தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, December 7, 2010

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை

எப்ப பாரு திண்ணையில் படுத்து கிட்டு எதையாவது புலம்பிகிட்டு கிடக்குது.இதுக்கு ஒரு விடிவு காலம் வாராதா. அவருக்கு தான் வயசுஆயிடுச்சு, எப்ப பாரு நீயும் தான் புலம்பிகிட்டு இருக்கே என மாதவன் தன் மனைவி இடம் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டான்.டேய் ராமு இங்கே வாடா இந்த கிழத்தை தூக்கி போய் பின்னால் உள்ள கிணத்துல போட்டு வாடா என ராமுவின் அம்மா கத்தினாள்.   
 ராமுவும் என்னடா தினமும் நம்ம அம்மாக்கும் இந்த கிழத்துக்கும் பிரச்சினை என அவரை தோளில் போட்டு கொண்டு வீட்டு பின்னால் உள்ள கிணத்தை நோக்கி நடந்தான்.வீட்டுக்கு பின்னால் இரண்டு கிணறு இருந்தது.இரண்டும் பாழும் கிணறுதான்.  
 பேராண்டி எங்கப்பா என்னை தூக்கிபோற என கவலையுடன் கிழம் விசாரித்தது.பேசமால் வாய மூடிகிட்டு வா தாத்தா என அவரின் வாயை மூடினான்.சும்மா சொல்லு  பேராண்டி என மறுபடியும் கேட்டார்.இந்த வாயிக்காகதான் தாத்தா உன்னை அம்மா கிணத்துல போடா சொன்னா.   
 அப்படியா....சரி பேராண்டி அதை பற்றி எனக்கு கவலை இல்லை.ஆனா இந்த கிணத்துல போடாதே இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கிற இன்னொரு பாழும் கிணத்துல போட்டுடு.ஏன் தாத்தா இந்த கிணத்துல தான் உங்க அப்பா தற்கொலை செய்தார் அதனாலயா.இல்லை பேராண்டி இந்த கிணத்துல தான் என் மனைவி சொல்லி என் அப்பாவை உன் அப்பா தூக்கி போட்டார், அதனாலதான்.      

பணம் இருந்தால் அப்படி அல்ல ...



4 comments:

THOPPITHOPPI said...

அருமையா சொன்னிங்க

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை................

PalaniWorld said...

@THOPPITHOPPI
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே . வயதானால் பழைய பொருள் போல தான் தூக்கி எறிந்து விடுவார்கள் .வாழ்க தமிழ்.

PalaniWorld said...

@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே .வாழ்க தமிழ்

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.