தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, August 6, 2010

இந்திய ரூபாய்க்கான அடையாளம்

நன்றி தினமலர் 
(ஏற்கனவே தினமலரில் வந்த செய்திதான்,ஆனால் இதை நான் சில படங்களுடன் மறுபதிவிட்டுள்ளேன் )
அமெரிக்க டாலர், இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், யூரோ, யென் ஆகிய கரன்சிகளுக்குத் தனி அடையாளம் இருப்பதைப் போல, இந்திய ரூபாய்க்கும் தனி அடையாளம் வேண்டுமென வெகு நாட்களுக்கு முன்பே அரசு எண்ணியது. அதனை வடிவமப் பதற்கான போட்டி நடத்தி, இறுதியில் தமிழகப் பொறியாளர் (உதயகுமார் ) வடிவமைத்த அடையாளத்தினை அரசு ஏற்றுக் கொண்டது.
இந்த அடையாளம், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு, அதிகாரப் பூர்வமாக வருவதற்குச் சில மாதங்கள் ஆகும். இந்திய அரசு, இது குறித்து, யூனிகோட் அமைப்பிற்கு எழுதி, அந்த அமைப்பு இதற்கென ஒரு ஸ்லாட் ஒன்றைத் தன் யூனிகோட் பாண்ட் பைலில் ஒதுக்கிய பின்னரே, அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இது கிடைக்கத் தொடங்கும்.
அதுவரை என்ன செய்திடலாம்? இந்த அடையாளத்தினை கம்ப்யூட்டரில் எப்படி அமைப்பது? இதற்கான பாண்ட் பைலை போரோடியன் (Foradian) என்னும் நிறுவனம் தன் இணையதளத்தில் தந்துள்ளது. இதனை இலவசமாகவும் வழங்குகிறது. இதன் தளத்திலிருந்து, இந்த பாண்ட் பைலை இறக்கி, விண்டோஸ் போல்டரில் உள்ள பான்ட்ஸ் போல்டரில் இதனைப் பதிந்து கொண்டால் போதும்.

பின்னர் இந்த அடையாளத்தினை அமைக்க, முதலில் இந்த பாண்ட் வகையை, வேர்ட் ப்ராசசரில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எழுத்துவகை பைலின் பெயர் ருபி போரோடியன் (Rupee Foradian)  கீ போர்டில் இடது மேல் மூலையில், எண் 1க்கான கீ முன் உள்ள கீயில் இது தரப்பட்டுள்ளது. இந்த கீயை அழுத்தினால், இந்த ரூபாய் அடையாளம் டைப் செய்யப்படும். இந்த பாண்டில் மற்ற ஆங்கில எழுத்துக்களையும் தட்டச்சு செய்திடலாம். 
இந்த பைலை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://blog.foradian.com/?c=1
நேரடி தரவிறக்கசுட்டிஇங்கே கிளிக் செய்யவும்


சும்மா தமாசுக்கு....நமக்கு தெரிஞ்சதெல்லாம் இந்த கீ பட்டன் மட்டும்தான்.

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.