விஸ்டாவில் Snipping Tool பற்றி அறியாதவர்களுக்கு மட்டும்
விண்டோஸ் விஸ்டாவில் ஒரு அருமையான டூல் உள்ளது.இதன் பெயர் SNIPPING TOOL.இதனை கொண்டு எந்த ஒரு படத்தையும் (IMAGE) கட்டிங் செய்து எடுக்கலாம் .Print Screen எனவும் அழைக்கலாம் .
நமது ஸ்க்ரீனில் வரும் எந்த ஒரு பக்கத்தையும் முழுசாகவோ அல்லது தோன்றும் விண்டோ மட்டும்மோ அல்லது இஷ்டபடி கோணல்மாணலாகவோ வெட்டி எடுக்கலாம் .
மேலும் சில படங்கள் இணையத்தில் தரவிறக்கம் ஆகாது ,அதுபோன்ற சமயங்களில் இந்த டூலை கொண்டு படத்தை நமது இஷ்டபடி வெட்டி எடுத்து விடலாம்.
இணையத்தில் இதை போன்று பல டூல் கிடைக்கும் .ஆனால் நம்மிடமே இருக்கும்போது வேறது எதற்கு .
நான் கூட இந்த முறையில் தான் PalaniWorld-ல் படங்களை வெட்டி இடுகிறேன்.
இதனை பெற இவ்வாறு செல்லவும் ,
(1)Start-> (2)All programs->(3)Accessories->(4)Snipping Tool
அல்லது
Open "C" Drive->Windows->System32->Snipping Tool
இதில் நான்கு முறைகளில் வெட்டி எடுக்கலாம்.
1.Rectangular Snip
2.Free-form Snip
3.Window Snip
4.Full-screen Snip
இது பற்றி படித்து தெரிந்தவர்கள்
2 comments:
VANAKKAM PALANI
Snipping Tool ENNODA PC IEL ILLAI
நண்பரே நீங்கள் இதில் http://dc118.4shared.com/download/175550603/9ecaa126/picpick_inst.exe இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கவும்.
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.