தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, September 28, 2010

இந்த பதிவு சத்தியமாக பதிவு திருடர்களுக்கு அல்ல!!!!

இந்த முறையை கல்வி அறிவுக்கு மட்டும் பயன்படுத்தவும் .
நான் போட்டோஷாப் கற்க ஆசைப்பட்டு பலதளங்களை படித்து கற்று வருகிறேன்.இதற்கு இணைய இணைப்பில்  இருந்து கொண்டே படித்து செய்ய வேண்டியுள்ளது .இதற்கு UnLimited இணைய  இணைப்பு அவசியம் .எனக்கு பரவாயில்லை .ஆனால் சில பேர் வரையறுக்கப்பட்ட லிமிட்டுக்குள் பயன்படுத்துவார்கள் .அவர்களுக்கு இது உதவும்.  
முதலில் மரியாதைக்குரிய திரு கான் அவர்கள் என்னை மன்னிக்கவும்.ஏன் எனில் அவர்கள் வலைத்தளத்தில் படிக்கும் போது அந்த வலைபக்கத்தை சேமித்து பின் இணைய இணைப்பில்லாத நேரத்தில் அதை செய்து பார்க்க நினைத்தேன் . மௌசை ரைட் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு எச்சரிக்கை செய்தி வந்தது . 
      எப்படி சேமிப்பது என நினைத்த போது தான் இந்த முறையில் நான் சேமித்தேன் .நீங்களும் முயற்சித்து பாருங்கள் .
முதலில் நீங்கள் EPIC BROWSER தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின் அதை ஒபன் செய்து அதில் நீங்கள் சேமிக்க நினைத்த வலைதளத்தை டைப் செய்து திறந்து கொள்ளவும்.பின் ப்ரௌசெரின் இடது பக்கத்தில் வரிசையாக பல டூல்ஸ் காணப்படும் .அதில் Snippets எனும் டூல் கத்திரிகோல் வடிவில் காணப்படும் .அதன் மீது கிளிக் செய்ய கீழ்க்கண்டவாறு தெரியும் .
பின் நீங்கள் திறந்த பக்கத்தில் தெரியும் Text அல்லது பட வடிவில் உள்ள அனைத்தையும் ஜஸ்ட் அதன் மீது மௌசின் இடது பட்டனை அழுத்தியவாறு இடது பக்கத்தில் உள்ள காலி இடத்தில் இழுத்து கொண்டு விட்டு விடவும் . 
கீழுள்ள படத்தை பார்க்கவும் 
இவ்வாறு எல்லாத்தையும் ஒரு போல்டெர் உருவாக்கி அதில் சேமித்து கொள்ளவும் ,அல்லது இழுத்து கொண்டு விட்ட பைல் சேமித்த உடன் அதை இருமுறை கிளிக் செய்து ஓபன் செய்யவும் .பின் தோன்றும் படத்தில் மௌஸில் வலது கிளிக் செய்து அதில் Image save as கிளிக் செய்து தேவையான இடத்தில் சேமித்து கொள்ளவும்.
கீழுள்ள படத்தை பார்க்கவும் .
 நான் சேமித்த படங்களை கீழே பாருங்கள்.
 இனி நீங்கள் இணைய இணைப்பின்றி மெதுவாக பார்த்து படித்து செய்து பார்க்கலாம் .
மேலும் சில வழிமுறைகள் 
1.திறந்த வலைபக்கத்தில் Ctrl +C அழுத்திவிட்டு பின் ஒரு வோர்ட் டாகுமென்ட் ஓபன் செய்து அதில் Ctrl+V அழுத்தி விட்டால் வலைபக்கம்  சேமிக்கப்படும்.பின் அதில் நீங்கள் தேவையற்ற பகுதிகளை எடிட் செய்து கொள்ளவும் .
2. Scroll Snipping டூல் மூலம் தேவையான இடங்களை ஸ்க்ரோல் செய்து சேமித்து கொள்ளலாம். 
       பதிவர்கள் மீண்டும் ஒருமுறை  என்னை மன்னித்து கொள்ளவும். என்னதான் நாம சில தடுப்பு  முறைகளை கையாண்டாலும் திருடானாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

இது தமாசல்ல 

2 comments:

Vengatesh TR said...

.நீங்கள், நல்லவரா கெட்டவரா ?

.உங்களால், நான் கெட்டுவிட்டேன், இப்படி தரவிறக்கி படித்து !!



.தகவலை பகின்றமைக்கு நன்றி, நண்பரே !

PalaniWorld said...

@சிகப்பு மனிதன்
நண்பா வரவுக்கு நன்றி .ப்ளாக் என்பது ஒரு பகிர்தல் தளம் தவிர நம் பதிவை நாமே படிக்க அல்ல .இதில் போய் அப்படி இப்படி தடை செய்தால் அது என்ன நியாயம்.யார் எப்படி திருடி போட்டாலும் பயன் பெறுவது நம் தமிழன் தான்.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.