தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, December 18, 2009

விஸ்டாவில் மைடாகுமெண்ட்ஸ் போல்டரை வேறு ஒரு டிரைவ்-க்கு மாற்ற

விஸ்டாவில் மை டாகுமெண்ட்ஸ் போல்டெர் எப்போதும் "C" DRIVE-ல் தான் இருக்கும் .இதனால் சில பிரச்சினைகள் உள்ளன . ஓன்று பைல் Path அடிக்கடி செலக்ட் செய்ய வேண்டிஇருக்கும். இன்னொன்று ஒருவேளை நாம் சிஸ்டத்தை பார்மட் செய்ய நேர்ந்தால் My Document-ல் இருக்கும் பைல்களை மறந்து விட்டு பார்மட் செய்து விடுவோம். இதனை தீர்க்க ஒரு வழி உள்ளது .
1)ஸ்டார்ட் கிளிக் செய்து வலது ஓரத்தின் மேல் டாகுமெண்ட் என தெரிவதில் அல்லது My Computer Open செய்து இடது ஓரத்தில் டாகுமெண்டில் ரைட் கிளிக் செய்து Properties செலக்ட் செய்யவும்.
2) இவ்வாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் Open File Location கிளிக் செய்யவும்.






3)பின் இப்படி விண்டோ ஓபன் ஆகும். அதில் தோன்றும் விண்டோவில் டாகுமெண்டில் ரைட் கிளிக் செய்து Properties செலக்ட் செய்யவும்.
4)அதில் தோன்றும் விண்டோவில் Location கிளிக் செய்யவும். அதில் C:\ என்றிருக்கும் இடத்தில் D:\ என டைப் செய்து Move கிளிக் செய்யவும் .
இவ்வாறு ஒரு செய்தி தோன்றும் .அதில் Yes கொடுக்கவும் .
பின் Documents இப்படி மாறி இருக்கும்.
இனி உங்கள் எந்த பைல் ஆனாலும் பாதுகாப்பாக "D" Drive Document- ல் நேரடியாக சேமிக்க படும். "C" Drive பார்மட் அடித்தாலும் உங்கள் பைல் பாதுகாப்பாக "D" Drive Document- ல் இருக்கும் .  Picture சேமிப்பும் இது மாதிரித்தான்.
மை டாகுமெண்ட்ஸ் போல்டரை சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவ்-க்கு மாற்றுவதன் மூலம் சிஸ்டம் வேகம் பெறும் வாய்ப்புள்ளது .
குறிப்பு : விண்டோஸ் எக்ஸ்பி -லும் இதே முறையில் செய்யலாம்

விஸ்டாவில் மைடாகுமெண்ட்ஸ் வழியை மாற்றியவர்கள்
web counter

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.