தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Thursday, September 30, 2010

தகவல் தொழில்நுட்பத்துறை

இது ஒரு இந்திய அரசின் வலைத்தளமாகும் .
வலைதள  முகவரி :-www.ildc.gov.in/
அந்த வலைத்தளத்திலுள்ள தகவல்கள் இதோ
மொழி என்ற தடங்கல் இல்லாமல் மக்கள் கணினியுடன் ஊடாடுவதற்கான தகவல் செயல்முறை கருவிகள் மற்றும் நுட்பங்களை உருவாக்குவதே DITஇன் TDIL (இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி) திட்டத்தின் நோக்கமாகும். இந்திய மொழி தரவு மையம் www.ildc.gov.in மற்றும் www.ildc.in. வழியாக பொது மக்களுக்கு இந்த மொழி கருவிகளை கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த இலக்கை அடைய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது:
1. TDIL தரவு மையம் வழியாக இந்திய மொழி தொழில்நுட்பங்கள்/கருவிகள் விநியோகம் படிப்படியாக செய்யப்படுகிறது
2. உருவாக்கப்பட்ட கருவிகள், தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகளை கைப்பற்றுதல்
3. இருக்கும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழியாக மொழி தொழில்நுட்ப பகுதிகளில் அரசின் முயற்சிகளை பொதுவாக்கி விழிப்புணர்வைப் பரப்புதல்
4. கருவிகள் , வசதிகள், மென்பொருள் முதலியவற்றிற்கான இலவச பதிவிறக்குதலைப் பயனருக்கு எளிதாக்குதல்
5. மொழி தொழில்நுட்பத்தில் பொது-தனிப்பட்ட பங்காளர்களை ஊக்கமளித்தல்
6. குறிப்பிட்ட பயன்பாட்டு பகுதிகளின் நோக்கங்களை நிறுவுதல்
இந்த தளத்தில் தமிழ் என்ற பகுதியை கிளிக் செய்து அதில்  பதிவிறக்கங்கள்  என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.

இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கி கொள்ளலாம் .அதிலும் உங்கள் குழந்தைகளுக்கான தமிழ் நர்சரி பாடல்கள் ஆடியோ  வடிவில் ஜிப் பைலாக கிடைக்கும் .தரவிறக்கி  ஓபன் செய்து அதில் nursery.exe கிளிக் செய்து ஓபன் ஆகும் விண்டோவில் பாடல்கள் தெரியும் .அதை ப்ளே செய்து கேளுங்கள்.
தரவிறக்க முகவரி:-Click Me

இது தமாசல்ல

Wednesday, September 29, 2010

பதிவு சிறிசு தான்...ஆனா பலன் பெரிசு.

மேலுள்ள  படத்தில் உள்ள மேட்டர் தான் கீழுள்ள பதிவு
மேலும் இது மௌஸ் பற்றிய சில விளக்க படம்
சில வலைதளங்களை நாம் பார்வையிடும் போது எதாவது லிங்கில் கிளிக் செய்தால் அது புது விண்டோவில் திறக்கும் .அதற்கென சில Html மாற்றங்களை செய்யவேண்டி இருக்கும் .எனது வலைதளத்திலும் பழைய Template-ல் அந்த மாற்றங்களை செய்து இருந்தேன் .தற்போது உள்ள Template-ல்  அந்த மாற்றம் செய்யவில்லை.இதனால் நீங்கள் எதாவது லிங்கில் கிளிக் செய்தால் அது அதே  விண்டோவில் திறக்கும். இது சில  வாசகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.புது விண்டோவில் திறந்தால் வாசகர் அதை படித்து விட்டு நேரடியாக அதை Close செய்து விடலாம் .இதனால் ஒவ்வொரு முறையும் பழைய வலைபக்கம் மறுபடி மறுபடி திறக்கும் நேரம் மிச்சமாகிறது.
நிறைய பேர் வலைத்தளம்  இதே மாதிரி தான் அதே விண்டோவில் திறக்கும் .இதற்க்கு நாம் ஒரு கவலையும் பட தேவை இல்லை .நாம் வலைதளத்திலும் மற்றவர் வலைத்தளங்களையும் கூட எந்த Html மாற்றமும் செய்யமால் புது விண்டோவில் நாம் திறக்கலாம் .
எப்படி என இனி பார்ப்போம்.
வலைபக்கத்தில் எந்த ஒரு  லிங்கில் நீங்கள் கிளிக் செய்ய நினைத்தாலும் மௌஸின் இடது பட்டனை கிளிக் செய்வேங்க .அதற்கு பதில் நடுவில் இருக்கும் Scroll பட்டனை லிங்க் மீது வைத்து கிளிக் செய்து பாருங்க. வலைபக்கம் வேறு விண்டோவில் ஓபன் ஆகும்.

சும்மா தமாசுக்கு

Tuesday, September 28, 2010

இந்த பதிவு சத்தியமாக பதிவு திருடர்களுக்கு அல்ல!!!!

இந்த முறையை கல்வி அறிவுக்கு மட்டும் பயன்படுத்தவும் .
நான் போட்டோஷாப் கற்க ஆசைப்பட்டு பலதளங்களை படித்து கற்று வருகிறேன்.இதற்கு இணைய இணைப்பில்  இருந்து கொண்டே படித்து செய்ய வேண்டியுள்ளது .இதற்கு UnLimited இணைய  இணைப்பு அவசியம் .எனக்கு பரவாயில்லை .ஆனால் சில பேர் வரையறுக்கப்பட்ட லிமிட்டுக்குள் பயன்படுத்துவார்கள் .அவர்களுக்கு இது உதவும்.
முதலில் மரியாதைக்குரிய திரு கான் அவர்கள் என்னை மன்னிக்கவும்.ஏன் எனில் அவர்கள் வலைத்தளத்தில் படிக்கும் போது அந்த வலைபக்கத்தை சேமித்து பின் இணைய இணைப்பில்லாத நேரத்தில் அதை செய்து பார்க்க நினைத்தேன் . மௌசை ரைட் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு எச்சரிக்கை செய்தி வந்தது .
எப்படி சேமிப்பது என நினைத்த போது தான் இந்த முறையில் நான் சேமித்தேன் .நீங்களும் முயற்சித்து பாருங்கள் .
முதலில் நீங்கள் EPIC BROWSER தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின் அதை ஒபன் செய்து அதில் நீங்கள் சேமிக்க நினைத்த வலைதளத்தை டைப் செய்து திறந்து கொள்ளவும்.பின் ப்ரௌசெரின் இடது பக்கத்தில் வரிசையாக பல டூல்ஸ் காணப்படும் .அதில் Snippets எனும் டூல் கத்திரிகோல் வடிவில் காணப்படும் .அதன் மீது கிளிக் செய்ய கீழ்க்கண்டவாறு தெரியும் .
பின் நீங்கள் திறந்த பக்கத்தில் தெரியும் Text அல்லது பட வடிவில் உள்ள அனைத்தையும் ஜஸ்ட் அதன் மீது மௌசின் இடது பட்டனை அழுத்தியவாறு இடது பக்கத்தில் உள்ள காலி இடத்தில் இழுத்து கொண்டு விட்டு விடவும் .
கீழுள்ள படத்தை பார்க்கவும்
இவ்வாறு எல்லாத்தையும் ஒரு போல்டெர் உருவாக்கி அதில் சேமித்து கொள்ளவும் ,அல்லது இழுத்து கொண்டு விட்ட பைல் சேமித்த உடன் அதை இருமுறை கிளிக் செய்து ஓபன் செய்யவும் .பின் தோன்றும் படத்தில் மௌஸில் வலது கிளிக் செய்து அதில் Image save as கிளிக் செய்து தேவையான இடத்தில் சேமித்து கொள்ளவும்.
கீழுள்ள படத்தை பார்க்கவும் .
நான் சேமித்த படங்களை கீழே பாருங்கள்.
இனி நீங்கள் இணைய இணைப்பின்றி மெதுவாக பார்த்து படித்து செய்து பார்க்கலாம் .
மேலும் சில வழிமுறைகள்
1.திறந்த வலைபக்கத்தில் Ctrl +C அழுத்திவிட்டு பின் ஒரு வோர்ட் டாகுமென்ட் ஓபன் செய்து அதில் Ctrl+V அழுத்தி விட்டால் வலைபக்கம்  சேமிக்கப்படும்.பின் அதில் நீங்கள் தேவையற்ற பகுதிகளை எடிட் செய்து கொள்ளவும் .
2. Scroll Snipping டூல் மூலம் தேவையான இடங்களை ஸ்க்ரோல் செய்து சேமித்து கொள்ளலாம்.
பதிவர்கள் மீண்டும் ஒருமுறை  என்னை மன்னித்து கொள்ளவும். என்னதான் நாம சில தடுப்பு  முறைகளை கையாண்டாலும் திருடானாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

இது தமாசல்ல

Sunday, September 26, 2010

விளையாடலாம் வாங்க ...

1.கிச்சு கிச்சு மூட்ட  வாரீகளா?
இது ஒரு பொண்ணை கிச்சு கிச்சு மூட்டி பார்ப்பது ஆகும் .இந்த எக்ஸ்செல் பைலை தரவிறக்கம் செய்து ஓபன் செய்யவும் .பின் அதில் ஒரு தூரிகை
வரும் .அதை அந்த பெண்ணின் உடலில் தொட அந்த பெண் தொடும்  இடத்திற்கு தகுந்தவாறு   நெளிந்து வெட்க படுவது சிரிப்போ சிரிப்பு .அதுவும் மூக்கில் தொடும் போது ''ஆச்'' என்று தூம்முவது அழகோ அழகு .
தரவிறக்க முகவரி :-  கிளிக் செய்க
2.சிந்திக்க ஒரு விளையாட்டு
இது ஒரு கஷ்டமான விளையாட்டு .முதல் முறை விளையாடும் போது மட்டும்  தான்.ஒரு முறை விளையாடி விட்டால் '' ப்பூ'' இவ்வளதானா என நினைப்பேங்க.ஒண்ணுமில்லைங்க இந்த தவளைகளை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக மாற்றவும்.முடியாதவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும். வரிசையாக படத்துடன் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் .முயற்சிக்கவும், கஷ்டமில்லை .
மேலுள்ள படத்தில் உள்ளதை கீழுள்ள படத்தில்
உள்ளதை போல் கொண்டு வரவும் )
தரவிறக்க முகவரி :- கிளிக் செய்க

இது தமாசுக்கில்லை

Friday, September 17, 2010

உங்களுக்காக சில ILLUSION Pictures

இது எந்த திசையில் சுற்றுகிறது சொல்லுங்க .மஞ்சள் புள்ளி சுற்றும் திசையை பாருங்க பிறகு புரியும் .

இரண்டடி பின்னால் சென்று பாருங்க .ஜான் லெனின் தெரிவார்

சிகப்பு லைனை பாருங்க, வளைந்து நெளிந்து தெரியும் .ஆனா அது ஒரு நேர் கோடு. வட்டமானது அவ்வாறு தெரிய வைக்கிறது.

Thursday, September 16, 2010

ப்ளாக்கருக்கான பயனுள்ள டிப்ஸ்

நமது வலைத்தளத்தில் நமது இடுகையின் தலைப்புகள் நீண்டு கொண்டே செல்லும் .அதுவே பாதி பக்கத்தை அடைத்து கொள்ளும் . அதற்காக நமது வலைத்தளத்தில் மேலுள்ள  மாதிரி கிளிக் செய்தால் நீளுகின்ற  ஒரு இழு நீட்சியை உருவாக்கலாம் .
அது எப்படி என இனி பார்க்கலாம் .
உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Dashboard>>Layout>>Edit html செல்லவும் .
எப்போது எடிட் செய்தாலும் மறக்கமால்  இந்த செக் பாக்ஸில் டிக் மார்க் செய்து விடுங்கள் .
பின் Ctrl+F கீ  அழுத்தி திறக்கும் பாக்ஸில் கீழுள்ள  கோடை தேடவும்.
label1
கீழ்கண்ட  மாதிரி கோடிங் காட்டும் .
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>

<data:title/>

</b:if>

<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<data:label.name/>
</b:if>
(<data:label.count/>)

</b:loop>
</select>

<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>
இதனை எடுத்துவிட்டு கீழுள்ள கோடை பேஸ்ட் செய்து விடுங்கள்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>

<data:title/>

</b:if>

<select onchange='location=this.options[this.selectedIndex].value;' style='width:
250px'>
<option>
Labels</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'><data:label.name/>
(<data:label.count/>)
</option>
</b:loop>
</select>

<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>

இதில் Labels  bold பண்ணியிருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்தால் அது தலைப்பாக முதலில் தெரியும்.'width:250px'இதில் 250px என்பதை கூட்டி குறைப்பதன் மூலம் இந்த நீட்சியின் அகலத்தை கூட்டலாம்
குறைக்கலாம் .

சும்மா தமாசுக்கு... பணத்தை இப்பவே சேமிக்க பழகுடா செல்லம்