என்ன மாதவன் பைல் வேலை முடிஞ்சதா நாளை கடைசி நாள் என உயர் அதிகாரி கேட்க ஐயோ சார் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டேன் என மாதவன் கூறினான் .
சார் வேலை முடிஞ்சுது இதோ வீட்டில் போய் எடுத்து வந்து விடுகிறேன்.
பரவாயில்லை மாதவன் நாளை வேலைக்கு வரும்போது எடுத்துவாருங்கள்.
சார் பேங்கில பணம் போட போறேன்,அப்படியே எடுத்து வந்து விடுகிறேன் .
மாதவன் பேங்கில பணத்தை போட்டு விட்டு வீட்டுக்கு விரைந்தான் .வீட்டு வாசலில் மனைவியின் ஸ்கூட்டி வண்டி நின்றது .என்னடா இது, நம்ம கூடதான் அவள் ஆபிசுக்கு கிளம்பினாள்,பின்ன எப்படி வீட்டில் வண்டி நிக்குது.
அவள் போன் கூட பண்ணலியே உடம்பு எதும் சரியில்லியோ என பல சிந்தனையோடு வீட்டில் நுழைய முற்பட வீட்டினுள் இருவர் பேசும் குரல் கேட்டது .அதுவும் ஆடவன் குரல்.சரி எதும் உறவினன் யாரும் வந்திருப்பானோ, அப்படின்னா போனில் சொல்லி இருப்பாளே ,கதவு வேற உள்ளே தாழ்ப்பாள் போட்டுள்ளதே என குழப்பத்தோடு என்ன செய்வது என திகைத்து நின்றான் .
சரி மனதை திடப்படுத்தி கொண்டு என்ன என்று ஜன்னல் வழி பார்த்து விடுவோம், என பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதிய ஆடவனோடு நான் வாங்கிகொடுத்த கருப்பு கலர் நைட்டியை போட்டு கிட்டு அவனை கட்டியபடி "சே" என்ன கொடுமை அதன் என் வாயால எப்படி சொல்ல அவள் திரும்பி என்னை பார்க்கும் முன் இங்கிருந்து சென்றுவிடுவோம் என புறப்பட எத்தனித்தான் . அவனோ அவளிடம் டார்லிங் இதுக்காக எத்தனை தருணம் காத்திருந்தேன் தெரியுமா என கொஞ்சும் குரலில் கூற அவளும் ..ம்.. என்க
கொடுமை என தலையில் அடித்த படி மாதவன் பைலை எடுக்காமல் ஆபிஸ் சென்று விட்டான்.
ஆபீசில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.என்ன செய்வது எப்படி கேட்பது என மனதில் பல போராட்டங்கள்.வேலை செய்ய மனதே இல்லாமல் மனம் போன போக்கில் நடந்தான் .மாலை நான்கு மணிக்கு வீட்டிற்க்கு வந்தான்.
மனைவி குளித்து விட்டு தலையை துவட்டியபடி வந்தாள்.என்னங்க ஆள் டல்லா இருக்கீங்க .காப்பி எடுத்து வரவா.அப்பப்பா என்னா வெயிலுங்க ஆபிஸ் விட்டு வருதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு,சரி நீங்க கை கால் கழிவிட்டு வாங்க என கிச்சன் பக்கம் விரைந்தாள்.
என்னா பேசுவது எப்படி கேட்பது என பாத்ரூம் சென்றான் மாதவன். வெளியே அவன் காலையில் பார்த்த கறுப்பு நைட்டி துவைத்து கொடியில் தொங்கியது.அடிபாவி இப்படி நடிக்கிறாளே என வெம்பியபடி உள்ளே வந்தான்.
மனைவியை பார்த்து நான் ஒண்ணு கேட்கனும் கேட்கட்டுமா கண்ணு
என்றான் மாதவன்.
இல்லைங்க அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும் சொல்லுட்டுங்களா.
அதை வேற உன் வாயால கேட்கணுமா என மனதில் நினைத்தபடி சரி சொல்லு
ஏங்க என் ப்ரண்ட் கலா தெரியுமில்ல,
"ஆமா தெரியும் அதுக்கென்ன"
அவளும் அவள் கணவனும் என் ஆபிஸ் வந்திருந்தாங்க.அவள் கூட்டு குடும்பத்தில் வசிக்கிறாள்.அவள் கணவன் துபாய் போகிறாராம்.இரண்டு வருடம் கழித்து தான் வருவாராம்.மாலை நான்கு மணிக்கு தான் பிளைட்டாம். தன்னோட ஆசையை மறைமுகமாக சொன்னாள்.அதனால் நம்மவீட்டில் கொஞ்சம் நேரம் தங்கிட்டு அப்புறமா போறோம் என்றாள் அதான் நான் என் வண்டியை கொடுத்து நம்ம வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் .புதுசா கல்யாணம் ஆனவள் தானே அப்படி இப்படி இருப்பாங்க.அது கூட்டு குடும்பத்தில முடியாது .மாற்று துணியும் கொண்டுவர முடியாது .அவங்க வீட்டில் இது எதற்கு என கேட்பாங்க .அதனால நான் என் துணியை யூஸ் பண்ணிக்க சொன்னேன்.இந்த விஷயம் உங்களுக்கும் தெரியனுங்கிறதுக்காக தான் சொல்றேன்.எதையும் உங்ககிட்ட இதுவரை மூடி மறைத்ததில்லை.உங்ககிட்ட கேட்காம சரின்னுட்டேன் மன்னிச்சிடுங்க என அவள் பேசும் போதே என்னை யாரோ கன்னத்தில் பளார் என அறைந்த மாதிரி இருந்தது ."சே" நானெல்லாம் ஒரு மனுஷன்,கட்டிய மனைவியை இப்படி சந்தேக பட்டுவிட்டேனே என கூனிகுறுகி விட்டான் மாதவன்.என்னங்க நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனை ,சரி ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே என்னன்னு சொல்லுங்க.
"ம்" என்ன டார்லிங் என சுதாரித்து அதெல்லாம் எதுக்கு கண்ணு சாயிந்திரமா கோயிலுக்கு போலாமா என கேட்க வந்தேன் நீ என்னடான்னா ஊர்கதை பேசிட்டு இருக்கே என மழுப்பினான்.சந்தேக பட்ட பாவத்தை கோயிலில் போய்தானே தீர்க்கமுடியும் என மனதில் நினைத்தான் மாதவன்.
சும்மா தமாசுக்கு