தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, February 14, 2011

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்






சும்மா தமாசுக்கு 

Sunday, February 13, 2011

படம் பார்க்க சிரிக்க....

எல்லாம் அவன் செயல் 


சுனாமி எப்படி வந்துருக்கும்னு  இப்ப புரியுதா ? 

இதைதான் நன்றி உள்ள நாய்ன்னு சொல்றாங்களோ 

அடிக்கிற வெயில்ல ஐஸ் கடையே உறிகிடுது

இது ஜொள்ளு பார்ட்டிகளுக்காக 

Thursday, February 10, 2011

வலைத்தளம் மற்றும் மெயில் பயனாளர்களுக்கு....

சகோதரி மிடில் கிளாஸ் மாதவி எழுதிய கருத்துரைக்கு பதில் உரை அளிக்க இணையத்தில் தேடிய போது இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. 
சூரியனின் படங்களை இணையத்தில் தேடிய போது இந்த வலைத்தளம் கிடைத்தது.இந்த பக்கத்தில் வெறும் சூரியனை மட்டும் விதம் விதமாக அளித்துள்ளார்கள்.பிளாக்கர் மற்றும் மெயில் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது. 
இந்த தளத்திற்கு செல்ல
 http://d21c.com/walpurgis9/solar/sun1.html கிளிக் செய்யவும்.
இதிலிருந்து மாதிரிக்கு சில படங்கள் 




தளத்திற்கு சென்று முழுவதையும் பார்க்கவும். 

சும்மா தமாசுக்கு 

Wednesday, February 9, 2011

இந்திய தேச கொடியின் கலரை எளிதில் நினைவில் வைக்க

நான் இன்று தான் லட்சுமி அம்மா தளத்தை பார்வை இட்டேன்.அப்படியே தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூச்ச படமால் யாரும் ஏதும் தப்பா நினைப்பாங்களோ என என்னமால் எழுதி இருக்காங்க.அவருக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் எல்லோர் வாழ்க்கையுலும் நடந்து இருக்கும்.அவரின் தளத்திலிருந்து படித்ததும் அது சம்பந்தமாக நானும் நினைத்ததை எழுதி இருக்கிறேன்.அவர் தளத்தில் உள்ள வார்த்தைகள்.
 (பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சுட்டிப்பேரன் பாட்டி நடுவில் ரவுண்டா இருக்கே அது என்னதுன்னு கேக்கரான். அதுவா அப்பளம் என்ரேன்.)   
கொடியை பற்றி லட்சுமி அம்மா விளக்கியது வெகு அருமை.
அவர்கள் தளத்தை காண http://echumi.blogspot.com/
நானும் கொடி கலரை நினைவில் வைக்க ஒரு முறையை நினைவில் வைத்து கொண்டேன். அதிலிருந்து கலர் மறப்பதில்லை.
அதாவது பச்சை பசேல் என்ற பூமி கீழே ,
அதன் மேல் பால் போல் வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள் நடுவில். 
அதன் மையத்தில்  சக்கரமாய் சுழலும் மனிதர்கள்.
அதற்கு மேலே ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சூரியன்.  

Tuesday, February 8, 2011

அங்காடித் தெரு

டேய் இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே வீட்டிலேயே அடைஞ்சு கிடப்பே.அவரு போய் சேர்ந்திட்டாரு.நீயும் இந்த குடும்பத்தில சேர்ந்து உழைத்தால்தான் நம்ம வயித்து  பசி முழுசா அடங்கும்.இந்த அம்மா ஒருத்தி சம்பளத்தில இரண்டு பேர் வயித்தை கழுவுவது ரொம்ப கஷ்டம்.பக்கத்து வீட்டு பர்வதம் கொடுத்த விலாசத்தில போய் பாரு உனக்கு வேலை உடனே கிடைக்கும்.சரிடா நான் பக்கத்து தெரு அம்புஜம் வீட்டில பத்து பாத்திரம் கழுவா போறேன்.நீ ஒரு பத்து மணிக்கு வேலைக்கு போ. அம்மா மதியம் சாப்பாடு செஞ்சு கொண்டுவாரேன்.
டேய் என் செல்லம்லா கொடியில கிடக்கிற எல்லா சேலை துணி மணிகளையும்  நல்ல மடிச்சு வைடா.அம்மாக்கு நேரமில்லைடா."போம்மா வீட்டில சும்மா இருக்கிறதால அதை மடி இதை மடின்னு என் உயிரை வாங்கிற போ உன் வேலையை பார்க்க" என எறிந்து விழுந்தான். சரிடா நான் பார்த்துக்கிறேன்.நீ மறக்காம வேலைக்கு போடா என சொல்லிவிட்டு அம்மா போய் விட்டாள். 
வேலை முடிந்து வந்த உடன் பர்வதத்திடம் என் மகன் வேலைக்கு போயிட்டானா என விசாரித்தாள்.அடப்பாவி மவ உண்மையிலேயே துணியை மடிக்கலையா சரி என சோத்தை சமைத்து பர்வதத்திடம் தன் மகன் வேலை பார்க்கும் இடத்தின் விலாசம் வாங்கி கொடுக்க சென்றாள். 
 மகன் வேலை பார்க்கும் இடத்தில் நுழைந்த உடன் அசந்து வியப்பில் அவளுக்கு சிரிப்பே வந்து விட்டது. 
டேய் என்ன மெதுவா வேலை செய்யற,விறு விறுன்னு முடிச்சிட்டு அடுத்த கஸ்டமரை சீக்கிரம் கவனி என முதலாளி விரட்டினார்.என்ன முதலாளி இவ்வளோ துணி எடுத்து போட்டும் பார்த்திட்டு பிடிக்கலைன்னு 
போற அந்த பொம்பளை என டேபிளின் முன் பரத்தி கிடந்த சேலை துணி மணிகளை ஒவ்வண்ணா மடிக்க தொடங்கினான்.டேய் அதாண்டா நம்ம தொழில்,சகிச்சிகிட்டு வேலை செய்தால் தான் நமக்கு தொழிலே நடக்கும்.அதெல்லாம் கண்டுக்கமா வேலைய பாரு என்றார்
முதலாளி.
அம்மாவை பார்த்த உடன் அவன் குனிஞ்ச தலை நிமிர வில்லை.   

சும்மா தமாசுக்கு 

Monday, February 7, 2011

புதிய யூனிட் கன்வெர்சன் ஸ்கேல்

மன்னிக்கவும்.இணைய இணைப்பு சிறிது நாள் சரியாக வேலை செய்யாததால் பதிவிட முடிய வில்லை.சரியான உடன்  மீண்டும் தொடர்ந்து பதிவிடுவேன்.    
= 1கோடி 

100 கோடி 
ஒரு எடியூரப்பா 

100 எடியூரப்பா 
ஒரு ரெட்டி 

100 ரெட்டி 
ஒரு நீராரடியா

100 நீராரடியா
=  ஒரு கல்மாடி

100 கல்மாடி
ஒரு ராஜா 

100 ராஜா 
ஒரு சரத்பவார் 

100 சரத்பவார் 

ஒரு சோனியா மேடம் 

சும்மா தமாசுக்கு