தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, February 9, 2011

இந்திய தேச கொடியின் கலரை எளிதில் நினைவில் வைக்க

நான் இன்று தான் லட்சுமி அம்மா தளத்தை பார்வை இட்டேன்.அப்படியே தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூச்ச படமால் யாரும் ஏதும் தப்பா நினைப்பாங்களோ என என்னமால் எழுதி இருக்காங்க.அவருக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் எல்லோர் வாழ்க்கையுலும் நடந்து இருக்கும்.அவரின் தளத்திலிருந்து படித்ததும் அது சம்பந்தமாக நானும் நினைத்ததை எழுதி இருக்கிறேன்.அவர் தளத்தில் உள்ள வார்த்தைகள்.
 (பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சுட்டிப்பேரன் பாட்டி நடுவில் ரவுண்டா இருக்கே அது என்னதுன்னு கேக்கரான். அதுவா அப்பளம் என்ரேன்.)   
கொடியை பற்றி லட்சுமி அம்மா விளக்கியது வெகு அருமை.
அவர்கள் தளத்தை காண http://echumi.blogspot.com/
நானும் கொடி கலரை நினைவில் வைக்க ஒரு முறையை நினைவில் வைத்து கொண்டேன். அதிலிருந்து கலர் மறப்பதில்லை.
அதாவது பச்சை பசேல் என்ற பூமி கீழே ,
அதன் மேல் பால் போல் வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள் நடுவில். 
அதன் மையத்தில்  சக்கரமாய் சுழலும் மனிதர்கள்.
அதற்கு மேலே ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சூரியன்.  

2 comments:

middleclassmadhavi said...

கொடி - உருவகம் நன்று!
சூரியனின் கறுப்புக் கண்ணாடியை எடுக்க முடியுமா, கொடியில் வேறு ஞாபகம் வருகிறது!! :)

PalaniWorld said...

@middleclassmadhavi
சகோதரியே உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது என புரிந்து கொண்டேன்.கண்ணாடியை எடுத்து விட்டேன்.சுட்டி காட்டியமைக்கு நன்றி.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.