தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, July 3, 2010

உடல் உறுப்பு தானம் பற்றி அறிய

ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் ,திசுக்களையும் தானமாக பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள் .ஒரு மனிதன் பத்து நபர்களுக்கு தன் உறுப்புகளை தானமாக தந்து உதவலாம் . 
ஒவ்வொரு உறுப்பையும் முறைப்படி பாதுகாக்க வேண்டும் .அப்படி பாதுகாக்கும் போது அந்த உறுப்புகள் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் தாக்குப்பிடிக்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

Ø  தோல் ,எலும்பு ,இதய வால்வுகள் -  5 ஆண்டுகள் வரை 
Ø  கண்விழித்திரை (கார்னியா ) – 10 நாட்கள் 
Ø  சிறுநீரகம் – 3 நாட்கள் 
Ø  கணையம் – 20 மணி நேரம் 
Ø  கல்லீரல் – 18 மணி நேரம் 
Ø  இதயம் ,நுரையீரல் – 5 மணி நேரம் 
Ø  எலும்பு மஜ்ஜை - காலஅளவு மாற கூடியது 
யார் யார் தானமாக கொடுக்க முடியும் ?
இதய துடிப்பு நின்று போதல் ,நுரையீரல் செயல்பாட்டை இழத்தல், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் (மூளை செயல் இழந்து போய் இதயம் மட்டும் துடித்து கொண்டு இருப்பதை 'மூளைச்சாவு' என்பர் .) இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து மட்டும் 25 வகையான உறுப்புகளை தானமாக பெற முடியும் .
எந்த விதமாக மரணம் நேர்ந்தாலும் இறந்தவர்களின் உடலில் இருந்து எலும்புகளையும் ,திசுக்களையும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  

2 comments:

vishba said...

கலகிட்டிங்க , நண்பரே
இன்றுதான் பார்த்தேன் உங்களது வலை தளத்தை
மிகநன்று !! மேலும் வளர வாழ்த்துக்கள் !!!
தங்கள் புதிய நண்பன் @@@@@@(விஷ்பா)@@@@@
தங்களது மின் அஞ்ச்ஹல் (இ மெயில்) முகவரி தரவும் .... நன்றி !!!!! (bala.sat.love@gmail .com)

PalaniWorld said...

@vishba
தாங்கள் என் வலைதளத்தை பார்வை இட்டமைக்கு மிக்க நன்றி .மேலும் தங்களுடைய நல்கருத்துக்களையும் வாக்குகளையும் பதிவு செய்யுமாறு விரும்புகிறேன் .என் மெயில் ID:-palanihhml2007@gmail.com.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.