தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, January 29, 2011

நகைச்சுவை விருந்து

நண்பர் அனுப்பிய மெயிலில் இருந்து இதை பதிவிடுகிறேன்.இந்த ஜோக்ஸ் வேறு தளத்தில் வந்திருந்தால் மன்னித்து விடவும்.படிக்காத நண்பர்களுக்காக.     
True GK Facts: ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை. ** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை. ** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. ** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
**********

பேச்சாளர் ஒருவர் பேச்சைத் தொடங்கினார். பேச விடாமல் கூட்டத்தில் பலர் அவர் பேச்சில் குறுக்கிட்டுப் பேசிக் கொண்டே இருந்தனர். 
பொறுமை இழந்த அவர் இங்கே முட்டாள்கள் பலர் இருக்கிறோம். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டாள் பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.
உடனே கூட்டத்திலிருந்து ஒரு குரல், பேச்சாளரைப் பேச விடுங்கள் என்று ஒலித்தது.
**********
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 ! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !! 
**********
அந்த அறுவைத் திரைப்படத்தை ஒருவர் தொடர்ந்து பத்து நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 
வியப்பு அடைந்த திரையரங்க மேலாளர், "சார்! உங்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கா? நாள் தோறும் வருகின்றீர்களே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தப் படம் சரியான போர்தான். 
இதில் ஒரு காட்சியில் கதாநாயகி குளிக்கறதுக்காக ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடறா. அப்ப திடீர்னு அந்த வழியா ட்ரெயின் வருது.  அது போனவுடன் பார்த்தால் அவள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளாவது அந்த ட்ரெயின் லேட்டா வராதா என்பதற்காகத்தான்    நாள்தோறும் வருகிறேன்" என்று விளக்கம் தந்தார் வந்தவர்.

**********
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது... கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
**********
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்! 1. சிரிப்பு 2. அழகு 3. நல்ல டைப் 4. கொழந்த மனசு... 5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
**********
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
**********
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
**********

கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டிலே வைக்கப்பட்டு இருந்தது. கடைக்கு வந்த சிறுவன், நாலணாவிற்குப் பல்லி மிட்டாய் என்று கேட்டான்.
கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் பாட்டிலைக் கவனமாகக் கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி மிட்டாய் தந்தார். மீண்டும் ஏணியில் ஏறிப் பழைய இடத்தில் பாட்டிலை வைத்தார்.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன், நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரர் வழக்கம் போல ஏறி அவனுக்கு மிட்டாய் கொடுத்து விட்டுப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்தார்.
மூன்றாவதாக வந்த பையன் நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி பாட்டிலைக் கீழே கொண்டு வந்தார். மீண்டும் பாட்டிலை மேலே வைக்கவில்லை.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான். அவனிடம் கடைக்காரர், உனக்கும் நாலணா பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.
இல்லை என்றான் சிறுவன். கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய்ப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்து விட்டுக் கீழே இறங்கினார்.
பிறகு பையனைப் பார்த்து, இப்ப உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்குப் பத்துப் பைசாவுக்குப் பல்லி மிட்டாய் வேண்டும் என்றான் அவன்.
**********
தத்துவம் 2010 "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"! "கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!! இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....சும்மா தமாசுங்க...உடனே கோவமா.
**********

புதுப் படம் வெளியாகி இருந்தது. திரை அரங்கம் முழுமையும் நிரம்பி இருந்தது. உயர் வகுப்பில் நாகரிகமான பெண்மணியின் பக்கத்தில் அழுக்கு உடை அணிந்த சிறுவன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.
அந்தப் பையன் ஓயாமல் இருமிக் கொண்டும் அருவருக்கத்தக்க முறையில் சளியைச் சுற்றுப்புறமெங்கும் சிந்திக் கொண்டும் இருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த பெண்மணி அவனைப் பார்த்து, நீ கைக்குட்டை வைத்து இருக்கிறாயா? என்று கேட்டாள்.
வைத்து இருக்கிறேன், ஆனால் முன்பின் அறிமுகம் இல்லாத யாருக்கும் நான் அதை இரவல் தருவது இல்லை, என்றான் அவன்
**********
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல? மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
**********


அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?" என்று கேள்வி கேட்கப் பட்டது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றனர்.
வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி என்னிடம் பேசினார்கள்" என்றான்.

**********

சும்மா தமாசுக்கு   

5 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா... ஹா... ஹா... அருமையாக எழுதியுள்ளீர்கள்! நீங்கள் சொன்னது போல இங்கு பிரான்சில் கொசுக்கள் இல்லைத்தான்! ஆனால் நிறைய, ரொம்பவே நிறைய பிகர்கள் இருக்கிறார்கள்! பேசாமல் இங்கேயே வந்துவிடுங்களேன்!



நண்பா முதல் முறையாக வந்துள்ளேன்! நானும் காமெடிகள் தான் எழுதுகிறேன்! வந்து பார்க்கவும்! இன்டிலியில் ஓட்டும் போட்டுள்ளேன்! உங்களை என்னுடன் நட்புக்கு அழைக்கிறேன்!

middleclassmadhavi said...

நன்றாக இருக்கின்றன நண்பரே! (நான் சிரிச்சுட்டேன்!)

PalaniWorld said...

@sakthistudycentre-கருன்
நன்றி தோழா.வாழ்க தமிழ்

PalaniWorld said...

@மாத்தி யோசி
நண்பா அது சும்மா ஜோக் தான்.கொசு தொல்லை இரண்டு அல்லது மூணு மணிநேரம்தான்.பிகர் இருந்தால் 24 மணி நேரம் தொல்லை நண்பா.அதுக்கு இந்திய கொசுவே மேல் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.நன்றி தோழா.வாழ்க தமிழ்.

PalaniWorld said...

@middleclassmadhavi
சிரிப்பு சத்தம் இங்க வரை கேட்டுச்சு.அதனால உங்களுக்கு ஊசி இல்லை.நன்றி தோழா.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.