தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, November 1, 2010

பதிவு திருடர்கள் ஒரு அலசல் ....

சில பேர் ப்ளாக் எழுதுபவரை பார்த்து எப்பா எவ்வாளோ அறிவுள்ள ஆளு என்னமா எழுதுறான்யா அப்படின்னு நினைப்பாங்க .அப்படி அவ்வளோ அறிவு இருந்தா ஏங்க ப்ளாக் எழுதணும் .பில்கேட்ஸு மைக்ரோசாப்ட் கம்பெனிக்கு மென்பொருள் எழுத சென்று விடமாண்டங்க. நாம் படித்த ,தெரிந்த அனுபவ அறிவை பகிரும் ஒரு வலைதளமே தவிர இதற்கு கூகுள் நிறுவனம் நாளையே பணம் வசூல் செய்தால் பாதி ப்லாக்கர் காணமால் சென்று விடுவர் .ப்ளாக் எழுதுபவர் முதலில் செய்வது என்ன பதிவு போடுவது என கூகுளில் தேடி அதை நமக்கு அளிப்பார்கள் .சில பேர் சில ஆங்கில வலைதளங்களை மொழிபெயர்த்து அதை தமிழில் எழுதுவார்கள் .சிலர் இலவச மென்பொருள் தளங்களை அலசி நமக்கு தேவையான மென்பொருளை பதிவிடுவார் . சிலர் தனது சொந்த கவிதை ,கதைகளை பதிவிடுவர்.ஆனால் அந்த வலைதளங்களுக்கு அவ்வளவு வரவேற்ப்பு இருக்காது .தனக்கு தெரிந்த தொழில் சம்பந்த பதிவுகளை சிலர் பதிவிடுவர் .அவர்களை உண்மையில் பாராட்டலாம் .(சூர்யா கண்ணன், வேலன் ,எம் .டி. கான் ,கோமணி வர்மா .....etc)
ஆனால் வலைத்தளத்தில் ஒரு போராட்டமே நடக்கிறது .என் பதிவை அவன் காப்பி அடித்து விட்டான்,இவன் என் பதிவை திருடி விட்டான் என ஒரே குற்றசாட்டுத்தான். உண்மையில் சராசரியாக எல்லாருமே ஒரு வகையில் பதிவு திருடர்களே ,தன் சொந்த கருத்துக்களை எழுதுபவர்களை தவிர. 
    இன்டர்நெட் எனும் ஒரு அறிய படைப்பை கொடுத்தவர் கூட தன் படைப்புக்கு உரிமம் கோரவில்லை என கேள்வி பட்டேன் .அப்படி ஒரு நிலை இருந்தா இப்ப நிலைக்கு அவர் எவ்வளோ பெரிய பணக்காரர் ஆகி இருப்பார் .ஆனா நாம ஒரு பதிவு சண்டையே நடத்தி கொண்டிருக்கிறோம்  அட பதிவு திருடர்களும் என்னன்னா அட்டுழியம் செய்றாங்கப்பா .என்னோமோ பக்கம் பக்கமா தான் உக்கார்ந்து எழுதியது மாதிரி எழுதுவாங்க .அட உண்மையான  பதிவர் பெயரை போட்டு எழுதினால் என்னவாம்.
நான் ப்ளாக் எழுதும் போது ஓன்று கூட தெரியாது .சும்மா போட்டோ பதிவிட்டேன் .பின்தான் சிலர் வலைத்தளங்களை படித்து என் ப்ளாக் பற்றிய அறிவை வளர்த்து கொண்டேன் .அமுதன் என்பவர் ப்ளாக்கை படித்து அதை அப்படியே என் வலைத்தளத்தில் அவர் போட்டோவோடு பதிந்து என் கதையும் அதோடு எழுதி இருந்தேன் . உங்கள் பதிவு உண்மையாக நீங்களே யோசித்து பதிவிட்டு இருந்தால் எத்தனை பேர் காப்பி அடித்தாலும் உங்கள் பதிவு நிலைத்து பேர் வாங்கும் ,அதில் ஐயமில்லை.
    பதிவிட வரும் போது நாம் ப்ளாக்கை எவ்வறாவது படிக்க மாண்டார்களா 
என எண்ணுவோம் ,ஆனால் சில நாள் கழித்துநாம் தாம் ப்ளாக்கரின் ராஜா என தலைக்கணம் வந்து விடும் .நாம் தளத்திற்கு வந்த நண்பர்கள் வட்டத்தினால்தான் நாம் இவ்வளோ பெரிய இடத்தை அடைந்தோம் என என்ன மாண்டார்கள் . நமக்கு சொல்லித்தந்த ஆசிரியர் அதே பள்ளியில் மாத உழியத்திற்கு உழைத்து கொண்டிருப்பார் .அவர் ஒரு போதும் என்னிடம் படித்த மாணவன் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறான் என புலம்பினால் என்னன்னு சொல்வது . அதே மாதிரி பிரபல பதிவர்கள் சில பேர் என் பதிவை இட்டு பணம் சம்பாதிக்கின்றனர் என ஒருவரை ஒருவர் சொல்லிகொள்வது நகைப்பை வரவைக்கிறது . சிலர் மற்றவர் பதிவை படித்து அதை தன் சொந்த உரை நடையில் எழுதுகிறார்கள்.பிரபல பதிவரை நீங்கள் புகழ்ந்து கருத்துரை இட்டு பாருங்கள் .அவர் அதை மனதார ஏற்று கொள்வார்.ஆனால் உங்கள் தத்தில் இதை இப்படி வைத்தால் நன்றாக இருக்கும் என எதிர் மறையாக எழுதி பாருங்கள் ,உடனே உங்கள் கருத்துரைக்கு பதில் இருக்காது அல்லது அது நீக்க பட்டிருக்கும்.மொத்தத்தில் எல்லோரும் ப்ளாக் எழுத நினைப்பது நமக்கு தெரிந்த ,படித்த ,கேட்ட,பார்த்த விசயங்களை எல்லோரும் அறிந்து பயனடைய மட்டுமே,இதில் யார் எழுதி யார் படித்து பயனடைந்தாலும் பயனடைவது நாம் தமிழன்தானே .உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் இதற்கென பட்டபடிப்பு தேவையில்லை .மற்றவரை பற்றி கவலை படமால் எழுதுங்கள் .காப்பி அடித்தால் தயவு செய்து உரிய பதிவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுங்கள் .அல்லது அவரின் லிங்க் முகவரியை அளியுங்கள் .படிப்பவர்கள் மேட்டரைத்தான் பார்ப்பார்களே தவிர அவர்களுக்கு கருத்துரை அளிக்க கூட நேரமில்லை .ஒரு பதிவை நூறு பேர் படித்தால் நான்கைந்து பேர்தான் வாக்களிப்பார்கள் .சேவைதான் முக்கியம் .     
            எல்லோரும் போகர் சித்தரை போல் இருங்கள் உங்களுக்கு தெரிந்ததை நாம் நண்பருக்கும் அறியசெய்யுங்கள் .வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!! ஓங்குக தமிழன் புகழ் !!
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 
(இந்த பதிவு சில பதிவர்களை புண்படுத்தும்படி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)  
                **நேரம் கிடைக்கும் போது இந்த வாதம் தொடரும்**

இது தமாசல்ல 

8 comments:

வேலன். said...

எல்லோரும் ப்ளாக் எழுத நினைப்பது நமக்கு தெரிந்த ,படித்த ,கேட்ட,பார்த்த விசயங்களை எல்லோரும் அறிந்து பயனடைய மட்டுமே,இதில் யார் எழுதி யார் படித்து பயனடைந்தாலும் பயனடைவது நாம் தமிழன்தானே .உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் இதற்கென பட்டபடிப்பு தேவையில்லை .மற்றவரை பற்றி கவலை படமால் எழுதுங்கள் .காப்பி அடித்தால் தயவு செய்து உரிய பதிவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுங்கள் .அல்லது அவரின் லிங்க் முகவரியை அளியுங்கள் .படிப்பவர்கள் மேட்டரைத்தான் பார்ப்பார்களே தவிர அவர்களுக்கு கருத்துரை அளிக்க கூட நேரமில்லை .ஒரு பதிவை நூறு பேர் படித்தால் நான்கைந்து பேர்தான் வாக்களிப்பார்கள் .சேவைதான் முக்கியம் . //

super palani sir.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Sulaxy said...

இது உங்க சொந்தப்பதிவா??? எங்கயும் திருடலயே.... சும்மா தமாசு...

Carfire said...

nee (neenga) rompva nallvan (da)............

Jiyath said...

உண்மையை கூறினீர்கள் ஐயா. வழங்கியவர் http://jiyathahamed.blogspot.com/

PalaniWorld said...

@வேலன்.
என் வலைதளத்திற்கு வந்து முதன் முறை வாக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார்.உங்களை போன்ற பிரபல பதிவர்கள் பதிவுகளை காப்பி அடிப்பதும், காப்பி அடித்தாலும் உங்கள் பெயரை போடமால் எழுதுபவரை பற்றியும் எழுத வேண்டும் போல் மனதில் தோன்றியது அதான் இப்படி ஒரு தாக்குதல்.

PalaniWorld said...

@Admin
நானும் சில பதிவர்களின் பிடித்த பதிவுகளை அவர்கள் பெயரோடு மறுபதிவிட்டுள்ளேன்.பார்க்க
http://palanirahul.blogspot.com/search?updated-max=2010-10-27T20:07:00%2B05:30&max-results=5
ஆனால் இது நான் யோசித்து மனதில் உள்ளதை எழுதி உள்ளேன் .ஆனாலும் உங்களுக்கு குசும்புதான்.

PalaniWorld said...

@Karthi S
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .வாழ்க பல்லாண்டு.

PalaniWorld said...

@Jiyath ahamed
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .வாழ்க பல்லாண்டு.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.