தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, February 8, 2011

அங்காடித் தெரு

டேய் இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே வீட்டிலேயே அடைஞ்சு கிடப்பே.அவரு போய் சேர்ந்திட்டாரு.நீயும் இந்த குடும்பத்தில சேர்ந்து உழைத்தால்தான் நம்ம வயித்து  பசி முழுசா அடங்கும்.இந்த அம்மா ஒருத்தி சம்பளத்தில இரண்டு பேர் வயித்தை கழுவுவது ரொம்ப கஷ்டம்.பக்கத்து வீட்டு பர்வதம் கொடுத்த விலாசத்தில போய் பாரு உனக்கு வேலை உடனே கிடைக்கும்.சரிடா நான் பக்கத்து தெரு அம்புஜம் வீட்டில பத்து பாத்திரம் கழுவா போறேன்.நீ ஒரு பத்து மணிக்கு வேலைக்கு போ. அம்மா மதியம் சாப்பாடு செஞ்சு கொண்டுவாரேன்.
டேய் என் செல்லம்லா கொடியில கிடக்கிற எல்லா சேலை துணி மணிகளையும்  நல்ல மடிச்சு வைடா.அம்மாக்கு நேரமில்லைடா."போம்மா வீட்டில சும்மா இருக்கிறதால அதை மடி இதை மடின்னு என் உயிரை வாங்கிற போ உன் வேலையை பார்க்க" என எறிந்து விழுந்தான். சரிடா நான் பார்த்துக்கிறேன்.நீ மறக்காம வேலைக்கு போடா என சொல்லிவிட்டு அம்மா போய் விட்டாள். 
வேலை முடிந்து வந்த உடன் பர்வதத்திடம் என் மகன் வேலைக்கு போயிட்டானா என விசாரித்தாள்.அடப்பாவி மவ உண்மையிலேயே துணியை மடிக்கலையா சரி என சோத்தை சமைத்து பர்வதத்திடம் தன் மகன் வேலை பார்க்கும் இடத்தின் விலாசம் வாங்கி கொடுக்க சென்றாள். 
 மகன் வேலை பார்க்கும் இடத்தில் நுழைந்த உடன் அசந்து வியப்பில் அவளுக்கு சிரிப்பே வந்து விட்டது. 
டேய் என்ன மெதுவா வேலை செய்யற,விறு விறுன்னு முடிச்சிட்டு அடுத்த கஸ்டமரை சீக்கிரம் கவனி என முதலாளி விரட்டினார்.என்ன முதலாளி இவ்வளோ துணி எடுத்து போட்டும் பார்த்திட்டு பிடிக்கலைன்னு 
போற அந்த பொம்பளை என டேபிளின் முன் பரத்தி கிடந்த சேலை துணி மணிகளை ஒவ்வண்ணா மடிக்க தொடங்கினான்.டேய் அதாண்டா நம்ம தொழில்,சகிச்சிகிட்டு வேலை செய்தால் தான் நமக்கு தொழிலே நடக்கும்.அதெல்லாம் கண்டுக்கமா வேலைய பாரு என்றார்
முதலாளி.
அம்மாவை பார்த்த உடன் அவன் குனிஞ்ச தலை நிமிர வில்லை.   

சும்மா தமாசுக்கு 

2 comments:

மாணவன் said... 1

சிறுகதை அருமை....

பகிர்வுக்கு நன்றி நண்பரே

குறையொன்றுமில்லை. said... 2

நல்ல சிறுகதை.உங்களுக்கு எழுதவும் நன்றாக வருகிறது. வாழ்த்துக்கள்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.