தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label சிறு கதைகள். Show all posts
Showing posts with label சிறு கதைகள். Show all posts

Tuesday, February 8, 2011

அங்காடித் தெரு

டேய் இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே வீட்டிலேயே அடைஞ்சு கிடப்பே.அவரு போய் சேர்ந்திட்டாரு.நீயும் இந்த குடும்பத்தில சேர்ந்து உழைத்தால்தான் நம்ம வயித்து  பசி முழுசா அடங்கும்.இந்த அம்மா ஒருத்தி சம்பளத்தில இரண்டு பேர் வயித்தை கழுவுவது ரொம்ப கஷ்டம்.பக்கத்து வீட்டு பர்வதம் கொடுத்த விலாசத்தில போய் பாரு உனக்கு வேலை உடனே கிடைக்கும்.சரிடா நான் பக்கத்து தெரு அம்புஜம் வீட்டில பத்து பாத்திரம் கழுவா போறேன்.நீ ஒரு பத்து மணிக்கு வேலைக்கு போ. அம்மா மதியம் சாப்பாடு செஞ்சு கொண்டுவாரேன்.
டேய் என் செல்லம்லா கொடியில கிடக்கிற எல்லா சேலை துணி மணிகளையும்  நல்ல மடிச்சு வைடா.அம்மாக்கு நேரமில்லைடா."போம்மா வீட்டில சும்மா இருக்கிறதால அதை மடி இதை மடின்னு என் உயிரை வாங்கிற போ உன் வேலையை பார்க்க" என எறிந்து விழுந்தான். சரிடா நான் பார்த்துக்கிறேன்.நீ மறக்காம வேலைக்கு போடா என சொல்லிவிட்டு அம்மா போய் விட்டாள். 
வேலை முடிந்து வந்த உடன் பர்வதத்திடம் என் மகன் வேலைக்கு போயிட்டானா என விசாரித்தாள்.அடப்பாவி மவ உண்மையிலேயே துணியை மடிக்கலையா சரி என சோத்தை சமைத்து பர்வதத்திடம் தன் மகன் வேலை பார்க்கும் இடத்தின் விலாசம் வாங்கி கொடுக்க சென்றாள். 
 மகன் வேலை பார்க்கும் இடத்தில் நுழைந்த உடன் அசந்து வியப்பில் அவளுக்கு சிரிப்பே வந்து விட்டது. 
டேய் என்ன மெதுவா வேலை செய்யற,விறு விறுன்னு முடிச்சிட்டு அடுத்த கஸ்டமரை சீக்கிரம் கவனி என முதலாளி விரட்டினார்.என்ன முதலாளி இவ்வளோ துணி எடுத்து போட்டும் பார்த்திட்டு பிடிக்கலைன்னு 
போற அந்த பொம்பளை என டேபிளின் முன் பரத்தி கிடந்த சேலை துணி மணிகளை ஒவ்வண்ணா மடிக்க தொடங்கினான்.டேய் அதாண்டா நம்ம தொழில்,சகிச்சிகிட்டு வேலை செய்தால் தான் நமக்கு தொழிலே நடக்கும்.அதெல்லாம் கண்டுக்கமா வேலைய பாரு என்றார்
முதலாளி.
அம்மாவை பார்த்த உடன் அவன் குனிஞ்ச தலை நிமிர வில்லை.   

சும்மா தமாசுக்கு 

Friday, December 10, 2010

எயிட்ஸ்க்கு மருந்து

"சக்சஸ் சக்சஸ் "
                                                என ராகவன் கத்தினான் .
ராகவன் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளன்.ஆனால் இந்திய மருத்துவ கழகம் அவனது கண்டுபிடிப்பில் குறைகண்டு கூறியதால் அதைவிட சிறந்த மருந்தை கண்டுபிடிக்க இரவு பகலாக உழைத்தான்.ஐந்து வருட உழைப்புக்கு பின் எயிட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்ததால் இந்த வெற்றி சந்தோசம்.  
ராகவன் இந்த மருந்தை கண்டுபிடித்து முடிக்கும் போது மணி பன்னிரண்டு.முடித்த சந்தோஷத்தில் ராகவன் வாட்ச்மேன் சுந்தரத்தை கட்டித்தழுவினார்.சுந்தரம் இது என் வாழ் நாள் கனவிது,என் இந்திய தேசத்திற்காக எதாவது நல்லது செய்ய வேண்டும், இந்த மருந்து முற்றிலும் எயிட்ஸ்சை குணப்படுத்தி விடும் என குதூகலத்தில் கூறினார் .
 ஓகே சுந்தரம் இந்த மெடிக்கல் லேப்பை பார்த்துகொள்.நாளை இந்தியன் மெடிக்கல் அஸோசீசன் இடம் நிரூபித்து சர்டிபிகேட் பெற வேண்டும்.எல்லா கண்டுபிடிப்பும் இந்த லேப்பில் உள்ளது பத்திரமாக பார்த்துகொள் என ராகவன் சொல்லிவிட்டு காரில் சென்றுவிட்டார். 
சென்று ஒருமணி நேரம் கூட ஆக வில்லை.ராகவனுக்கு போன் வந்தது.  "ராகவன் சார் லேப் தீப்பிடித்து எரிகிறது  உடனே வாங்க" என சுந்தரம் போன் செய்தான்.
ராகவன் அலறி அடித்து கொண்டு லேப் நோக்கி விரைந்தார்.சுந்தரம் என்னாச்சு,  எப்படியாச்சு என அழுதார்.ஐயோ என் கனவெல்லாம் வீணாப்போச்சே என கதறினார்.சார் கதவு பூட்டியிருக்கு,உள்ளே யாரும் போன தடயம் ஏதுமில்லை.மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
ஏதோ சார்ஜர் மூலம் மொபைல்  ஓவர் சார்ஜாகி வெடித்து இருப்பதாக தெரிகிறது என  பயர் ஆபிசர் கூறினார் . .ஐயோ நான் தான் மறந்து போய் அப்படியே மொபைலை சார்ஜரில் விட்டு விட்டேன் என புலம்பினார்.அதிர்ச்சியில் அவருக்கு மயக்கமே வந்து விட்டது.     
 எல்லாம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.சுந்தரம் வீட்டில் உட்கார்ந்து அழுதான்.அவள் மனைவி அவனை சமாதனப் படுத்தினாள்.
இதுக்கு நாம என்ன பண்ண முடியுங்க,நம்ம கைல என்ன இருக்கு என கூறினாள்.அதல்ல பர்வதம் லேப் தானா தீப்பிடிக்களை நான் தான் தீ வைத்தேன் .என்னங்க சொல்றேங்க என பர்வதம் அதிர்ச்சியில் கேட்டாள்.ஆமாம், பர்வதம் நான் தான் வைத்தேன்.
ராகவன் மருந்து கண்டு பிடித்தது நாட்டுக்கு நல்லதல்ல, ஏங்க பல பேர் உயிர் பிழைக்க அந்த மருந்து உதவும் இல்லையா,அடியே அது இல்லை மருந்து இல்லாதுனால் தான் நம்ம கலாசாரம் இன்னும் கொஞ்சம் கெடமால் உள்ளது.அதுக்கு மருந்து ஏதும் வந்து விட்டால் அவ்வளுவுதான் ஓபன் ஆக தப்பு பண்ண ஆரம்பித்து விடுவாங்க.அதான் மருந்து இருக்குல்லா பின்ன என்ன கவலை என தப்பு அதிகரித்து விடும்.இப்ப இருக்க பயமும்  போய் விடும்.என்ன பர்வதம் நான் செய்தது  தப்பா.
இல்லைங்க நீங்க செய்தது எந்த தப்பும் இல்லைங்க என தன் கணவனை நினைத்து பெருமிதம் அடைந்தாள்.ராகவன் நாட்டிற்க்கு செய்ய நினைத்த நல்லதை விட நீங்க செய்த நல்ல காரியம் சிறந்ததுங்க,அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சந்திப்போங்க என தைரியம் ஊட்டினாள்.           

சும்மா தமாசுக்கு...உங்கள் சாய்ஸ் தீப்பிடித்தால் எந்த கதவு வழி செல்வதென்று

Tuesday, December 7, 2010

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை

எப்ப பாரு திண்ணையில் படுத்து கிட்டு எதையாவது புலம்பிகிட்டு கிடக்குது.இதுக்கு ஒரு விடிவு காலம் வாராதா. அவருக்கு தான் வயசுஆயிடுச்சு, எப்ப பாரு நீயும் தான் புலம்பிகிட்டு இருக்கே என மாதவன் தன் மனைவி இடம் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டான்.டேய் ராமு இங்கே வாடா இந்த கிழத்தை தூக்கி போய் பின்னால் உள்ள கிணத்துல போட்டு வாடா என ராமுவின் அம்மா கத்தினாள்.   
 ராமுவும் என்னடா தினமும் நம்ம அம்மாக்கும் இந்த கிழத்துக்கும் பிரச்சினை என அவரை தோளில் போட்டு கொண்டு வீட்டு பின்னால் உள்ள கிணத்தை நோக்கி நடந்தான்.வீட்டுக்கு பின்னால் இரண்டு கிணறு இருந்தது.இரண்டும் பாழும் கிணறுதான்.  
 பேராண்டி எங்கப்பா என்னை தூக்கிபோற என கவலையுடன் கிழம் விசாரித்தது.பேசமால் வாய மூடிகிட்டு வா தாத்தா என அவரின் வாயை மூடினான்.சும்மா சொல்லு  பேராண்டி என மறுபடியும் கேட்டார்.இந்த வாயிக்காகதான் தாத்தா உன்னை அம்மா கிணத்துல போடா சொன்னா.   
 அப்படியா....சரி பேராண்டி அதை பற்றி எனக்கு கவலை இல்லை.ஆனா இந்த கிணத்துல போடாதே இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கிற இன்னொரு பாழும் கிணத்துல போட்டுடு.ஏன் தாத்தா இந்த கிணத்துல தான் உங்க அப்பா தற்கொலை செய்தார் அதனாலயா.இல்லை பேராண்டி இந்த கிணத்துல தான் என் மனைவி சொல்லி என் அப்பாவை உன் அப்பா தூக்கி போட்டார், அதனாலதான்.      

பணம் இருந்தால் அப்படி அல்ல ...



Thursday, November 18, 2010

சந்தேகமெனும் பேய்...

என்ன மாதவன் பைல் வேலை முடிஞ்சதா நாளை கடைசி நாள் என உயர் அதிகாரி கேட்க ஐயோ சார் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டேன் என மாதவன் கூறினான் .
சார் வேலை முடிஞ்சுது இதோ வீட்டில் போய் எடுத்து வந்து விடுகிறேன்.  
பரவாயில்லை மாதவன் நாளை வேலைக்கு வரும்போது எடுத்துவாருங்கள்.
சார் பேங்கில பணம் போட போறேன்,அப்படியே எடுத்து வந்து விடுகிறேன் . 
மாதவன் பேங்கில பணத்தை போட்டு விட்டு வீட்டுக்கு விரைந்தான் .வீட்டு வாசலில் மனைவியின் ஸ்கூட்டி வண்டி நின்றது .என்னடா இது, நம்ம கூடதான் அவள் ஆபிசுக்கு கிளம்பினாள்,பின்ன எப்படி வீட்டில் வண்டி நிக்குது.
     அவள் போன் கூட பண்ணலியே உடம்பு எதும் சரியில்லியோ என பல சிந்தனையோடு வீட்டில் நுழைய முற்பட வீட்டினுள் இருவர் பேசும் குரல் கேட்டது .அதுவும் ஆடவன் குரல்.சரி எதும் உறவினன் யாரும் வந்திருப்பானோ, அப்படின்னா போனில் சொல்லி இருப்பாளே ,கதவு வேற உள்ளே தாழ்ப்பாள் போட்டுள்ளதே என குழப்பத்தோடு என்ன செய்வது என திகைத்து நின்றான் .
சரி மனதை திடப்படுத்தி கொண்டு என்ன என்று ஜன்னல் வழி பார்த்து விடுவோம், என பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதிய ஆடவனோடு நான்  வாங்கிகொடுத்த கருப்பு கலர் நைட்டியை போட்டு கிட்டு அவனை கட்டியபடி "சே" என்ன கொடுமை அதன் என் வாயால எப்படி சொல்ல அவள் திரும்பி என்னை  பார்க்கும் முன் இங்கிருந்து சென்றுவிடுவோம் என புறப்பட எத்தனித்தான் . அவனோ அவளிடம் டார்லிங் இதுக்காக எத்தனை தருணம் காத்திருந்தேன் தெரியுமா என கொஞ்சும் குரலில் கூற அவளும் ..ம்.. என்க
கொடுமை என தலையில் அடித்த படி மாதவன் பைலை எடுக்காமல் ஆபிஸ் சென்று விட்டான். 
ஆபீசில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.என்ன செய்வது எப்படி கேட்பது என மனதில் பல போராட்டங்கள்.வேலை செய்ய மனதே இல்லாமல் மனம் போன போக்கில் நடந்தான் .மாலை நான்கு மணிக்கு வீட்டிற்க்கு வந்தான்.
மனைவி  குளித்து விட்டு தலையை துவட்டியபடி வந்தாள்.என்னங்க ஆள் டல்லா இருக்கீங்க .காப்பி எடுத்து வரவா.அப்பப்பா என்னா வெயிலுங்க ஆபிஸ் விட்டு வருதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு,சரி நீங்க கை கால்  கழிவிட்டு வாங்க என கிச்சன் பக்கம் விரைந்தாள்.
       என்னா பேசுவது எப்படி கேட்பது என பாத்ரூம் சென்றான் மாதவன்.   வெளியே அவன் காலையில் பார்த்த கறுப்பு நைட்டி துவைத்து கொடியில் தொங்கியது.அடிபாவி இப்படி நடிக்கிறாளே என வெம்பியபடி உள்ளே வந்தான்.
மனைவியை பார்த்து நான் ஒண்ணு கேட்கனும் கேட்கட்டுமா கண்ணு
 என்றான் மாதவன்.
இல்லைங்க அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும்  சொல்லுட்டுங்களா.
அதை வேற உன் வாயால கேட்கணுமா என மனதில் நினைத்தபடி சரி சொல்லு
என்றான்
                          ஏங்க என் ப்ரண்ட் கலா தெரியுமில்ல,
                         "ஆமா தெரியும் அதுக்கென்ன"
 அவளும் அவள் கணவனும் என் ஆபிஸ் வந்திருந்தாங்க.அவள் கூட்டு குடும்பத்தில் வசிக்கிறாள்.அவள் கணவன் துபாய் போகிறாராம்.இரண்டு வருடம் கழித்து தான் வருவாராம்.மாலை நான்கு மணிக்கு தான் பிளைட்டாம். தன்னோட ஆசையை மறைமுகமாக சொன்னாள்.அதனால் நம்மவீட்டில் கொஞ்சம் நேரம் தங்கிட்டு அப்புறமா போறோம் என்றாள் அதான் நான் என் வண்டியை  கொடுத்து நம்ம வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் .புதுசா கல்யாணம் ஆனவள் தானே அப்படி இப்படி இருப்பாங்க.அது கூட்டு குடும்பத்தில முடியாது .மாற்று துணியும் கொண்டுவர முடியாது .அவங்க வீட்டில் இது எதற்கு என கேட்பாங்க .அதனால நான் என் துணியை யூஸ் பண்ணிக்க சொன்னேன்.இந்த விஷயம் உங்களுக்கும் தெரியனுங்கிறதுக்காக தான் சொல்றேன்.எதையும் உங்ககிட்ட இதுவரை மூடி மறைத்ததில்லை.உங்ககிட்ட கேட்காம சரின்னுட்டேன் மன்னிச்சிடுங்க என அவள் பேசும் போதே என்னை யாரோ கன்னத்தில் பளார் என அறைந்த மாதிரி இருந்தது ."சே" நானெல்லாம் ஒரு மனுஷன்,கட்டிய மனைவியை இப்படி சந்தேக பட்டுவிட்டேனே என கூனிகுறுகி விட்டான் மாதவன்.என்னங்க நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனை ,சரி ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே என்னன்னு சொல்லுங்க.
    "ம்" என்ன டார்லிங் என சுதாரித்து அதெல்லாம் எதுக்கு கண்ணு சாயிந்திரமா கோயிலுக்கு போலாமா என கேட்க வந்தேன் நீ என்னடான்னா ஊர்கதை பேசிட்டு இருக்கே என மழுப்பினான்.சந்தேக பட்ட பாவத்தை கோயிலில் போய்தானே தீர்க்கமுடியும் என மனதில் நினைத்தான் மாதவன்.

சும்மா தமாசுக்கு 

Friday, October 22, 2010

பிரியாத உறவு எது?

பள்ளி படிக்கும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் இந்த சம்பவம் நடந்ததுண்டா .சில மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட மாணவனை பார்த்து டேய் என்னடா உடம்பு இப்படி சுடுது என்ன காய்ச்சலா என கூறுவார்கள்.அவனும் இல்லையே என கூறுவான்.நண்பர்கள் பேசி வைத்து ஒருவர் பின் ஒருவராக என்னடா ஆள் டல்லா இருக்கே உடம்பு சரியில்லையா என விசாரிப்பார்கள். அவனுக்கே சந்தேகம் வந்து ஒருமுறை தொட்டு பார்த்து கொள்வான். அதிலேயே அவனுக்கு பாதி உடம்பு டல்லாகி விடும் .அந்த சோர்வோடு வகுப்பறைக்குள் வந்தால் ஆசிரியரோ என்ன சோர்வா இருக்கே
உடம்பு ஏதும் சரியில்லையா என விசாரித்தால் அவ்வளவுதான்
அவனுக்கு உண்மையிலேயே காய்ச்சல் வந்திருக்கும் .

இந்த சம்பவம்  எதுக்குன்ன கீழுள்ள கதையை படியுங்கள் புரியும் .
ஒரு ஊரில் ஒரு இணை பிரியாத தம்பதி குடிவந்தாங்க .ஊரே இதை பார்த்து அசந்தாங்க.எப்படி குடும்பத்தில இப்படி சண்டை சச்சரவு இல்லமால் வாழமுடியுது  .உங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா என கேட்டார்கள்.
 அதுக்கு அவர்கள் விட்டு கொடுத்து வாழ்ந்தால் எதுக்கு மனகசப்பு வருது என்றார்கள் .
சில மாதம் சென்றது.அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கன் வந்தான் . .
அவனுக்கு இந்த விஷயம் காதுக்கு வர அட இது சாதாரண மேட்டர் .ஊரில் சில பேர் என்னடா இதை சாதாரணமாக இவன் இந்த விசயத்தை எடுத்து கொள்கிறான் .அவனோ நான் எத்தனை குடும்பத்தை இது மாதிரி பார்த்து பின் பிரித்துள்ளேன் .இது ஒரு சப்பை மேட்டர் என மறுபடியும் கூறினான் .சரி நீங்கள் நான் சொல்கிற மாதிரி அந்த தம்பதி இருவரிடமும் தனி தனியாக கூறுங்கள் .கணவனிடம்  கூறியது மனைவிக்கு தெரிய கூடாது என்றான் . 
அதன் படி ஊரார் ஒருவர் பின் ஒருவராக கணவனிடம் உன் மனைவி போன பிறவியில் கடல் உப்பாக பிறந்தவள் வேணுமுன்னா நீ மறைமுகமாக சோதித்து பார் என்றார்கள் .அவன் மனைவியிடம் உன் புருஷன் போன பிறவியில் நாயாக பிறந்தவன் என கூறினார்கள் .முதலில் அதை ஒரு பொருட்டாக இருவரும் எடுத்து கொள்ளாட்டாலும் அடி மனதில் ஒரு சந்தேகம் இருவருக்கும் இருந்து வந்தது எப்படி அறிவது என யோசித்தனர் .
பின் ஒரு நாள் இரவு படுத்திருக்கும் போது இருவர் மனதிலும் அதே எண்ணங்கள் ஓடியது .பின் இருவரும் துங்குவது போல் நடித்து கொண்டிருந்தனர்.கணவன் மெதுவாக எழுந்து மனைவியின் காலை நக்கினான் .உடனே மனைவி எழுந்து அட நாயே ,ஊரார் சொன்ன மாதிரி நீ போன பிறவியில் நாயாக பிறந்துள்ளாய்,அவனோ அடி நீ மட்டும் என்ன வாழுதாம் நீயும் போன பிறவியில் கடல் உப்பாக பிறந்தவள் என இருவருக்கும் சரமாரியான வாக்குவாதம் நடக்க பேச்சு பெரிசாகி ஊருக்கே கேட்கும் படி சண்டை வந்தது.
ஊரே இரவில் வேடிக்கை பார்த்தது .வழிப்போக்கனோ "நாராயண நாராயண" என கூறியபடி சென்றான் .  ஒற்றுமையாய் உள்ள தம்பதி இப்படி எப்படி சின்ன விசயத்திற்கு சண்டை இடுவார்கள் என நினைப்பிங்க.அதனால் இப்ப புரியுதா மேல சொன்ன பள்ளி சம்பவம் எதற்கு என்று .
நமக்கே தெரியாது இந்த சின்ன விசயத்திற்கா அவனிடம் சண்டையிட்டோம்.எவ்வளோவோ பெரிய காரணத்திற்கு கூட விட்டு கொடுத்திருப்போம்.எனவே நண்பர்களே பல பேர் சேர்ந்து நம்மளை முட்டாளாக்க பார்ப்பார்கள் ,நாம் தான் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்  

சும்மா தமாசுக்கு 

Saturday, May 1, 2010

திருட்டு பார்வை

அன்று ஞாயிற்று கிழமை..... 
என்னங்க சாயங்காலமா மெரினா பீச் போயிட்டு வரலாங்க.
சரி  கலா ரெடியா இரு நாம போயிட்டு ஓட்டல்லயும்  சாப்பிட்டுட்டு வரலாம். 

என்னங்க இந்த சாரி ஓகேவா .
இல்ல கலா இது ரொம்ப மெல்லிசா இருக்கு ,வேற கட்டு .
சரிங்க.
 மெரினா பீச் எவ்வளோ அழகா இருக்கு பாருங்க .
ஆமா டார்லிங்  புதுசா கல்யாணம் ஆன புதுசுல பொண்டாட்டி கூட வருதுல எவ்வள சுகம் தெரியுமா.
ஏங்க இங்க உக்கர வேணாம் வாங்க அங்கே போகலாம் .

ஏன் கண்ணு வந்ததில் இருந்து பார்க்கிறேன் ,இங்க உக்கருவோம் ,அங்கே உக்கருவோம் என இடத்தை மாத்திகிட்டே இருக்கியே ஏன் ?
கட்டையுல போறவுனுவோ,முழிய பாரு ,இவங்கள்ல அக்கா தங்கச்சி கூட பிறக்கலியா.
என்னம்மா உன் பிரச்சினை .
அங்க பாருங்க அந்த பயலுவோ இங்கேயே குறுகுறுன்னு பார்க்கிறானுவோ,வேலைவெட்டி இல்லாத பயலுவோ இதே பொழப்பா திரியிறனுவோ.
எனக்கு நெத்தியில் அடித்த மாதிரி இருந்தது .பழைய நினைவு மனதில் ஓடியது.

@@@@&&%%##! டேய் ரவி வாடா நேரமாயிட்டு ,மெரினா பீச்சுல இந்நேரம் பிகருங்க ,அதுவும் இந்த இளம் கல்யாணம் ஆன  ஜோடிங்க சூப்பரா வலம் வருவாங்க .மெல்லிய சாரியில் சும்மா கும்முன்னு..... அட அதெல்லாம் நேர பார்த்தாதான் புரியும் சீக்கிரம் வாடா. @@@@&&%%##!

என்னங்க நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனை .
அவளுக்கு என்ன தெரியும் அவர்கள் மனதும், திருட்டு பார்வையும் எதில் என்று...... 

ரசிக்க ....அதுக்காக இப்படியா 

Sunday, April 11, 2010

அப்பா என்றால்........

அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்,அப்பா வீட்டின் அடையாளம்.

                   அம்மா உட்டுவது அன்பு,

                   அப்பா காட்டுவது மனத் தெம்பு ....

நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா,ஆனால்

அந்த உணவை சம்பாதித்து தருவது

அப்பா என்பதை ஏனோ மறந்தே போகிறோம்!

கல்லில் இடறும்போது வாயில்வரும் வார்த்தை "அம்மாடியோ "

காரில் மோதி விழும்போது கூவி அழைக்கிறோம் "ஐயோ அப்பா"
 
ஏனெனில் சின்னச்சின்ன துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு.

ஆனால் பெரிய துன்பங்களில் துணைநிற்பது அப்பாவின் ஆதரவு,
 
அப்பா ஒரு நெடிய ஆலமரம் .அவர்தரும் குளிர்நிழலே குடும்பம்,

அனைத்துக்கும் எப்போதும் அடைக்கலம்.


ரசிக்க....மகனைப்போல அப்பா

Thursday, January 21, 2010

புத்திசாலி கணவன்

ஏற்கனவே உங்களுக்கு ஒரு புத்திசாலி பெண்ணின் கதையை பதிவு செய்திரிந்தேன்.அதே மாதிரி ஒரு கணவனின் புத்திசாலி தனத்தையும் பாருங்க 




அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது ஆறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக "ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்"  என்றது.

மனைவி கேட்டாள் "இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்."

கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா  சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது.

இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், "என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்."

அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.


படித்து கோபப்படாத ஆண்கள் 
web counter

Sunday, March 22, 2009

ஆங்கில எழுத்தாளர் ஓ. ஹென்றியின் படைப்பு, ஞானிகளின் பரிசு (The Gift of the Magi). அந்த அற்புத படைப்பின் amirthan தமிழாக்க முயற்சி.

புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரு புரூக்கிளின் நியூயார்க் அவுங்க ஊரு போட்ற துணியிலேர்ந்து எல்லாமே பழசு ப்ரோக்கன் பர்னிச்சர் தாங்க ஒரே சொகுசு பெருமையா சொல்றதுக்கு இருந்தது ஆளுக்கொரு சொத்து - அதையும் பொறாமையா பாக்கறதே தினசரி ஊர்ல நடக்கற கூத்து அந்த பொண்டாட்டியோட பொக்கிஷம் நீளமான கேசம் வாரத்துக்கு ஒரு முறைதான் குளிச்சாலும் வாசனை வீசும் ஐயா அலட்டுர ஐட்டம் பந்தாவான பாக்கெட் வாட்ச்சு டவர்ல காமிக்கற டைமும் இதுவும் எக்சாட் மேட்சு அரைபட்டினி தினசரி வந்தது வெடிங் அணிவர்சரி லக்ஸ்சுரி ஐட்டம் தோசை கிஃப்ட்டு கொடுக்க மட்டும் ஆசை அன்பான கணவனோட அழகான வாட்ச்சிக்கு மேட்ச்சான சேய்ன்னு வாங்க வித்தாங்க தலைமுடியை காசுக்கு மனசெல்லாம் மனைவியோட மணமான கேசத்தின் நெனப்பு தயங்காம வித்தாரு வாட்ச்சை வித்த காசுக்கு கிடைச்சது தங்க சீப்பு தன் சொத்தை இழந்து, தன் துணையோட சொத்தை சிறப்பாக்க நெனச்ச, இவங்க அன்பு தாங்க நிலையான சொத்து!!! அன்பு தாங்க நிலையான சொத்து!!!
நம்ம ஊரிலும் இது மாதிரி ஒரு நகைசுவையான கதை உண்டு
ஒரு ஊரில் அன்பான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க .அந்த தாத்தாவுக்கு ஒரே ஒரு பல். அந்த பாட்டிக்கு ஒரே ஒரு முடியாம்.பெருமையா சொல்றதுக்கு இருந்தது ஆளுக்கொரு சொத்து இதுதான்.ஒரு நாள் அந்த தாத்தாவுக்கு பாட்டியோட ஒரே ஒரு முடியில மல்லிகை பூ வைச்சு பாக்க ஆசை பட்டாரு .சரின்னு பூ வாங்கிட்டு வந்து பாட்டி முடி மீது வைக்க ,இருந்த அந்த ஒரு முடியும் கீழே விழுந்தது.இதை பார்த்த தாத்தா கொள்ளுன்னு பலமா சிரிக்க அவரிடம் இருந்த அந்த ஒரு பல்லும் கீழே விழுந்தது.இதுவும் ஒரு வகை அன்புதாங்க.
உண்மையில்
அன்பு தாங்க நிலையான சொத்து!!! அன்பு தாங்க நிலையான சொத்து!!!