தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, November 10, 2010

WIN-7 ல் AM,PM கொண்டு வர

சாதாரணமாக  விண்டோஸ் செவன் கணினியில் சிஸ்டம் ட்ரே(System Tray) வலது மூலையில் நேரம் மற்றும் அன்றைய தேதியை காட்டும்.ஆனால் அதில் am, pm ஐ காட்டாது .அதை எப்படி கொண்டு வருவது என பார்ப்போம்.
1.முதலில் ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் Run என டைப் செய்து திறக்கும் பாக்ஸில் intl.cpl  என டைப் செய்து ஓகே கொடுக்கவும்.அதில்
Region and Language Options  விண்டோ ஓபன் ஆகும்.
2. அதில் "Additional Settings" பட்டனை கிளிக் செய்யவும் .
3.அதில் "Time" tab-ல் "Long time"-ல் HH:mm:ss என தெரிவதில் tt என சேர்க்கவும்.அதாவது HH:mm:ss tt என வரவேண்டும். 
4.உங்களுக்கு 12 hour format (06:30 instead of 18:30)வேண்டுமென்றால் அந்த வேல்யுவை hh:mm:ss tt என மாற்றவும்.பின் ஓகே பட்டனை கிளிக் செய்ய System Tray-ல் நேரத்திற்கு பக்கத்தில் உங்களுக்கு AM,PM வந்திருக்கும். 
(NOTE: If you want to hide Time in system tray, put a blank space in "Long time" text box under "Time" tab)

2 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

இண்ட்லியில் இணையவில்லையா
ஓட்டுபட்டையைக் காணவில்லை

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

PalaniWorld said...

@மாணவன்
வருகைக்கு மிக்க நன்றி .விரைவில் இணைய வேண்டும் நண்பா.தொடர்ந்து உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.