கணினியில் ஒரு நோட்பேட் ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள் .அதில் .LOG என டைப் செய்யுங்கள்.பின் அதை எதாவது ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள்.பின் ஒவ்வொரு முறையும் அதே Notepad-ஐ ஓபன் செய்து நீங்கள் எழுத வேண்டியதை டைப் செய்து பின் சேவ் செய்யுங்கள் .இப்போது அது தானாகவே சேவ் செய்த நேரம் மற்றும் தேதியை அதில் காண்பிக்கும் .இவ்வாறு தினமும் நீங்கள் அதே Notepad-ஐ ஓபன் செய்து நமது அன்றைய நிகழ்வுகளை எழுதி வைத்து கொள்ளலாம்.
ஆனால் இதிலும் ஒரு குறை தமிழில் எழுதி சேவ் செய்தால் தமிழ் பான்ட் வர மறுக்கிறது.எனவே கீழுள்ள முறையை பயன்படுத்தவும்.
இந்த டைரி ஒரு எக்ஸ்செல் பைல் ஆகும் .இதில் உள்ள காலெண்டரில் எந்த வருடம் வேண்டுமோ அதை கொடுத்தால் அந்த வருடத்தின் அனைத்து மாதங்களும் காட்டும் .அதற்கடுத்த பகுதிகளில் ஜனவரி முதல் டிசம்பர் வரை கீழே கொடுக்கபட்டிருக்கும் .அதில் எந்த மாதம் வேண்டுமோ அதை கிளிக் செய்து அதில் வரும் பக்கத்தில் தேதி வாரியாக எழுதி கொள்ளலாம் .பின் இவ்வாறு தினமும் எழுதி சேவ் செய்து கொள்ளலாம் .
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.