தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, April 21, 2010

எது சிறந்த பக்தி

ஒரு ஊரில் குப்பன்,சுப்பன் என இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் .ஒரு நாள் பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வர முடிவெடுத்து வீட்டை  விட்டு கிளம்பினர் .வெகு நெடு பயணத்திற்கு பின் சற்று இளைப்பாறி விட்டு செல்ல நினைத்தனர்.  அருகில் ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது .அதில் மீன்கள் துள்ளி துள்ளி விளையாடி கொண்டிருந்தது .இதை பார்த்த சுப்பன் டேய் குப்பா வயிறு பசி உயிர் போகிறது . இந்த மீன்களை பிடித்து உண்டுவிட்டு சற்று இளைப்பாறி விட்டு செல்லலாம் என்றான் .குப்பனோ அடேய் சுப்பா பூஜைக்கு நாழியாகி விட்டது இப்போ சென்றால் தான் சாமி  பூஜை பார்க்க சரியாக இருக்கும் ,வந்து வயிறார சாப்பிடலாம் என்றான் . டேய் என்னால சாப்பிடமா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது .வேணுமுன்னா நீ போ நான் மீனை சுட்டு சாப்பிட்டுட்டு பிறகு வருகிறேன் என்றான் .
குப்பன் உடனே கிளம்பி விட்டான்.சுப்பன்  மீன் பிடிக்கும் வேலையில் இறங்கி விட்டான் .குப்பன் கோவிலை அடையவும் பூஜை ஆரம்பமாகிவிட்டது. நல்லவேளை சரியான நேரத்திற்கு வந்தடைந்து விட்டோம்.பாவம் சுப்பன் பூஜை பார்க்க கொடுத்துவைக்கவில்லை என நினைத்தான். சுப்பனோ மீன் சுட்டு சாப்பிட தயாரானான் .
பின் சுப்பன் தன் மனதில் 'சே' என்ன மனுஷன் நானு ,ஒரு சாண் வயித்துக்காக இப்படி பூஜை கூட பார்க்கமால் இப்படி மீன்  பிடித்து சாப்பிட இருந்து விட்டேனே என மனதுக்குள்  பொருமினான் .குப்பனோ பூஜை பார்த்து கொண்டே மனதில் இந்நேரம் சுப்பன் மீன் பிடித்து விட்டிருப்பான் ,இந்நேரம் அதை கழுவி நெருப்பில் சுட்டுரிப்பான் ,நல்ல வயிறார சாப்பிட்டிருப்பான் என நினைத்தான்.
சுப்பனோ சாமிக்கு இந்நேரம் பாலபிசேகம் ஆகி இருக்கும்  ,
சந்தானபிசேகம்ஆகிஇருக்கும்,பஞ்சாமிர்தம்அபிசேகம்ஆகிஇருக்கும் என நினைத்தான்.கோவிலில்  குப்பன் மனது மீனிலும் ,சுப்பன் மனது சாமி மீதும் மாறி மாறி இருந்தது. 

நீதி:-நாம் மனதில் எண்ணுகிற எண்ணத்திற்கு ஏற்பதான் செயலில் ஈடுபட வேண்டும் .எண்ணத்திற்கு புறம்பாக வேலை செய்தால் மனம் அலைபாயும் .செய்யும் வேலையுலும் கவனம் குறையும் .செய்த வேலையுலும் முழு திருப்தி ஏற்படாது .

ரசிக்க .... இது மாதிரி பக்தி மீட்டர் வந்தால் தான் நல்லாயிருக்கும்.

1 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.