தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Thursday, September 10, 2009

சிந்தித்து செயல்படு

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். “கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?”, என்றார். தாராளமாகக் கேட்கலாம்”, கடவுள். நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?” “1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார். சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?”. ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்”. . அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா”, மிஸ்டர் எக்ஸ்.
கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார், “என் அருமை மகனே! ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காத்திரு. உனக்கு உன் கண்ணோட்டத்தில் ஒரு கோடி ரூபாயை - என் கண்ணோட்டத்தில் 50 பைசாவைத் தருகிறேன்”.
மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது. வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள். பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள். அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது. அன்பான மனைவிக்கு, எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன். இப்படிக்கு உன் அன்புக் கணவன் இறந்து போன கணவன் e-mail அனுப்பி தன்னையும் வரச்சொன்னதாகப் பிழையாக நினைத்து மயக்கம் போட்டவளை என்னவென்று சொல்வது? அஞ்சலை அனுப்பியவரது முகவரியைப் படிக்காமல் விட்டது அவளது தவறுதானே.

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.