டேய் நான்தான் உன் சாப்பாட்டை சாப்பிட்டேன் என உன் அம்மா கிட்டே சொல்லதே .
மாணவன்:-
சொல்லமாட்டேன் சார் ,கேட்டால் நாய் சாப்பிட்டதாக சொல்லி விடுகிறேன்.
**********
ஒரு சர்தார் இந்தியா கொடி வாங்க துணிக்கடைக்கு சென்றார்.
துணி கடைக்காரர் சர்தார்ஜிக்கு இந்தியா கொடி காட்டினார்.அதன் பின் சர்தார் கேட்ட கேள்வியை பார்த்து கடைக்காரர் திகைத்து போனார்.
சர்தார் அப்படி என்ன கேட்டார் தெரியுமா?
இதுல இன்னும் வேற கலர் காட்டுங்க.
**********
ஒரு சர்தார் உலக உருண்டை(GLOBE) வாங்க புத்தக கடைக்கு சென்றார்.
கடைக்காரர் சிறிய உலக உருண்டையை காட்டினார்.அதற்க்கு சர்ஜி இந்த உலக உருண்டையில எல்லா மேப்பும் இருக்கா என கேட்டார்.கடைக்காரர் புரியாமால் கேட்க ,சர்தார் "இல்லை சர்ஜி இது சிறிசா இருக்கே ஒருவேளை இந்தியா மேப் மட்டும் இருக்கோ என நினைத்தேன்" என்றார் பார்க்கலாம்.கடைக்காரர் தலையில் அடித்த படி "சரி சர்தார்ஜி பெரிய உலக உருண்டை தர்றேன் அதில உலக மேப் பூரா இருக்கும்" என்றார்.சர்தார் மனதில் நல்லவேளை கேட்டேன் இல்லேன்னா கடைக்காரன் ஏமாத்தி இருப்பான் என நினைத்த படி நகர்ந்தார்.
**********
ஒரு சர்தார் பத்தாவது மாடியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் ஓடிவந்து சாண்டா உன் 5வயசு பையன் இறந்திட்டான் என கத்தினான்.சர்தார் அதிர்ச்சியில் ஐயோ என் பையன் இறந்திட்டனா என பத்தாவது மாடியில் இருந்து குதித்து விட்டார். விழும் போது சர்தார் மனதில் நினைத்தது.
எட்டாவது மாடி விழும் போது ஐயோ எனக்கு ஐந்து வயதில் மகன் இல்லையே.
ஆறவது மாடி விழும் போது ஐயோ எனக்கு மகனே இல்லையே.
நாலாவது மாடி விழும் போது ஐயோ எனக்கு கல்யாணமே ஆக வில்லையே.
இரண்டாவது மாடி விழும் போது ஐயோ என் பெயர் சாண்டா இல்லையே பாண்டாவாச்சே என நினைக்கும் முன் தரையில் மோதி இறந்து விட்டார்.
***********
ஒரு சர்தார் தேர்வு எழுத சென்றார்.அவர் இரண்டு தலைப்புகளை படித்து தேர்வெழுத வேண்டும்.ஓன்று நண்பனை பற்றி ,இன்னொன்று அப்பாவை பற்றி.ஆனால் சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும்.
தேர்வில் அப்பாவை பற்றி எழுத சொல்லி இருந்தது.சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும் தான்.தான் நண்பனை பற்றி படித்ததில் நண்பன் என்ற வார்த்தையை எடுத்து விட்டு அப்பா, என எழுதி விட்டார்.
அவர் எழுதிய கட்டுரை இதுதான்
I am a very fatherly person, I have lots of fathers, My best father is my neighbour. He ended the essay as, A father in need is a father in deed....!
**********
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.