தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, September 16, 2009

எனக்கு வந்த மெயில்-இல் இருந்து பிடித்தது.ஆனால் இதுcablesankar.blogspotஅவருடையது .நன்றி சங்கர்

மனைவி அகராதி உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன் மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன். மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா? அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு மனைவி : சரி அர்த்தம் : நோ.. மனைவி : நோ அர்த்தம் : சரி, மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா? அர்த்தம் : பழகிக்கங்க மனைவி ; ஒண்ணுமில்லை அர்த்தம : நிறைய இருக்கு மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.