தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, December 3, 2010

தேவையான சினிமா படங்களை தரவிறக்க

இன்றைய சூழ்நிலையில் சினிமா அரங்குகளில் போய் படம் பார்ப்பது அரிதாகி வருகிறது.காரணம் குடும்பத்தோடு போய் ஒரு சினிமா பார்க்கவே மாத சம்பளத்தில் கால்வாசி காலியாகி விடுகிறது.எந்த ஒரு சினிமா அரங்கத்திலும் குறைந்தது புது படத்திற்கு நூறு ரூபாய் டிக்கெட் ஆகும்.குடும்பத்தில் நான்குபேர் என்றால் நானூறு ரூபாய் டிக்கெட்டிற்கு,பஸ் போக்குவரத்திற்கு ஒரு நூறு ரூபாய் ,உள்ளே நொறுக்கு தீனிக்கு ஒரு 200/-ரூபாய் அப்படி இப்படின்னு பார்த்தால் சராசரியாக முழுதா ஆயிரம் ரூபாய் என்று வைத்து கொண்டால் மாதத்திற்கு நாம் மினிமம் ஒரு படம் தான் பார்க்க முடியும். 
 படம் எடுப்பவர்கள் அன்பு மக்களே படத்தை திரை அரங்குகளில் காணுங்கள். திருட்டு சீடிக்களில் பார்க்காதீர்கள் என கூறுவார்கள்.ஏன் திரை அரங்குகளில் டிக்கெட்டை குறைக்க சொல்லவேண்டியது தானே.முடியாது ஏன்னா ரஜினிக்கு பிறகு  எப்படி 30-40 கோடி கொடுப்பது. 

 படம் எடுக்க செலவு ஆனால் சரி.இன்றைக்கெல்லாம் சினிமா நடிப்பவர்களுக்கு லச்சத்தில் சம்பளம் இல்லை,எல்லாம் கோடியில் தான்.பிறகு இவர்களுக்கு எதில் பார்த்தால் இவர்களுக்கென்ன.மார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு சீடி கிடைக்கிறது.பொறுமையாக வீட்டில் உட்கார்ந்து நமக்கு நேரம் கிடைக்கும் போது படம் பார்க்கலாம். 
 அரங்குகளில் பொறுமையாக படம் பார்க்க முடியாது .ரசிகர்கள் கத்தி ஆர்ப்பரித்து பாதி வசனம் காதில் விழாது.வீட்டில் நாம் பாத்ரூம் போனாலும் நிறுத்தி அல்லது நமக்கு புரியாத இடத்தில் மறுபடி திரும்பவும் ஓட்டி பார்க்கலாம்.இதற்கு சினிமா துறையே அதிகார பூர்வமாக சினிமா சீடிக்களை வெளியிடலாம்.
            சினிமா துறையில் நலிந்தவர்களை சினிமா துறையே கண்டு கொள்வதில்லை.நாம் அவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டுமாம்.நாட்டுக்கு ஒரு வகையிலும் உதவாத துறை எது என்றால் அது சினிமா துறைதான்.மக்கள் அதில் மூழ்கி தன் வெளி உலகத்தையே மறந்து விடுகின்றனர்.
எது எப்படியோ நான் இந்த பதிவை எழுத மேலுள்ள காரணங்களே ஆகும்.
உங்களிடம் Unlimited (broadband) இணைய இணைப்பு இருந்தால் நீங்கள் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து சினிமா படங்களை தரவிறக்கம் செய்யலாம்.
   இதில் தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், இந்தி ,மலையாளம் படங்களை தரவிறக்கம் செய்யலாம். 
2) http://www.zbutterfly.com/ 
இந்த தளத்தில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி பதிந்து கொண்டால் இதிலும் எல்லா வகையான படங்களை தரவிறக்கலாம். இந்த தளத்திற்கு சென்றால் உங்களுக்கே புரியும். 


சும்மா தமாசுக்கு 

3 comments:

பொன் மாலை பொழுது said...

சினிமா காரர்களை அவர்களுக்கு ஏற்ற இடத்தில் வைக்கதவறிய நமக்கு இதுதான் சரியான வழி. அணைவரும் பின்பற்ற வேண்டும். நன்றி.

PalaniWorld said...

@கக்கு - மாணிக்கம்
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.சினிமா ஒரு பொழுது போக்கு என்பது மாறி நமது வாழ்க்கையில் அதுவும் ஒரு கட்டாய தேவை என்ற அளவுக்கு மாறி விட்டது நண்பரே... அதான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

LINKU RANJAN said...

all new dubbed movie download hear

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.