வாஷிங்டன்: மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். சிலர் தூக்கம் பெரிதல்ல உழைப்பே பெரிது என்ற இலட்சிய வாழ்க்கை வாழ்பவரும் உண்டு. பலவாறான தூக்கத்திற்கு பயன்கள் என்ன ? தீமைகள் என்ன ? இவ்வாறு தூக்கத்தின் சந்தேகங்கள் பலவாறு இருக்கிறது.
தூக்கம் குறித்து யாருக்கும் உறுதியான நிலை தெரிந்தபாடில்லை. இந்நிலையில் அனைவருக்கும் உதவும் வகையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., இணையதளத்தில் பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் , டாக்டர்கள் கூறும் அறிவுரைகளையும் தொகுத்து தளத்தின் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தூக்கத்திற்கென கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டுள்ள கிளினிக் சென்டர் கோ. ஆர்டினேட்டர் டாக்டர் . டேனியல் கிரிப்க் கூறுகையில் ; பலர் வீக்எண்ட் நாளில் அதிகம் தூங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்படி தூங்கி எழுந்தவர்கள் பலர் இன்று மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறுகின்றனர். நன்றாக இருந்தது என யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் டாக்டர்கள் பலர் மருத்துவ துறையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த தூக்க பாதிப்பை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு யாரும் முன்விழைவதில்லை. நீண்ட நேரம் தூங்குவதால் அவரது பழக்கவழக்கமே மாறிவிடுகிறது.நீண்ட தூக்கத்திற்கு பின்னர் எழுந்ததும் தூக்க நிலையே நீடிப்பதாக உணரப்படுகிறார்கள்.
சிக்காகோ நகர்ப்புற 25 வயது இளைஞர் ஒருவர் தூக்கம் குறித்து கூறுகையில் தான் சரியான அளவு தூங்கி எழுந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறு, சுறுப்பாக இருக்கிறது. அதிகமாக தூங்கி எழுந்தால் அந்தநாள் முழுவதும் படு சோம்பேறியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பணியில் இருக்கும் போது டே நைட் சிஸ்டம் படி வரும்போது சிலர் கூடுதலாக தூங்க வேண்டியுள்ளது. இந்நேரத்தில் 5 முறை அலாரம் அடித்தாலும் எழுந்திருக்க முடியவில்லை என்கிறார் ஒரு அமெரிக்கவாசி. இதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு வார இறுதி நாளில் 12 மணி நேரம் தூங்குவதாக சிலர் சொல்கின்றனர். இவ்வாறு 12 மணி நேரம் தூங்கியதால் நன்றாக இருந்தது என்று கூறமுடியாது என்கின்றனர் .
இது குறித்து இல்லினாய்ஸ் நகர டாக்டர் . லிசாஷிவ்ஸ் கூறுகையில்; அதாவது சிலர் தூக்க வியாதி (தூக்க போதை ) கொண்டவர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் தூங்கி கொண்டே இருக்க விரும்புவர். விழித்திருந்தாலும் தூங்கும் மன நிலையில் இருப்பர். இது மிக மோசமானது எப்போது என்ன செய்வான் என்றே தெரியாது.
கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) : அளவுக்கதிகமான தூக்கம் உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். இது ஆயுள் நாளையும் குறைத்து விடும். இது குறித்து ஆய்வாளர் மைக்கேல் பிரேயூ கூறுகையில் ; சில ஆய்வுகள் மூலம் இதுதொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அதாவது நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்திற்குள்ளாவர். இதனையே பிரிட்டிஷ் ஆய்வும் தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
குறைவான தூக்கம் எப்படி இருக்கும்: ஒருவருக்கு குறைவான தூக்கம் இருந்திருந்தால் , தூக்கத்திற்கு பின்னரும் அவர்கள் களைப்பாகவே இருப்பர். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குரிய தூக்கநேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும். குறைவான தூக்கம் குறித்து ஒருவர் கூறுகையில் குவானிட்டி ஆப் ஸ்லீப் , குவாலிட்டி ஆப் ஸ்லீப் என்கிறார். இதுதான் அழகான தூக்கம் என்கிறார்.
90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும் இதன்படி ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மரபு வழி பண்பியல் காரணமாகவும் இந்த பிரச்னை சிலருக்கு வரலாம். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். அதிகம் தூங்காதே., குறைவாகவும் தூங்காதே ., தூங்கு ., உறக்கத்திற்கும் இருக்குது விதி.
-நன்றி தினமலர்
சும்மா தமாசுக்ககா
சத்தியமா நான் தூங்கலிங்க
தூக்கத்தை பற்றி தெரிந்து கொண்டோர்