டின் பணமான பவுண்டு ஸ்டெர்லிங் ஆகியவற்றை போன்று, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாள குறியீட்டை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி போட்டியை அறிவித்த போது அதில் உதயகுமாரும் கலந்து கொண்டார். அவர், கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார்.
போட்டிக்கு 3,000 அடையாள குறியீடுகள் வந்தன. இதில் பலத்த போட்டிக்கு மத்தியில் உதயகுமார் உருவாக்கிய அடையாள குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு கிடைக்கும்.

புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு கூடி ஆலோசனை நடத்தியது.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்
ரூபாய்க்கான அடையாள குறியீடாக தனது படைப்பு தேர்வானது குறித்துஉதயகுமா‌ர் கூறுகையில், “என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்” என்றார்.
“ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன்” எ‌ன்றா‌ர் உதயகுமார்.
உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் வடிவமைப்பு துறையில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சும்மா தமாசுக்கு