"சக்சஸ் சக்சஸ் "
என ராகவன் கத்தினான் .
ராகவன் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளன்.ஆனால் இந்திய மருத்துவ கழகம் அவனது கண்டுபிடிப்பில் குறைகண்டு கூறியதால் அதைவிட சிறந்த மருந்தை கண்டுபிடிக்க இரவு பகலாக உழைத்தான்.ஐந்து வருட உழைப்புக்கு பின் எயிட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்ததால் இந்த வெற்றி சந்தோசம். ராகவன் இந்த மருந்தை கண்டுபிடித்து முடிக்கும் போது மணி பன்னிரண்டு.முடித்த சந்தோஷத்தில் ராகவன் வாட்ச்மேன் சுந்தரத்தை கட்டித்தழுவினார்.சுந்தரம் இது என் வாழ் நாள் கனவிது,என் இந்திய தேசத்திற்காக எதாவது நல்லது செய்ய வேண்டும், இந்த மருந்து முற்றிலும் எயிட்ஸ்சை குணப்படுத்தி விடும் என குதூகலத்தில் கூறினார் .
ஓகே சுந்தரம் இந்த மெடிக்கல் லேப்பை பார்த்துகொள்.நாளை இந்தியன் மெடிக்கல் அஸோசீசன் இடம் நிரூபித்து சர்டிபிகேட் பெற வேண்டும்.எல்லா கண்டுபிடிப்பும் இந்த லேப்பில் உள்ளது பத்திரமாக பார்த்துகொள் என ராகவன் சொல்லிவிட்டு காரில் சென்றுவிட்டார்.
சென்று ஒருமணி நேரம் கூட ஆக வில்லை.ராகவனுக்கு போன் வந்தது. "ராகவன் சார் லேப் தீப்பிடித்து எரிகிறது உடனே வாங்க" என சுந்தரம் போன் செய்தான்.
ராகவன் அலறி அடித்து கொண்டு லேப் நோக்கி விரைந்தார்.சுந்தரம் என்னாச்சு, எப்படியாச்சு என அழுதார்.ஐயோ என் கனவெல்லாம் வீணாப்போச்சே என கதறினார்.சார் கதவு பூட்டியிருக்கு,உள்ளே யாரும் போன தடயம் ஏதுமில்லை.மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
ஏதோ சார்ஜர் மூலம் மொபைல் ஓவர் சார்ஜாகி வெடித்து இருப்பதாக தெரிகிறது என பயர் ஆபிசர் கூறினார் . .ஐயோ நான் தான் மறந்து போய் அப்படியே மொபைலை சார்ஜரில் விட்டு விட்டேன் என புலம்பினார்.அதிர்ச்சியில் அவருக்கு மயக்கமே வந்து விட்டது.
எல்லாம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.சுந்தரம் வீட்டில் உட்கார்ந்து அழுதான்.அவள் மனைவி அவனை சமாதனப் படுத்தினாள்.
இதுக்கு நாம என்ன பண்ண முடியுங்க,நம்ம கைல என்ன இருக்கு என கூறினாள்.அதல்ல பர்வதம் லேப் தானா தீப்பிடிக்களை நான் தான் தீ வைத்தேன் .என்னங்க சொல்றேங்க என பர்வதம் அதிர்ச்சியில் கேட்டாள்.ஆமாம், பர்வதம் நான் தான் வைத்தேன்.
ராகவன் மருந்து கண்டு பிடித்தது நாட்டுக்கு நல்லதல்ல, ஏங்க பல பேர் உயிர் பிழைக்க அந்த மருந்து உதவும் இல்லையா,அடியே அது இல்லை மருந்து இல்லாதுனால் தான் நம்ம கலாசாரம் இன்னும் கொஞ்சம் கெடமால் உள்ளது.அதுக்கு மருந்து ஏதும் வந்து விட்டால் அவ்வளுவுதான் ஓபன் ஆக தப்பு பண்ண ஆரம்பித்து விடுவாங்க.அதான் மருந்து இருக்குல்லா பின்ன என்ன கவலை என தப்பு அதிகரித்து விடும்.இப்ப இருக்க பயமும் போய் விடும்.என்ன பர்வதம் நான் செய்தது தப்பா.
இல்லைங்க நீங்க செய்தது எந்த தப்பும் இல்லைங்க என தன் கணவனை நினைத்து பெருமிதம் அடைந்தாள்.ராகவன் நாட்டிற்க்கு செய்ய நினைத்த நல்லதை விட நீங்க செய்த நல்ல காரியம் சிறந்ததுங்க,அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சந்திப்போங்க என தைரியம் ஊட்டினாள்.
சும்மா தமாசுக்கு...உங்கள் சாய்ஸ் தீப்பிடித்தால் எந்த கதவு வழி செல்வதென்று
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.