தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, January 4, 2011

உஷார்.....எச்சரிக்கை பகுதி

மனிதனுக்கு தூக்கம் எந்தளவுக்கு முக்கியம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.அதில் முக்கிய பங்கு நாம் பயன்படுத்தும் தலையணையிலும் உள்ளது. தலையணை மந்திரம் கேள்வி பட்டிருப்போம்.தலையணை சரியில்லை எனில் மந்திரம் எப்படி சரியா இருக்கும்.அந்தளவுக்கு தலையணைக்கு ஒரு உயர்ந்த இடம் உள்ளது.அதை சரியானதாக தேர்வு செய்து தூங்கினால் அதுவே நமக்கு சிறந்த தூக்கத்தை கொடுக்கும்.இல்லன்னா அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.எனக்கு நடந்த அனுபவத்தை இப்போ கூறுகிறேன்.
       நான் எப்போதுமே தரம் குறைந்த பொருள்களை வாங்குவதில்லை.ஆனாலும் ஒரு முறை என்னை அறியாமால் தவறு நடந்து விட்டது. ஒருமுறை எனது அம்மா சொந்த ஊரிலிருந்து டெல்லிக்கு எனது வீட்டிற்க்கு வந்திருந்தார்கள்.இங்கு சில நாட்கள் தங்கிவிட்டு பின் ஊர் திரும்ப நேரம் வரும் போது பொருள்கள் வாங்க மார்க்கெட் சென்றோம்.
ட்ரெயினில் எடுத்து செல்ல தலையணை வாங்க வேண்டும் என அம்மா கூற நான் ரப்பரில் உள்ள தலையணை வாங்க சென்றேன்.அப்போது பிளாட்பாரம் கடையில் குறைந்த விலையில் தலையணை விற்று கொண்டிருந்தான்.  
 எனது அம்மா அதை வாங்கலாம் என சொன்னாங்க.சிறிதா பயணத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கு வாங்கு என கூறினார் . விலை குறைவாக உள்ளதால் தரமாக இருக்காது என நான் சொல்ல இரண்டு நாள் பயணம் தானே பரவாயில்லை கெட்டு போனால் தூர போட்டு கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள்.சரி என நானும் வாங்கி கொடுத்து விட்டேன்.அவர்களும் வாங்கி சென்று பயணத்திற்கு பின்னும் நன்றாக  உள்ளது என போன் செய்தார்கள்.
  ஒருவாரம் கூட சென்றிருக்காது .திடிரென ஒருநாள் போன் வந்தது.நீ சொன்னது சரிதான் அந்த தலையணை தரம் இல்லை.இன்று  படுத்திருக்கும் போது தலையணை உள்ளே ஏதோ குத்துவது போல் இருக்க அதை பிரித்து பார்த்த போது அதிர்ச்சியே வந்துவிட்டது என் அம்மாவுக்கு. அப்படி என்ன இருந்தது தெரியுமா? உள்ளே ரத்த கரையுள்ள காட்டன் பஞ்சுகளும்,ரத்த கரையுடைய ஊசியும் இருந்துள்ளன.அதை Recycle செய்து கூட பயன்படுத்தவில்லை .
இந்த ஈன பிறவி மனிதர்கள் காசுக்காக என்ன வேணும்னாலும்  செய்வாங்க என தெரிந்து கொண்டேன். எனவே நண்பர்களே காசு குறைவுதான் என தரமற்ற பொருள்களை வாங்காதீர்கள் .எதாவது ஒருவகையில் அது தரமற்றதாக இருக்கும். அதை விட அது உடல் நலனை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்         

5 comments:

மாணவன் said...

நல்ல ஒரு விழிப்புணர்வு தகவல்கள் தெளிவா சொல்லிருக்கீங்க நண்பரே

மாணவன் said...

//இந்த ஈன பிறவி மனிதர்கள் காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க என தெரிந்து கொண்டேன். எனவே நண்பர்களே காசு குறைவுதான் என தரமற்ற பொருள்களை வாங்காதீர்கள் .எதாவது ஒருவகையில் அது தரமற்றதாக இருக்கும். அதை விட அது உடல் நலனை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்//

உண்மைதான் நாம்தான் விழிப்புணர்வாகவும் உஷாராகவும் இருக்க வேண்டும்

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

மாணவன் said...

தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி....

PalaniWorld said...

@மாணவன்
நண்பரே இது போல் என் நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களும் அதிகம் .நாம் தான் உஷாராக இருக்க வேண்டியுள்ளது.

PalaniWorld said...

@டக்கால்டி
நண்பரே இது போல் நிறைய உள்ளது .அதை பற்றி மேலும் பின் வரும் பதிவுகளில் எழுத உள்ளேன்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.