தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, December 20, 2009

bullet proof glass

படத்தில் கிளிக்கி பெரிதாக்கி தெளிவாக பார்க்கவும்.



வேறு ப்ளாக்கிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வதற்காக
துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பயன்படுகிறது.  துப்பாக்கி ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் [b]பாலிக்கார்பனேட் என்றபிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒருஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும். பாலிக்கார்பனேட் என்பதுஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும். துப்பாக்கியின் சக்திக்கு ஏற்பகண்ணாடியின்தடிமன்வேறுபடும்.அதிகப்பட்சமாக50மி.மீதடிமன்
கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.[/b]பிஸ்பினால்-A(bisphenol-A),சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றைவினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள். மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தல் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்
குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம் துப்பாக்கிகுண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல்விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும்பரவிகுறையும்,அதற்குஅடுத்துள்ளபாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும்விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டுதுளைக்கும் சக்தி இழக்கும். கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும். வழக்கமானகுண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால்இக்கண்ணாடிப் பொருத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம்நவீனவகையிலானலேசானஎடைக்கொண்டஒரு கண்ணாடிபயன்படுத்தப்படுகிறது.இக்கண்ணடியில்சிலிக்கவுடன்
அலுமினியம்ஆக்சைடு,நைட்ரேட்ஆகியவைகலந்துஇருக்கும்,இதனால்அதுகுறைந்தஎடையில்அதிககடினமாகஇருக்கும்.இக்கண்ணாடியை
அலுமினியம்ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள். ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்புறமாக இன்னும்தடிமனான இரும்பு தகடுகளும் பொருத்தப்பட்டு இருக்கும், காரின்அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொருத்தி இருப்பார்கள்.

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.