தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Tuesday, November 2, 2010

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்

கடவுள் கிட்ட'எனக்கு ஒரு வேலை,பை நிறைய பணம்,பக்கத்துல நிறைய பிகரு எப்போதும்  இருக்கணும்' என்று வேண்டிகிட்டது தப்ப  போயிரிச்சு .
                     ஏன் , என்ன  ஆச்சு ?
இப்ப  நான்  "லேடீஸ்  ஸ்பெஷல் " பஸ்ல  கண்டக்டரா  இருக்கேன் .
                                  
                            ***********


உன் பையன் உன்னை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கான்பா.
அட நாதரி ,கொஞ்சம் மெதுவா பேசு.அது பக்கத்துக்கு வீட்டு பையன் .
                                    
                            ***********

எடிட்டர்: என்னங்க போஸ்ட் கவர் மேல கதை எழுதி அனுப்பி இருக்கீங்க?
எழுத்தாளர் : நீங்க தானே சொன்னீங்க "கவர் ஸ்டோரி" வேண்டும் என்று.
                                     
                                   ***********

கப்பலே கவிழ்ந்தாலும்,கன்னத்துல கை வைக்க கூடாது. 
ஏன் தெரியுமா?
கன்னத்துல கை வைச்சா நீச்சல் எப்படி அடிக்க முடியும்.

                                    
                                   ***********


"கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் ... வெள்ளமே வந்துருச்சு!" 

அப்புறம்,நிலைமையை எப்படி சமாளிச்சீங்க?

"டைவர்ஸ் பண்ணி வச்சோம் ..... வெள்ளம் வடிஞ்சிருச்சு!" 
அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம். 
                            
                            ***********


எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?  
                            
                            ***********


அம்மா அடித்ததற்கு ஏண்டா இப்படி அழுவற?
அப்பா உன்னை மாதிரி என்னால வலி தாங்க முடியல.

                                        
                            ***********



அப்பா நான் கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா என்ன பண்ணுவே?
        அப்படியே மயக்கம் போட்டு விழுந்திடுவேன்.
நீங்க மயக்கம் போட கூடாது என்பதற்கு தான் நான் 25 மார்க் வாங்கி இருக்கேன்.
                            
                             ***********

என் பையன் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.
      மேல என்ன படிக்க வைக்க போறீங்க?                                 செகண்ட் கிளாஸ் தான் .
                                          
                             ***********

பக்கத்து வீட்டு பொண்ணு எவ்வளுவு மார்க் வாங்கிருக்கு,அவள பார்த்தாவது நல்ல படி.
ஐயோ! அவள பார்த்து பார்த்து தான்பா நான் படிக்காமலே போயிட்டேன். 


சும்மா தமாசுக்கு 

Tuesday, February 9, 2010

Smile Please



எனக்கு வந்த மெயிலில் இருந்து 

மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்! ஏன் மன்னா? எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?"

நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்??? தெரியலயே... ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்??? தின்னுடும்... இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

சொந்த ஊர் எது??? அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா??? எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே..

நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க???? ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்... சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்??? வாயாலதான்....

கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி??? முதல்ல பாவம் பண்ணனும்...

சோம்பேறிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா?? போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துக்கவே இல்ல....
                                                                                                                                                                                       
கல்யாணத்துக்கு முந்தி நம்ம கேசவன் எப்பவும் சிரிப்பாவே இருப்பானே.....இப்ப எப்படி இருக்கான்?"
சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"
அப்படின்னா......?"
பெண்டாட்டியால தெருவுல சிரிப்பாச் சிரிக்கறான்!"
ரசிக்க 



படித்து சிரித்தவர்கள் 
web counter

Friday, January 1, 2010

இன்று புது வருசபிறப்பு நல்ல சிரிக்கலாம் வாங்க



கணவன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம்
பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
மனைவி: ஏன் இப்படி பேசறீங்க?
கணவன்:வேறஎப்படிஅந்தடாக்டரபழிவாங்கறது? ********************************************************
'டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யானம் 
நடக்கனும்னு கோயில்ல நேத்து பிரார்த்தனை 
பண்ணிகிட்டேன் பலிக்குமா?' 

'
அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!'
*****************************************************************
'நீ விரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா தம்பி' 

'
கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?' 
******************************************************************************
என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு 
நேத்துதான் தெரிஞ்சது ! 

'
தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?' 

'
கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் !'
***************************************************************************
கலா : நீ சொன்னயேன்னு அந்த டாக்டர்கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பார்த்தாருடி.

மாலா  : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.

கடன் கேட்க வரும்போது, எதுக்கு உங்க மனைவியையும் கூட்டிட்டு வந்தீங்க?

கஷ்டத்தோட வந்தா நீங்க உதவி செய்வீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க.
**************************************************
எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

எதுக்கு?

என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!
***********************************************
'என் கனவருக்கு நீங்க கொடுத்த வைட்டமின் மாத்திரையை 
சாப்பாட்டுக்கு முன்னால கொடுக்கிறதா.. பின்னால கொடுக்கிறதா?' 

'
அவர் கஷ்டப்பட்டு சமையல் செய்யற்துக்கு முன்னால!' 
டாக்டர்: உங்க தலைவலி கண்ணாடி போட்டா சரியாயிடும்.

கணவன்  : ஏற்கனவே என் தலைவலி (மனைவி) கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் இருக்கா டாக்டர். #@$%?

மனைவி : நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க.

கணவன் : எதுக்காக?

மனைவி : புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்
**************************************************************************
அன்பே, வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன் .. ..

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா.
மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க. 
ஊஞ்சலாடுவது என் பொழுது போக்கு என்கிறார் உங்கள் மனைவி, உங்களுக்கு என்ன
பொழுதுபோக்கு ?
ஹி... ஹி.... ஊஞ்சலாட்டுறதுங்க!
****************************************************
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப்
போறீங்களே.....? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?
அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!
*************************************************
காரோட என் மனைவியைக் காணோம்னு நான் புகார் கொடுத்திருந்தேனே, அதை நான்
வாபஸ் வாங்கிக்கிறேன் சார்!
ஏன் ?
கார் கிடைச்சிடுச்சு.
*************************************************************************************************
டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி வியாதி அதிகமா போச்சு ..

ஏன் .. .. ?

அவருதான் டாக்டர் சமையல் பண்றாரு ஆனா சாப்பிடும்போது சமையல் நல்லா இல்லைனு என்னைத் திட்றாரு
************************************************
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
*************************************************
சுரேஷ் : கறிவேப்பிலை, கொத்துமல்லி வாங்காம வீட்டுக்குப் போயிட்டேன்.

ரமேஷ் : அப்புறம்?

சுரேஷ் : என் மனைவி என்னைத் தாளிச்சுட்டா.
*************************************************
மனைவி : என்னங்க, பக்கத்து வீட்டு பொம்பளை, அவ புருஷனைக் கண்டபடி திட்டுறா! போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்.

கணவன் : நீ ஏன் அங்கே போறே?

மனைவி : உங்களைத் திட்டுறதுக்குப் புதுசா ஏதாவது வார்த்தை கிடைக்குதான்னு பார்க்கத்தான்.
************************************************
நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள்
மனைவி. கணவன் தொலைபேசுகிறான்.
கணவன் : டியர்இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?
மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்
கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ
ரசிக்க
படித்து சிரித்தவர்கள்
web counter