தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, October 25, 2010

சிரித்து வாழுங்கள் .....

ஒருமுறை ராமுவின் வகுப்பு ஆசிரியர் ராமுவின் தாய்,தந்தையை அழைத்து வரும்படி கூறினார் . ராமுவின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர் .பிரின்சிபால் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர் .அவர்களின் மகனை பற்றி ஒன்றன் ஒன்றாக குறைகளை கூறி கொண்டுஇருந்தார் .இதெல்லாம் எல்லா பிள்ளைகளும் பண்ண   கூடியதுதான் .வேற ஒன்றுமில்லைதானே என பெற்றோர் கூறினர் . அதுகூட பரவாயில்லைங்க .மற்ற பிள்ளைங்களோட பேனா , பென்சில் எடுத்துட்டு போயிடிறான் .இதுக்கு என்ன பதில் சொல்லுங்க என பிரின்சிபால் கூற ,அதற்க்கு பையனின் தந்தை அதாங்க எனக்கும் புரியலை.நானும் ஒவ்வொரு வாரமும் பேனா ,பென்சில் ரப்பர் என ஆபிசிலிருந்து எடுத்து கொண்டு வந்து கொடுக்கிறேன்  மறுபடியும் மற்றவர் பொருளை எடுத்து வருகிறான் ,என்ன பண்ண என்க பிரின்சிபால் திகைத்துபோனார்.   
                                                   ********************
ஒரு முறை ராமுவின் தந்தை ஒரு லாட்டரி டிக்கெட் நூறு ரூபாய்க்கு வாங்கினார்.அதற்கு பரிசு தொகை ஒரு கோடி ரூபாய் விழுந்தது.அவர் டிக்கெட்டை எடுத்து கொண்டு லாட்டரி கம்பெனிக்கு சென்றார்.அவர்கள் ராமுவின் டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு பரிசு தொகைக்கான காசோலையை வழங்கினர் .
ராமு அதை பார்த்து விட்டு என்னை என்ன முட்டாளாக்க பார்க்கிறேர்களா .ஒரு கோடி பரிசுன்னு எம்பது லட்சம் தான் எழுதி இருக்கு என சண்டையிட்டார் .மீதியை வருமான வரிக்கு செலுத்தி விட்டோம் என கூறியும் அவர் நம்பும்படி இல்லை. இல்லை நீங்க ஏமாற்ற பார்க்கிறேங்க .இதெல்லாம் என்னால ஏற்றுகொள்ள முடியாது .நான் லாட்டரியை திரும்ப தருகிறேன் நீங்க என் நூறு ரூபாயை திரும்ப தாங்க. விட்டா என் பணத்தை முழுசா சாப்பிட பார்க்கிறேங்க என முனகினார்.
வெண்ணிலா கபடி குழு காமெடி மாதிரி ...ம்... ம் அதெல்லாம் முடியாது ,நீங்க தப்பாட்டம் ஆடுறேங்க .கோட்டை அழிங்க,மறுபடி நான் சாப்பிடறேன் என்கிற மாதிரி ராமு புலம்பினார். 

சும்மா தமாசுக்கு ..பார்த்து கண்ணா மெதுவா 

2 comments:

மாணவன் said...

நகைச்சுவை அருமை நண்பரே
ரசித்துசிரித்தேன் தொடருங்கள்
இந்த ”சும்மா தமாசுக்கு ..பார்த்து கண்ணா மெதுவா”
செம கலக்கல் என்கிருந்துதான் எடுக்கிரீங்களோ சூப்பர்

நேரமிருந்தால் இந்த மாணவனின் தளத்திற்கும் வருகை புரிந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
http://urssimbu.blogspot.com
நன்றி
நட்புடன்
மாணவன்

PalaniWorld said...

@மாணவன்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே .தங்கள் தளத்தையும் பார்வையிட்டேன் .வெகு அருமை.மாணவன் என்று பெயரை வைத்து கொண்டு சிறந்த தேர்ந்த ஆசிரியரை போல் எழுதி இருக்கீங்க

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.