தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Thursday, November 19, 2009

GOOGLE-ன் எல்லாம் பணத்திற்காக.....

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீனா அது
தங்களுக்கு சொந்தம் என்று புதிதாக சொந்தம் கொண்டாட கிளம்பியிருக்கிறது.

நமக்கு ஏன் வம்பு நமக்கு தேவை பணம்தான் என்பதை நிரூபித்திருக்கிறது கூகுள்.
http://maps.google.co.in இந்த இணைப்பு கூகுள் மேப்பின் இந்திய வெர்ஷன். இதில் Arunachal Pradesh என்பதை தேடிப்பாருங்கள். எங்கு இருக்கிறதென்று.

http://maps.google.com/ இந்த இணைப்பு கூகுள்  மேப்பின் இன்டர்நேஷனல் வெர்ஷன். இதில் Arunachal Pradesh என்பதை தேடிப்பாருங்கள்.

http://ditu.google.cn/ இந்த இணைப்பு கூகுள் மேப்பின் சீன வெர்ஷன். இங்கும் தேடிப்பாருங்க
ள்
புதுடில்லி: இன்டர்நெட்டில் தகவல் தேடுவோருக்கு கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றது கூகுள். இந்த வெப்சைட் தரும் தகவல்களை நம்புவோர் ஏராளம். ஆனால், இந்தியா மற்றும் சீனா விவகாரத்தில் தனது "நிறத்தை' கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில், இந்தியர்களை கூகுள் நிறுவனமும் ஏமாளியாக்கி வருகிறது. கூகுள் வெளியிட்டுள்ள கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்துhttp://maps.google.com வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்துhttp://ditu.google.com/  பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக, இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
                                                             *****நன்றி தினமலர்


ரசிக்க ...............கண்ணால் காண்பது மெய் தாங்க
கூகுளின் உண்மை முகத்தை இதன் மூலம் படித்து தெரிந்தோர் ....
web counter