தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, December 31, 2010

நான் 2010-ல் உலா வந்த சிறந்த 15 தளங்கள்

நாளை புது வருடம் பிறக்க இருக்கிறது.அதற்கு முன் இந்த வருடத்தில் நான் 2010-ல் பல தளங்களை வலம் வந்துள்ளேன்.அதில் நான் அடிக்கடி வலம் வரும் பதினைந்து தளங்களை வகைப்படுத்தி உள்ளேன் .நீங்களும் இந்த தளங்களை படித்து உங்கள் கருத்துக்களை அவர்கள் தளத்தில் பதியுங்கள்.  

மேலும் அலெக்ஸா ரேங்கில் யார் யார் எந்த இடம் என கீழுள்ள தள முகவரியில் பார்த்து அதையும் படித்து பயன் பெறுங்கள்.மறக்கமால் மேலுள்ள முகவரியில் உள்ள நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து விடுங்கள்.


பிடிக்காதது ப்ளாக் நண்பருக்குள் கருத்து வேறுபாடு சண்டைகள் 

Tuesday, December 28, 2010

உடல்நலத்தை கணிக்க ஹெல்த் கால்குலேட்டர்

உங்கள் உடல்நலத்தை கணிக்க நான் இங்கு சிறந்த மூன்று ஹெல்த் கால்குலேட்டர் அளித்துள்ளேன் அதில் நீங்கள் உங்கள் எடையை மட்டும் அளித்தால் போதுமானது.மற்றதை அது கணித்து கூறும்.
1 )  இதில் நீங்கள் உங்கள் உடல் எடைக்கு தகுந்தவாறு ஒருநாளைக்கு குறைந்தது  எத்தனை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என கூறும்.   
இது ஒரு எக்ஸ்செல் பைல் ஆகும்.
***பொதுவாக நிறைய தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு சிறந்தது***  
2 ) இதில் உங்கள் எடையை அளித்தால் உங்கள் உடல் என்ன கண்டிஷன் உள்ளது என கூறிவிடும்.

 3 ) இந்த CHART பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தில் என்ன என்ன பங்கு ஆற்றுகிறது என பட்டியல் இடுகிறது.இதுபடி சாப்பிட்டால் உடல் நலனை நன்கு பேணி பாதுகாக்கலாம்.
    
 இது அனைத்தையும் தரவிறக்க 




சும்மா தமாசுக்கு 

Saturday, December 18, 2010

டெஸ்க்டாப் வால்பேப்பரை விருப்பபடி உடனே மாற்ற

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள வால்பேப்பரை மாற்ற வேண்டுமானால் எதாவது படத்தை செலக்ட் செய்து set as desktop background என கொடுத்து மாற்ற வேண்டி இருக்கும்.ஆனால் இந்த மென்பொருளில் நீங்கள் வேண்டிய போல்டரை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து படங்களையும் கொடுத்து ஒவ்வொன்றாக மாற்றலாம்.
1) தரவிறக்கிய மென்பொருளை இயக்கிய பின் திறக்கும் விண்டோவில் browse
என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்வு செய்யவும்.
2) பின் நீங்கள் விருப்பபட்டால் Set new wallpaper on windows startup என்பதில் டிக் அடித்து கொள்ளவும்.பின் ஓகே கொடுத்து வெளியேறவும்  
3) பின் டெஸ்க்டாப்பில் உள்ள Change Now என்பதில் Double கிளிக் செய்தால் நீங்கள் செட் செய்த போல்டரில் உள்ள படங்களை தேவையான போது இந்த ஐகானை மட்டும் கிளிக் செய்து மாற்றலாம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை ஒரு போல்டரில் போட்டு இது மாதிரி மென்பொருளில் வால்பேப்பரை உடனுக்குடன் மாற்றலாம் . 
இதன் தரவிறக்க முகவரி :-Click Me

சும்மா தமாசுக்கு 

Thursday, December 16, 2010

சில விளம்பர காணொளிகள்

மிகப்பெரிய மனிதன் 

வல்லவனுக்கு வல்லவன் 

மிருகத்தை விட கொடியவன் மனிதன் 


ரொம்ப ஆட்டினால் இப்படிதான்

அட எங்க போனன்னே தெரியலியே 

சரியான குரங்குபயல் 

சும்மா தமாசுக்கு நீங்கள் ராவணன் ஆக இருக்க சம்மதிப்பேர்களா
இல்லையா,மறுபடி யோசித்து சொல்லுங்க 
*
*
*
*
*
*
*
அட,நல்ல மறுபடியும் யோசித்து சொல்லுங்க 
*
*
*
*
*
*
*
சரி,நீங்க மறுக்கும் போது நான் என்ன பண்ண. 
நான் சொன்னது இந்த ராவணன் மாதிரி 

Tuesday, December 14, 2010

முதன் முதலாக ATM மெசினை கண்டு பிடித்தவர்

ஜான் ஷெப்பர்ட் -பர்ரோன்( John Shepherd-Barron 23 June 1925 – 15 May 2010 )
இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.இவரது முழுப் பெயர் ஜான் அட்ரியன்  ஷெபர்ட் -பர்ரோன் (John Adrian Shepherd-Barron) ஆகும்.இவர் 23 june 1925-ல் ஷில்லாங்கில்(இந்தியா)பிறந்தவர்.இவர் 15 May 2010 (aged 84)Inverness, Scotland-ல் மறைந்தார். 

முதல் ATM, மற்றும் முதல்Transaction Barclays Bank மூலம் ஜூன் 27 th 1967-ல்
Church Street-ல் உள்ள Enfield என்ற ஊரில் தொடங்கப்பட்டது .இது இங்கிலாந்தில் உள்ளது.இது Reg Varney என்ற நடிகரால் திறக்கப்பட்டது.
 முதன் முதலில் பணம் எடுத்து தொடங்கி வைத்தது இந்த நடிகர்தான்.கீழுள்ள படத்தில் அவரை சுற்றி ரசிகர்கள் அந்த காட்சியை காணும் போது எடுத்த படம்.   


மேலுள்ள பதிவை எழுத தூண்டியது கீழுள்ள இந்த பதிவுதான்.மேலும் இவரை பற்றி முழு விவரம் அறிய கீழுள்ள தளத்தில் விஜயம் செய்யவும். 
http://kavithaiveedhi.blogspot.com/2010/12/atm.html
                                                     -நன்றி சௌந்தரபாண்டியன்

சும்மா தமாசுக்கு ATM இல்லேன்னா இப்படிதான் மனுஷன் குரங்கு மாதிரி எதையும் பிடுங்கி விடுவான். 

Sunday, December 12, 2010

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

"ஆசிரியர் முதலாம் வகுப்பு மாணவனிடம்" 
டேய் நான்தான்  உன் சாப்பாட்டை சாப்பிட்டேன் என உன் அம்மா கிட்டே சொல்லதே .
மாணவன்:-
சொல்லமாட்டேன் சார் ,கேட்டால் நாய் சாப்பிட்டதாக சொல்லி விடுகிறேன்.
**********
ஒரு சர்தார் இந்தியா கொடி வாங்க துணிக்கடைக்கு சென்றார். 
துணி கடைக்காரர் சர்தார்ஜிக்கு இந்தியா கொடி காட்டினார்.அதன் பின் சர்தார் கேட்ட கேள்வியை பார்த்து கடைக்காரர் திகைத்து போனார்.
சர்தார் அப்படி என்ன கேட்டார் தெரியுமா?
இதுல இன்னும் வேற கலர் காட்டுங்க.
**********
ஒரு சர்தார் உலக உருண்டை(GLOBE) வாங்க புத்தக கடைக்கு சென்றார்.
கடைக்காரர் சிறிய உலக உருண்டையை காட்டினார்.அதற்க்கு சர்ஜி இந்த உலக உருண்டையில எல்லா மேப்பும் இருக்கா என கேட்டார்.கடைக்காரர் புரியாமால் கேட்க ,சர்தார் "இல்லை சர்ஜி இது சிறிசா இருக்கே ஒருவேளை இந்தியா மேப் மட்டும் இருக்கோ என நினைத்தேன்" என்றார் பார்க்கலாம்.கடைக்காரர் தலையில் அடித்த படி "சரி சர்தார்ஜி பெரிய உலக உருண்டை தர்றேன் அதில உலக மேப் பூரா இருக்கும்" என்றார்.சர்தார் மனதில் நல்லவேளை கேட்டேன் இல்லேன்னா கடைக்காரன் ஏமாத்தி இருப்பான் என நினைத்த படி நகர்ந்தார்.
**********
 ஒரு சர்தார் பத்தாவது மாடியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் ஓடிவந்து சாண்டா உன் 5வயசு  பையன் இறந்திட்டான் என கத்தினான்.சர்தார் அதிர்ச்சியில் ஐயோ என் பையன் இறந்திட்டனா என பத்தாவது மாடியில் இருந்து குதித்து விட்டார். விழும் போது சர்தார் மனதில் நினைத்தது. 
எட்டாவது மாடி விழும் போது ஐயோ எனக்கு ஐந்து வயதில் மகன் இல்லையே. 
ஆறவது மாடி விழும் போது ஐயோ எனக்கு மகனே இல்லையே.
 நாலாவது  மாடி விழும் போது ஐயோ எனக்கு கல்யாணமே ஆக வில்லையே. 
இரண்டாவது  மாடி விழும் போது ஐயோ என் பெயர் சாண்டா இல்லையே பாண்டாவாச்சே என நினைக்கும் முன்  தரையில்  மோதி இறந்து விட்டார்.  
 ***********
 ஒரு சர்தார் தேர்வு எழுத சென்றார்.அவர் இரண்டு தலைப்புகளை படித்து தேர்வெழுத வேண்டும்.ஓன்று நண்பனை பற்றி ,இன்னொன்று அப்பாவை பற்றி.ஆனால் சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும். 
 தேர்வில் அப்பாவை பற்றி எழுத சொல்லி இருந்தது.சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும் தான்.தான் நண்பனை பற்றி படித்ததில் நண்பன் என்ற வார்த்தையை எடுத்து விட்டு அப்பா, என எழுதி விட்டார்.  
 அவர் எழுதிய கட்டுரை இதுதான் 
   I am a very fatherly person, I have lots of fathers, My best father is my neighbour. He ended the essay as, A father in need is a father in deed....!
**********


Saturday, December 11, 2010

உங்கள் மொபைலுக்கான சிறந்த ப்ரௌசர்

இந்த ப்ரௌசர் முதன் முதலில் என் நண்பனின் மொபைலில் பார்த்து அதன் செயல் திறனை பார்த்து அசந்து போனேன்.எத்தனையோ ப்ரௌசர் பயன்படுத்தி இருந்தாலும் இந்த ப்ரௌசர் அளவுக்கு வேகம் எதிலும் இல்லை. அதன் பெயர் ஒபேரா 8.65 .இதற்க்கு இணை இப்போதும் ஏதும் இல்லை.நான்கு வருடங்களுக்கு முன் இதை என் மொபைலில் பதிய நானூறு ரூபாய் கொடுத்து தில்லி கரோல்பாக் மொபைல் மார்க்கெட் சென்று இந்த மென்பொருளை வாங்கி வந்தேன்.அங்கு மொபைலில் மென்பொருளை பதிய இவ்வளவு பணம் என வாங்குவார்கள்.எனக்கு எங்கு தேடியும் இந்த மென்பொருள் crack key உடன் கிடைக்கவில்லை.ஆனால் என்ன துரதிர்ஷ்டம் ஒரு மாதத்திற்குள் எல்லா மென்பொருள் தளங்களிலும் crack key  உடன் அந்த மென்பொருள் கிடைத்து விட்டது.       
ஆனால் என் நண்பர்கள் இடை இடையே இந்த மென்பொருளை பதிய என்னிடம் கேட்பார்கள்.தற்சமயம் என் நண்பர் ஒருவர் இதை பற்றி கேட்க ஏன் நாம் இதை ப்ளாக்கில் போட கூடாது என யோசித்து இதை உங்களுக்கு அளிக்கிறேன்.பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கே இதன் அருமை புரியும்.  
 இது மற்ற ப்ரௌசரை காட்டிலும் வேகமான தரவிறக்கத்தை மேற்கொள்ளும்.தரவிறக்கம் பாதியில் நின்று போனாலும் விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடரும்.நேரடியாக இமேஜ்களை சேமிக்கலாம். அதிக கொள்ளளவு கொண்ட பைல்களையும் இது சாதாரணமாக திறக்கிறது. 
 இதன் தரவிறக்க முகவரி :-
           1) Click Me for s60 mobile
               2) Click Me key generate
           3) Click Me for windows mobile
 For s60:- 
Key Generate செய்ய Generate key கிளிக் செய்து அதில் உங்கள் மொபைலின் IMEI நம்பரை எழுதவும்.பின் தோன்றும் நம்பரில் முதல் பத்து நம்பரை சீரியல் கீயாக எடுத்து கொண்டு மென்பொருளை ஓபன் செய்து Register என்பதை கிளிக் செய்து அதில் அந்த பத்து நம்பரை கொடுக்கவும்.இப்போது உங்கள் ஒபேரா  Register ஆகிவிடும்.
 இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது உங்கள் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமை மறக்கமால் disable செய்து கொள்ளவும் .ஏனெனில் patch &crack பைல்களை ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம் தடுத்து நிறுத்தும் ,அல்லது அந்த பைல்களை அழித்து விடும்.இன்ஸ்டால் செய்து முடித்த உடன் Enable செய்து  கொள்ளவும்.  

சும்மா தமாசுக்கு 

Friday, December 10, 2010

எயிட்ஸ்க்கு மருந்து

"சக்சஸ் சக்சஸ் "
                                                என ராகவன் கத்தினான் .
ராகவன் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளன்.ஆனால் இந்திய மருத்துவ கழகம் அவனது கண்டுபிடிப்பில் குறைகண்டு கூறியதால் அதைவிட சிறந்த மருந்தை கண்டுபிடிக்க இரவு பகலாக உழைத்தான்.ஐந்து வருட உழைப்புக்கு பின் எயிட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்ததால் இந்த வெற்றி சந்தோசம்.  
ராகவன் இந்த மருந்தை கண்டுபிடித்து முடிக்கும் போது மணி பன்னிரண்டு.முடித்த சந்தோஷத்தில் ராகவன் வாட்ச்மேன் சுந்தரத்தை கட்டித்தழுவினார்.சுந்தரம் இது என் வாழ் நாள் கனவிது,என் இந்திய தேசத்திற்காக எதாவது நல்லது செய்ய வேண்டும், இந்த மருந்து முற்றிலும் எயிட்ஸ்சை குணப்படுத்தி விடும் என குதூகலத்தில் கூறினார் .
 ஓகே சுந்தரம் இந்த மெடிக்கல் லேப்பை பார்த்துகொள்.நாளை இந்தியன் மெடிக்கல் அஸோசீசன் இடம் நிரூபித்து சர்டிபிகேட் பெற வேண்டும்.எல்லா கண்டுபிடிப்பும் இந்த லேப்பில் உள்ளது பத்திரமாக பார்த்துகொள் என ராகவன் சொல்லிவிட்டு காரில் சென்றுவிட்டார். 
சென்று ஒருமணி நேரம் கூட ஆக வில்லை.ராகவனுக்கு போன் வந்தது.  "ராகவன் சார் லேப் தீப்பிடித்து எரிகிறது  உடனே வாங்க" என சுந்தரம் போன் செய்தான்.
ராகவன் அலறி அடித்து கொண்டு லேப் நோக்கி விரைந்தார்.சுந்தரம் என்னாச்சு,  எப்படியாச்சு என அழுதார்.ஐயோ என் கனவெல்லாம் வீணாப்போச்சே என கதறினார்.சார் கதவு பூட்டியிருக்கு,உள்ளே யாரும் போன தடயம் ஏதுமில்லை.மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
ஏதோ சார்ஜர் மூலம் மொபைல்  ஓவர் சார்ஜாகி வெடித்து இருப்பதாக தெரிகிறது என  பயர் ஆபிசர் கூறினார் . .ஐயோ நான் தான் மறந்து போய் அப்படியே மொபைலை சார்ஜரில் விட்டு விட்டேன் என புலம்பினார்.அதிர்ச்சியில் அவருக்கு மயக்கமே வந்து விட்டது.     
 எல்லாம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.சுந்தரம் வீட்டில் உட்கார்ந்து அழுதான்.அவள் மனைவி அவனை சமாதனப் படுத்தினாள்.
இதுக்கு நாம என்ன பண்ண முடியுங்க,நம்ம கைல என்ன இருக்கு என கூறினாள்.அதல்ல பர்வதம் லேப் தானா தீப்பிடிக்களை நான் தான் தீ வைத்தேன் .என்னங்க சொல்றேங்க என பர்வதம் அதிர்ச்சியில் கேட்டாள்.ஆமாம், பர்வதம் நான் தான் வைத்தேன்.
ராகவன் மருந்து கண்டு பிடித்தது நாட்டுக்கு நல்லதல்ல, ஏங்க பல பேர் உயிர் பிழைக்க அந்த மருந்து உதவும் இல்லையா,அடியே அது இல்லை மருந்து இல்லாதுனால் தான் நம்ம கலாசாரம் இன்னும் கொஞ்சம் கெடமால் உள்ளது.அதுக்கு மருந்து ஏதும் வந்து விட்டால் அவ்வளுவுதான் ஓபன் ஆக தப்பு பண்ண ஆரம்பித்து விடுவாங்க.அதான் மருந்து இருக்குல்லா பின்ன என்ன கவலை என தப்பு அதிகரித்து விடும்.இப்ப இருக்க பயமும்  போய் விடும்.என்ன பர்வதம் நான் செய்தது  தப்பா.
இல்லைங்க நீங்க செய்தது எந்த தப்பும் இல்லைங்க என தன் கணவனை நினைத்து பெருமிதம் அடைந்தாள்.ராகவன் நாட்டிற்க்கு செய்ய நினைத்த நல்லதை விட நீங்க செய்த நல்ல காரியம் சிறந்ததுங்க,அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சந்திப்போங்க என தைரியம் ஊட்டினாள்.           

சும்மா தமாசுக்கு...உங்கள் சாய்ஸ் தீப்பிடித்தால் எந்த கதவு வழி செல்வதென்று

Thursday, December 9, 2010

இணையத்திலிருந்து பைல்களை வேகமாக தரவிறக்க

இணையத்திலிருந்து பைல்களை வேகமாக தரவிறக்க இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ஒரு சிறந்த மென்பொருள் ஆகும்.
நீங்கள் சாதாரணமாக எந்த ஒரு பைலையும் நேரடியாக தரவிறக்கினால் நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் .உங்கள் இணைய இணைப்பு பிராட்பேண்ட் இருந்தால் ஒழிய வேகமாக தரவிறக்க முடியாது . பிராட்பேண்ட் இணைய இணைப்பு உள்ள போதும் இந்த மென்பொருளில் பணி புரிந்தால் மிக வேகமாக தரவிறக்கலாம்.
 இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது உங்கள் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமை மறக்கமால் disable செய்து கொள்ளவும் .ஏனெனில் patch &crack பைல்களை ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம் தடுத்து நிறுத்தும் ,அல்லது அந்த பைல்களை அழித்து விடும்.இன்ஸ்டால் செய்து முடித்த உடன் Enable செய்து  கொள்ளவும். நீங்கள் வலைத்தளத்தில் எதாவது லிங்கை கிளிக் செய்த உடனே அது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்-ரின் கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளும்.
அல்லது நீங்களாகவே லிங்கில் ரைட் கிளிக் செய்து Copy link address-ல் கிளிக் செய்து Add URL ல் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் விண்டோவில் அட்ரஸ் தானாகவே அமர்ந்து இருக்கும் பின் ஓகே கொடுத்து முன்னேறவும்.
பின் தோன்றும் விண்டோவில் பைலின் வகை மற்றும் சேமிக்கவேண்டிய இடத்தை தேர்வு செய்து Start Download செய்யவும். 
   இதன் தரவிறக்க முகவரி :-  
  1)Click Me 5.17 version
  2) Click Me 5.18 version
இந்த பைலை இன்ஸ்டால் செய்த பின் மறந்து போய் கூட அப்டேட் செய்து விடதேர்கள் ,பின் patch பைல் வேலை செய்யமால் உங்கள் trail version Time முடிந்து விடும்.  

Follow the steps:
1. Download and Install IDM
2. After Installing close IDM icon in system tray
3. Make sure so press ctrl+alt+delete windows task manager appears,now select processes tab if dap is still running close it,press OK.
4. In the downloaded file above has a folder “Crack” Copy the file and paste it on the installed location Eg. c:\Program Files\DAP\
5. Check IDM it should become premium one!


சிந்திக்க...

Wednesday, December 8, 2010

சிம்பிளான பிளாஷ் கேம்ஸ்

உங்கள் வீட்டு குழந்தைகள் கணினியில் விளையாட சிம்பிளான பிளாஷ் கேம்ஸ் இது ஆகும். இதை தரவிறக்கி நேரடியாக இயக்கி விளையாடலாம்.
1)  ஹெலிகாப்டர் கொண்டு தாக்கி விளையாடும் பிளாஷ் கேம்.
இதை தரவிறக்க :- Click Me

2) இரண்டு பேர் மோதிக்கொள்ளும் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

3) தூப்பாக்கி கொண்டு சுட்டு பிடிக்கும் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

4) ஹெலிகாப்டர் கொண்டு தாக்கி விளையாடும் பிளாஷ் கேம்.
இதை தரவிறக்க :- Click Me

5) ஒரே கலர் பந்து சூட்டிங் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

சிந்திக்க